எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் சாலைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார்
- எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் நான்கு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்ட 24 பாலங்கள் & மூன்று சாலைகளை, டிசம்பர் 28, 2021 அன்று புதுடில்லியிலிருந்து பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- இந்த 24 பாலங்களில் 9 பாலங்கள் ஜம்மு & காஷ்மீரிலும், லடாக் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா 5 பாலங்கள், உத்தராகண்டில் 3, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 1 பாலம் கட்டப்பட்டுள்ளது. மூன்று சாலைகளில் இரண்டு லடாக்கிலும் மற்றொன்று மேற்கு வங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
- சிக்கிமின் டோகலாவில் 11,000 அடி உயரத்தில் 140 அடி இரட்டை பாதை வசதிக் கொண்ட இந்தியாவின் கிளாஸ் 70 வகை முதலாவது உள்நாட்டு தொழில்நுட்பத்திலான பாலம் திறந்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இதேபோன்று லடாக்கின் உம்லிங் கனவாய் பகுதியில் 19,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
- நிகழ்ச்சியில் பேசிய திரு.ராஜ்நாத்சிங், இந்தப் பாலங்கள் மற்றும் சாலைகள் திறக்கப்பட்டிருப்பது, எல்லைப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதென்ற எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறினார்.
ரிஷப் பண்ட் & முகமது ஷமி சாதனை
- இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 101 முறை (93 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 26 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
- அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 9896 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர்.
- இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய பவுலர்களான அஷ்வின் (10248 பந்துகள்), கபில் தேவ் (11066 பந்துகள்) மற்றும் ஜடேஜா (11989 பந்துகள்) ஆகியோரை முந்தியுள்ளார் ஷமி.
'தி இந்து' பத்திரிகையாளருக்கு கோயங்கா விருது
- 'தி இந்து' பத்திரிகையின் மேற்கு வங்க மாநிலப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிபவர் சிவ் சஹாய் சிங். இவர் 2019-ல் ஜார்க்கண்ட் மாநில அரசின் டிஜிட்டல் பொது விநியோக முறைத் திட்டத்தால் அடித்தட்டு மக்கள் ரேஷன் பொருட்களை இழந்தது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
- ஆதார் அட்டைகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க முடியாததாலும், ஆதார் அட்டை இல்லாதவர்களும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டதை இந்த கட்டுரை விளக்கியது.
- பெரும்பாலும் பழங்குடி இனத்தவர் இந்த புதிய டிஜிட்டல்மயமாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்டதை கட்டுரை எடுத்துக்காட்டியிருந்தது.
- இந்த கட்டுரைக்காக சிவ்சஹாய் சிங், ராம்நாத் கோயங்காவிருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். `கண்ணுக்கு தெரியாத இந்தியாவை வெளிக்கொணர்தல்' என்ற பிரிவின் கீழ் விருதுக்கு சிவ் சஹாய் சிங் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையிலான 9 கி.மீ. தூர பிரிவு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் வரை பயணம் மேற்கொண்டார். கான்பூரில் மொத்த மெட்ரோ ரயில் தூரம் 32 கி.மீ ஆகும். இத்திட்டம் மொத்தம் ரூ.11,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
தேசிய அளவிலான மீன் பிடிப்பில் தமிழகம் முதலிடம்
- தேசிய அளவிலான மீன்பிடியில் கடந்தாண்டு குஜராத் முதலிடத்தில் இருந்தது. ஒன்றிய கடல் மீன் ஆராய்ச்சி கூட கணக்கெடுப்பின்படி, நடப்பாண்டு மீன் பிடிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழக கடற்கரையின் நீளம் 1,071 கி.மீ. இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையின் நீளம் 237 கி.மீ. மாவட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5,700க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
- கடந்த 2018ல் தமிழகத்தில் 7.18 லட்சம் டன், 2019ல் 7.75 லட்சம் டன் மீன்கள் பிடிபட்டன. 2020-21ல் 10 லட்சம் டன் மீன்கள் பிடித்து குஜராத் மாநிலத்தை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 2.64 லட்சம் டன் மீன்கள் பிடித்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.
பாபே, அலெக்ஸியாவுக்கு உலக கால்பந்து விருது
- உலக கால்பந்து விருதுகளின் 12-ஆவது எடிஷனில், 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக பிரான்ஸின் கிலியன் பாபே, சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் தோவாகினா்.
- துபையில் உள்ள புா்ஜ் கலிஃபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆண்டின் சிறந்த கோல் ஸ்கோரா் மற்றும் ரசிகா்கள் வரவேற்பை பெற்ற வீரருக்கான மாரடோனா விருதை போலந்தின் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி பெற்றாா். அதிக கோலடித்த வீரருக்கான விருது போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.
- ஆடவா் பிரிவில் சிறந்த கிளப்பாக செல்சியும், மகளிா் பிரிவில் சிறந்த கிளப்பாக பாா்சிலோனாவும் தோவாகின. சிறந்த தேசிய அணியாக இத்தாலி விருது பெற்றது.
- சிறந்த தடுப்பாட்ட வீரராக லியோனாா்டோ போனுச்சி (இத்தாலி), சிறந்த கோல்கீப்பராக கியான்லுகி டோனாருமா (இத்தாலி), சிறந்த பயிற்சியாளராக ராபா்டோ மான்சினி (இத்தாலி) தோவாகினா்.
இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
- பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் (Molnupiravir) எனும் மருந்துக்கும் அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.