TAMIL
- 2021ம் ஆண்டு மனித குலத்திற்கு இதுவரை கண்டிராத சவால்களை ஏற்படுத்தியது. இந்த சவால்களை எதிர்கொள்வதில் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையும், அதன் தன்னாட்சி நிறுவனங்களும் இந்தியாவிற்கு பெரிதும் உதவிகரமாக இருந்தன.
- கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில், அறிவியல் தொழில்நுட்பத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.
- சுகாதார சேவை, எரிசக்தி சிக்கனம், பருவநிலை மாற்றம், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்த, அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்கின
1. சர்வேதேச அறிவியல் தொழில்நுட்ப தரவரிசை குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம்
- உலக அளவில் முதல் 50 புதுமையான பொருளாதாரத்தை பின்பற்றும் நாடுகளில் இந்தியா 46 இடத்திற்கு முன்னேறியுள்ளது.அறிவியல் வெளியீடுகளில் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதுடன், பி எச் டி ஆராய்ச்சி படிப்பை பயில்வோர் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் கீழ், ஐ ஐ டி ஹைதராபாத், தேசிய வேளாண்-உணவு உயிரிதொழில்நுட்ப நிறுவனம் மொஹாலி, அதிநவீன கம்ப்யூட்டர் உருவாக்க மையம் பெங்களூரு மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய 4 இடங்களில் 4 புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட துடிப்புமிக்க ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் 75 நிறுவனங்களில் இதுபோன்ற உயர்செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டர் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவியல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தக்கூடிய சினர்ஜிஸ்டிக் பயிற்சித் திட்டம் என்ற பெயரிலான புதிய திட்டம், மனிதவளங்களை மேம்படுத்தி, திறன் மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். நாட்டில் சிறப்பாக செயல்படும் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அறிவியல்-தொழில்நுட்பத் துறையின், பெண் அறிவியல் திட்டம், மகளிர் முதுநிலைப் பட்டப்படிப்புக் கல்லூரிகளுக்கு உறுதுணை புரிவதற்கான புதிய முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
- இதன்படி, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, பெண் ஆராய்ச்சியாளர்கள், கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- சமுதாயத்திற்கு அதிகாரமளிப்பதற்கான சான்றாகக் கருதப்படும் Tech@75திட்டம், பழங்குடியினர் கவுரவ தினத்தன்று தொடங்கப்பட்டது. ‘விஞ்ஞான் உத்சவ்‘ எனப்படும் ஓராண்டுகாலத் திட்டம், ஆகஸ்ட், 2022வரை ஒவ்வொரு மாதமும், ஒரு தலைப்பில் கொண்டாடப்படும்.
- காஷ்மீர் மட்டுமே இதுவரை, இந்தியாவின் குங்குமப்பூ கின்னமாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு மாநிலங்களிலும் இதனை சாகுபடி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தெற்கு சிக்கிமின் யாங்காங் கிராமத்தில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் மேகாலயாவின் பாராபானி பகுதிகளிலும் இந்த சாகுபடி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- இந்திய ஆராய்ச்சியாளர்கள் விரைவில், தொழில்நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை விரைவில் பெற உள்ளனர்.
- இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT) சென்சார் போர்டுகள் வாயிலாக, இந்தியா சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, சென்னை ஐஐடி-யின் பர்வர்தக் தொழில்நுட்ப அறக்கசட்டளையும் சோனி இநிதியா மென்பொருள் மையமும் இணைந்து சம்வேதன்-2021 என்ற ஹேக்கத்தான் போட்டியை நடத்தின.
- The year 2021 will bring unprecedented challenges to mankind. The Central Department of Science and Technology and its autonomous bodies have been of great help to India in meeting these challenges.
- Based on the lesson that Covid 19 learned during the Great Depression, the Department of Science and Technology implemented various projects.
- Scientific and technological organizations have come up with various solutions to bring about creative change in various sectors including healthcare, energy saving, climate change and food production.
1. India continues to advance in the International Science and Technology Ranking Index
- India ranks 46th out of 50 countries in the world for adopting innovative economics.
- Under the National Supercomputer Movement, 4 new supercomputers have been installed at IIT Hyderabad, National Institute of Agro-Food Biotechnology, Mohali, Advanced Computer Development Center, Bangalore and IIT Kanpur.
- It is planned to set up such high-performance computer facilities in more than a thousand vibrant researchers, academics and 75 institutions.
- Recently announced, a new program called Synergistic Training Program that utilizes science and technology structures will help improve human resources and capacity building. Steps have also been taken to help strengthen the research and development framework of the best performing universities in the country.
- The Department of Science and Technology, Women's Science Program, has launched new initiatives to support women's postgraduate colleges.
- Accordingly, work has been initiated between India and Germany to conduct joint research by female researchers.
- The Tech @ 75 project, which is seen as a testament to empowering the community, was launched on Tribal Honor Day. The one-year program, called the ‘Science Festival’, will be celebrated every month until August, 2022, on one theme.
- While Kashmir alone has so far been considered India's saffron genus, efforts are now being made to cultivate it in the northeastern states as well.
- Saffron cultivation has been successfully carried out for the first time in the village of Yangkong in South Sikkim. Currently, the cultivation is being expanded to Tawang in Arunachal Pradesh and Barabani in Meghalaya.
- Indian researchers will soon have opportunities to pursue industry-based research.
- Through the Internet of Things (IoT) sensor boards, Samvedan-2021, a hackathon competition was held in collaboration with IIT Chennai's Business Technology Foundation and Sony India Software Center to address issues related to India.