Type Here to Get Search Results !

உலக அளவில் ஊக்கமருந்து தடுப்பு விதிமீறல் அறிக்கை / GLOBAL DOPING PREVENTION VIOLATION REPORT

TAMIL 

  • விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுப்பதற்காக இருக்கும் உலக அமைப்பு (டபிள்யூஏடிஏ) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி, ஊக்கமருந்து பயன்பாடு தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 152 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 
  • பட்டியலில் முதலிரு இடங்களில் ரஷியா (167), இத்தாலி (157) உள்ளன. 4 மற்றும் 5-ஆவது இடங்களில் பிரேஸில் (78), ஈரான் (70) நாடுகள் உள்ளன.
  • இந்தியாவில் அதிகபட்சமாக உடற்கட்டமைப்பு (பாடி பில்டிங்) பிரிவில் 57 விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்மையாக, பளுதூக்குதலில் 25 விதிமீறல்களும், தடகளத்தில் 20 விதிமீறல்களும், மல்யுத்தத்தில் 10 விதிமீறல்களும் நிகழ்ந்துள்ளன. குத்துச்சண்டை மற்றும் ஜூடோவில் தலா 4 விதிமீறல்கள் இருக்கின்றன. இதுதவிர, கிரிக்கெட்டிலும் 4 விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன.
  • கடந்த 2018-இல் வெளியான அறிக்கையில் இந்தியா மொத்தம் 107 விதிமீறல்களுடன் 4-ஆவது இடத்தில் இருந்தது. அதிலும் அதிகபட்சமாக பளுதூக்குதலில் 22 விதிமீறல்களும், அடுத்தபடியாக தடகளத்தில் 16 மீறல்களும் இருந்திருக்கின்றன.
  • இந்த அறிக்கையானது, சம்மந்தப்பட்ட விளையாட்டு போட்டியாளா்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் சோதனை நடத்தி விதிமீறல் உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கான தடையும் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.
  • 2019-இல் உலக அளவில் மொத்தம் 2,78,047 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பாக சேகரிக்கப்பட்டன. அதில் 2,701 மாதிரிகளில் (1 சதவீதம்) விதிமீறல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிந்தது.
  • ஆய்வு முடிவில் 1,535 மாதிரிகளில் விதிமீறல்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக அளவிலான எண்ணிக்கையில் உடற்கட்டமைப்பில் தான் அதிக விதிமீறல்கள் (227) உள்ளன. அடுத்து தடகளத்திலும் (227), பளுதூக்குதலிலும் (160) அதிகமாக உள்ளன.
ENGLISH
  • The report was released by the World Organization for the Prevention of Doping in Sports (WADA). Accordingly, a total of 152 cases of doping violation in India were reported in India in 2019.
  • Russia (167) and Italy (157) top the list. In 4th and 5th place are Brazil (78) and Iran (70). India has the highest number of violations reported in the bodybuilding category (57). Prior to the Olympics, there were 25 violations in weightlifting, 20 in athletics and 10 in wrestling. 
  • There are 4 offenses each in boxing and judo. In addition, there have been 4 offenses in cricket. In the last report released in 2018, India was ranked 4th with a total of 107 violations. There were a maximum of 22 violations in weightlifting, followed by 16 violations in athletics.
  • This report is based on the fact that samples were collected from the athletes involved, tested and found to be in violation, and a ban was imposed on them. In 2019, a total of 2,78,047 samples were collected worldwide for stimulant use. Of those, 2,701 samples (1 percent) were found to have potential for irregularities.
  • At the end of the study 1,535 samples were found to have irregularities and the relevant nabs were banned. The highest number of anomalies (227) is in the anatomy worldwide. Next are higher in athletics (227) and weightlifting (160).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel