'PROJECT TIGER' திட்டம் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை
- நாடு முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
- அதன்கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் புலிகளை பாதுகாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்கீழ் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புலிகள் காப்பகமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணையாக ரூ.2.83 கோடியும், இரண்டாவது தவணையாக ரூ.1.06 கோடியும் விடுவிக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில் மூன்றாவதும் இறுதியான தவணையுமான ரூ.1.89 கோடியை விடுவித்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தவிர்க்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் முதல் முறை இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பெண் கமாண்டோக்கள்
- நாட்டின் மிக முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்த பாதுகாப்பு பிரிவில் இதுவரை ஆண் கமாண்டோக்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அப்பிரிவில் பெண்களையும் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அதன்படி, இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு பணியில் இந்த பெண் கமாண்டோக்கள் ஈடுபட உள்ளனர்.
- முதற்கட்டமாக 32 பெண் கமாண்டோக்களுக்கு 10 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணியில் சேர உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு அறிவித்தது.
- அதன்படி, கடந்த மாதம் இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அந்த மஞ்சள் பைகள் தான் சுற்றுச்சுசூழலுக்கு சரியானது என்றும், அழகான பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
- சுற்றுச் சூழலை காப்பவரின் அடையாளமே "மஞ்சள் பை" என அவர் குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்ட அவர், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு மனித குலத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும் என எச்சரித்தார்.
- தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்த தடை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசினுடைய முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த முதலமைச்சர் தகவல் பலகையை (Dash board) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 'முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.23) தமிழ்நாடு அரசினுடைய முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த முதலமைச்சர் தகவல் பலகையை (Dash board) தலைமைச் செயலகத்தில் திறந்துவைத்தார்.
- இந்த முதலமைச்சர் தகவல் பலகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய நீர் தேக்கங்களின் கொள்ளளவு மற்றும் இதுநாள் வரையிலான நீர் இருப்பின் நிலை; ·மழைப் பொழிவு முறை; 25-க்கும் மேற்பட்ட உணவு தானியங்கள் / காய்கறிகள் / பழங்கள் ஆகியவற்றின் விலை நிலவரம் மற்றும் திடீர் விலை உயர்வின் சாத்தியக் கூறுகளை கண்காணித்து, தீர்வு காண உதவும் விலைத் தளம் (Price Mesh).
- வேலைவாய்ப்பு களநிலவரங்களைக் கொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கண்டறிதல்; நுகர்பொருள் வாணிபத் தகவல்; 'முதலமைச்சர் உதவி மையம்' மற்றும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' வாயிலாக பெறப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலை மற்றும் தீர்வுகள் குறித்த முழுத் தகவல்கள்; முதல்வர் ஸ்டாலினால் கண்காணிக்கப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள்; மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள், அவற்றில் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள், குறித்த காவல் துறையின் தினசரி அறிக்கைகள்; நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டங்களின் நிலை; குடிநீர் வழங்கல் திட்டங்கள் - குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.
- இவை அனைத்தும் தகவல் பலகையின் முதல் தொகுப்பில் அடங்குகின்றன. முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்து, அவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் விதத்தில் வாரந்தோறும் கூடுதல் தகவல்கள் இப்பலகையில் சேர்க்கப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தகவல் பலகைகளின் நோக்கத்தை விளக்கும் காணொலி வெளியிடப்பட்டது.
- வாரணாசியின் கர்க்கியானில் உள்ள உத்தரப்பிரதேச அரசின் தொழில் மேம்பாட்டு ஆணையப் பூங்காவில் ‘பனாஸ் பால்வளத் தொகுப்புக்குப்’ பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்தப் பால்பண்ணை ரூ.475 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பாலினைப் பதப்படுத்தும் வசதி கொண்டது.
- பனாஸ் பால்பண்ணையோடு தொடர்புடைய 1.7 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35 கோடியையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தார்.
