Type Here to Get Search Results !

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான 'அடல்' தரவரிசை பட்டியல் 2021 / ATAL RANKING OF BEST EDUCATIONAL INSTITUTIONS 2021

TAMIL
  • உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு திறன், தொழில்முனைவோரை உருவாக்கும் திறன், ஸ்டார்ட் அப் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, 'புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை' என்ற திட்டத்தை மத்தியகல்வித் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மூலம் செயல்படுத்தி வருகிறது.
  • கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை, புதுமை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கட்டமைப்பு வசதி போன்ற அம்சங்கள் தரவரிசைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • 2021-ம் ஆண்டுக்கான தரவரிசைக்கு 1,438 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. வழக்கமாக, தொழில்நுட்பம் சார்ந்த கல்விநிறுவனங்களுக்கு மட்டுமே 5 பிரிவாக தரவரிசை வெளியிடப்படும். 
  • ஆனால், நடப்பாண்டு முதல் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் 2 பிரிவாக இணைக்கப்பட்டு, மொத்தம் 7 பிரிவுகளாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் வெளியிட்டார்.
  • அதன்படி, சிறந்த மத்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை மும்பை ஐஐடி, 3-வது இடத்தை டெல்லி ஐஐடி பிடித்தன.
  • மாநில பல்கலைக்கழக பிரிவில் பஞ்சாப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலை. 5-வது இடத்தையும், சேலம் பெரியார்பல்கலைக்கழகம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பிரிவில் 2-வது இடத்தில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியும், 4-வது இடத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியும் உள்ளன. 
  • தனியார் நிகர்நிலை பல்கலை. பிரிவில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (4-வது இடம்), கலசலிங்கம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் (6), வேலூர் விஐடி (8) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • தனியார் கல்லூரிப் பிரிவில் ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி2-வது இடத்தையும், ஸ்ரீகிருஷ்ணாபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 
  • அதேபோல, தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களின் பிரிவில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 4-வது இடத்திலும், திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி 5-வது இடத்திலும் உள்ளன.
ENGLISH
  • The Department of Secondary Education, through the All India Council for Technical Education, is implementing the 'Atal Ranking for Innovative Institutions Achieving Innovation' based on the innovative skills of students and teachers in higher education institutions, the ability to create entrepreneurs and start-ups.
  • Features such as the number of students who have registered for a patent for an invention and the specialized structure to promote innovation entrepreneurship are set in the rankings. 1,438 educational institutions had applied for the 2021 ranking. Usually, the rankings are published in 5 categories only for technology based academies.
  • However, from the current year, non-technical educational institutions were merged into 2 sections and a ranking list was prepared for a total of 7 sections. The list was released by Subhash Sarkar, Internet Minister for Central Education.
  • Accordingly, Chennai IIT has topped the list of best central educational institutions for the 3rd consecutive time. Mumbai IIT came in 2nd and Delhi IIT came in 3rd. Punjab University topped the state university category, followed by Avinashilingam University in Coimbatore. Salem Periyar University is ranked 5th and 10th.
  • PSG College of Technology is ranked 2nd and Thiagarajar College of Engineering is ranked 4th in the category of Government and Government Aided Colleges. Private Direct University. In the section SRM. Institute of Science and Technology (4th place), Kalasalingam Research Education Institute (6th) and Vellore VIT (8th).
  • RMK in Private College College of Engineering is ranked 2nd and Srikrishna College of Engineering and Technology is ranked 3rd. Similarly, PSG College of Arts and Sciences is ranked 4th and Trichy Holy Cross College is ranked 5th in the category of non-technical educational institutions.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel