ரூ.100 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம் அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
- மக்களின் சுய உதவி ,சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், அதை பரவலாகவும் ,மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தை கடந்த 1997ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்.
- மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கிப் பராமரித்து வருவது நமக்கு நாமே திட்டத்தின் உயரிய நோக்கம்.
- இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
- தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும். இந்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று தாக்கல் செய்தார்.
- இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
- மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
- ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது.
- இதையடுத்து அதற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 'ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
- இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
- அதில்,' ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவிடும் விதமாக மருத்துவக் குழு அமைக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது.
- இடம்பெறுபவர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தேர்வு செய்ய வேண்டும். அதேபோன்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அப்போலோ மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது
- நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது.
- 2021ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
உத்தரக்காண்ட் அரசின் தூதுவராக ரிஷப் பந்த் நியமனம்
- ரிஷப் பந்து அவரின் சொந்த மாநிலமான உத்தரக்காண்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களிடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காக அவர் அம்மாநில தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியுடன் உள்ளார்.
- இதற்கு முன்பாக உத்தரக்காண்ட் அசு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திரமான வந்தனா கட்டாரியாவை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டு துறையின் தூதுவராக அம்மாநில அரசு நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புக்களான மும்பை, சென்னை, கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பயிற்சி / நடைமுறைப் பயிற்சி வாரியங்கள் மூலம் தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டம் (என்ஏடிஎஸ்) செயல்படுத்தப்படுகிறது.
- புதிய பட்டதாரி பொறியாளர்கள், பொறியியல் பட்டயம் பெற்றவர்கள் மற்றும் பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு மாணவர்களின் நடைமுறைப் பயிற்சியில் உள்ள இடைவெளிகளை இத்திட்டம் பூர்த்தி செய்கிறது.
- அவர்களின் தொழில்/வணிக வெளிப்பாட்டின் தரத்தை மேம்படுத்துவதையும், தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப மனித வளத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இண்டியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளை டேலஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கிக் கொள்வதற்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஏர் இண்டியா மற்றும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை 100% அளவுக்கும், ஏர் இண்டியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குகளை 50% அளவுக்கும், பேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளது.
- டேலஸ் நிறுவனம் முற்றிலும் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். ஏர் இண்டியா மற்றும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.
- தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு அனைவரையும் உட்படுத்திய, உறுதியான, நீடிக்கவல்ல வீட்டுவசதி அளிக்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவிக்கு மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் டிசம்பர் 7,2021 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு தரப்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கி தரப்பில் இந்தியாவுக்கான இயக்குனர் திரு டாக்கியோ கொனிஷியும் கையெழுத்திட்டுள்ளனர்.
- இந்தியாவில் அதிகபட்சம் நகர்மயமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சுமார் 72 மில்லியன் மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் இந்த திட்டத்தில் ஒன்பது இடங்களில் வீடுகள் கட்டப்படும்.
- சுமார் 6,000 வீடுகள் ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படும். குறைந்த செலவிலான வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பேரிடர் அபாய நிர்வாகம் உட்பட மாநிலத்தின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரைபடத்துக்கு திட்டமிட தமிழ்நாடு நகரம் மற்றும் நாட்டுப்புற திட்டமிடலுக்கு இது உதவி செய்யும்.
- தொழில்நுட்ப உதவிக்கான சிறப்பு நிதியத்தில் இருந்து தமிழ்நாட்டின் வீட்டுவசதி திட்ட தொழில்நுட்ப உதவிக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும்.
- இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரசார் பாரதி நிறுவனமும், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலுடன் கையெழுத்திட்டுள்ளது.
- இதன்படி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலுடன் தொடர்புடைய பிரசித்திப் பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தூர்தர்ஷனின் தேசிய மற்றும் சர்வதேச அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படும்.
- நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் டிடி நேஷனல், டிடி இந்தியா, தூர்தர்ஷனின் மண்டல அலைவரிசைகள் மற்றும் பிரசார் பாரதி செய்தி சேவைகளில் (பிரசார் பாரதியின் டிஜிட்டல் அமைப்புகள்) வாராந்திர நிகழ்ச்சியாக இடம்பெறும்.