- வாரணாசியின் ராம் நகரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தொழிற்சாலைக்கு சாண எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் இந்திய தர நிர்ணய குழுவால் உருவாக்கப்பட்ட இணையப் பக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர், பால் பொருட்களின் மதிப்பீட்டு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அடையாள சின்னத்தை வெளியிட்டார்.
- அடித்தள நிலையில் காணப்படும் நில உரிமைப் பிரச்சனைகளைக் குறைக்கும் மற்றுமொரு முயற்சியாக உத்தரப்பிரதேசத்தின் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் கவ்ரானியை பிரதமர் இணையவழி விநியோகித்தார்.
- வாரணாசியில் ரூ.870 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 22 வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார். வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான மாற்றத்தை இது மேலும் வலுப்படுத்தும்.
- சாலைத் துறையில் பிரயாக்ராஜ் மற்றும் பதோஹி சாலைகளை 4 வழி மற்றும் 6 வழி சாலைகளாக விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- இந்தப் புனித நகரின் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரணாசியில் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி ஆலயம், கோவர்தன் தொடர்பான முதல்கட்ட சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- வாரணாசியில் உள்ள தெற்காசிய பிராந்திய மையத்தின், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தி்ல் வேகமான பயிர் வளர்ச்சி ஆய்வமைப்பு, பயாக்பூர் கிராமத்தில் மண்டல தரங்கள் ஆய்வகம், பிந்த்ரா வட்டத்தில் வழக்கறிஞர் கட்டிடம் ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பிற திட்டங்களாகும்.
- அசிக்மா (பாதுகாப்பான முறையில் ராணுவத்திற்குள் செய்தியிடல் செயலி) எனும் புதிய தலைமுறை, நவீன, இணைய அடிப்படையிலான செயலியை இந்திய ராணுவம் இன்று அறிமுகப்படுத்தியது. ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் அதிகாரிகள் குழுவால் முழுக்க உள்நாட்டிலேயே இது உருவாக்கப்பட்டது.
- கடந்த 15 ஆண்டுகளாக சேவையில் உள்ள ராணுவ வைட் ஏரியா நெட்வொர்க் தகவல் முறைக்கு பதிலாக ராணுவத்தின் உள் மட்டங்களில் இந்தப் செயலி பயன்படுத்தப்படுகிறது.
- ராணுவத்திற்கு சொந்தமான வன்பொருளில் இது களமிறக்கப்பட்டுள்ளதோடு எதிர்கால மேம்படுத்தல்களுக்கான வாழ்நாள் ஆதரவோடு திகழ்கிறது.
- அனைத்து எதிர்கால தகவல் பகிர்வு தேவைகளையும் இது பூர்த்தி செய்வதோடு மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது. பல நிலை பாதுகாப்பு, தகவல் முன்னுரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சமகால அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
- எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் இந்த செயலி, ராணுவத்தின் உடனடி தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்யும். குறிப்பாக, தற்போதைய புவிசார் அரசியல் பாதுகாப்பு சூழலின் பின்னணியில் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு இணங்க இது உள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய ‘பிரலே‘ ஏவுகணை, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து 2-வது முறையாக இன்று (23.12.2021) செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- முதன் முறையாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனமான ஆர்இசி நிறுவனம் 169.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி பெறுவதற்கு, கேஎஃப்டபிள்யூ வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வழங்கிய ஒப்புதலின்படி இந்தோ – ஜெர்மன் இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது.
- இந்த கடனுதவி, புதுமையான சூரியசக்தி தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியாவின் மின்உற்பத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
- உத்தரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் முசாஃபர் நகரில் ரூ.9,119 கோடி மதிப்பிலான 240 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று (23.12.2021) தொடங்கி வைத்தார்.
- காசியாபாதின் தஸ்னா பகுதியில் உள்ள ஆறுவழி கிழக்கு சுற்றுவட்ட விரைவுச் சாலையில், புலனாய்வுப் போக்குவரத்து முறையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.