அழைப்பு, இணைய பயன்பாடு தரவுகள் 2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை முன்பு ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
- இதை மாற்றி தற்போது குறைந்தது 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. இதற்காக வழங்கப்பட்ட உரிமத்தில் கடந்த20-ம் தேதி திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக உரிமம் பெற்றநிறுவனங்கள் அனைத்து வர்த்தகஅழைப்புகள், அழைப்பு தொடர்பான விரிவான விவரங்களை குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது சேமித்து வைத்திருக்க வேண்டும்.
- அதேபோல் சந்தாதாரர்கள் பயன்படுத்திய இணையதளங்கள், லாக்-இன், லாக்-அவுட் செய்தவிவரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
MIG-21 இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் விபத்து
- ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் - 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.
- அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார்.
- இந்திய ராணுவத்தில் கடந்த 1963ம் ஆண்டு மிக் ரக விமானங்கள் இணைக்கப்பட்டன. 874 மிக் ரக விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
- இதில், 400 விமானங்கள் விபத்தை சந்தித்துள்ளன. இதில், 200 பைலட்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 5 மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி 3 பைலட்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐ.என்.எஸ்., குக்ரி கப்பலுக்கு ஓய்வு
- 'மஸகான் டோக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம் தயாரித்த ஐ.என்.எஸ். குக்ரி போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் 1989 ஆக., 23ல் சேர்க்கப்பட்டது.
- இந்தக் கப்பல் இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 897 கடல் மைல் பயணம் செய்துள்ளது. இந்தக் கப்பலில் 28 தளபதிகள் பணிபுரிந்துள்ளனர். இதன் 32 ஆண்டுகால சேவைக்கு பின் ஓய்வு கொடுக்கும் நிகழ்ச்சி ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
- இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., குக்ரி போர்க்கப்பலுக்கு 32 ஆண்டு சேவைக்கு பின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு "அம்பேத்கர் சுடர்" விருது
- சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதுடன் சேர்தது இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கர் அவர் கையால் எழுதிய இந்திய அரசியல் சாசனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடாந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
- மேலும் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர் விருதும், பி.வி.காரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், காயிதே மில்லத் பிறை விருது பஷீர் அகமதுவுக்கும் ராமசாமி என்பவருக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சக்தி குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
- இந்த மசோதாவின் மூலம் பலாத்காரத்தில் ஒருவர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். விரைவாக வழக்கை விசாரிக்கவும் இந்த மசோதாவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- உத்தரப் பிரதேசத்தில் சுகாதார வசதிகளை ஊக்குவிக்க பல முக்கிய நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்துக்கு மொத்தம் ரூ.553.36 கோடியை விடுவித்துள்ளது.
- இந்த முக்கிய அறிவிப்புகளை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அறிவித்தார்.
- நாட்டில் நிலையான, பயனுள்ள, மற்றும் மலிவான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியில், 8 புதிய 50 படுக்கை வசதிகள் அடங்கிய ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.72 கோடி செலவில் தொடங்கப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் 500 புதிய ஆயுஷ் சுகாதார மற்றும் நல மையங்கள் தொடங்கப்பட்டன.
- அயோத்தியில் ஆயுஷ் கல்வி மையங்கள் ரூ.49.83 கோடி செலவில் தொடங்கப்படவுள்ளது. 250 புதிய ஆயுஷ் மருத்துவமனைகள் நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்படுத்தவுள்ளன.
- உத்தராகண்டில் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.164.03 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு, மாநில அளவிலான திட்ட அனுமதி குழுவின் 23.12.20201 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 8 குடிநீர் திட்டங்கள், பல கிராமங்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்களாகும். கிராமப்புறங்களில் உள்ள 9,200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
- டேராடூன், நைனிடால், உத்தரகாசி, அல்மோரா, பாகேஸ்வர், மாவட்டங்களில் உள்ள 140 கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையும், கோடைக்காலத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் இந்த கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு டிசம்பர் 2022-க்குள் தீர்வு காணப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, புனேயில் உள்ள ஜே.கே. அறக்கட்டளையின் செயற்கைக் கருத்தறித்தல் மையத்தை இன்று (24.12.2021) பார்வையிட்டார். இந்த மையத்தில்தான் நாட்டின் முதலாவது பன்னி ரக கன்று குட்டி உருவாக்கப்பட்டது.