BWF உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் செய்துள்ளார்.
- முன்னதாக இறுதிப்போட்டியில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 15-21 20-22 என்ற நேர் செட்களில் 43 நிமிடங்களில் தோல்வியடைந்தார்.
- இந்தியாவிற்கு இதற்கு முன்னர் பலர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். பிரகாஷ் படுகோன் (1983 இல் வெண்கலம்), பி சாய் பிரனீத் (2019 இல் வெண்கலம்) மற்றும் லக்ஷ்யா சென் (இந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றவர்) ஆகியோர் வெண்கலங்களை வென்றிருக்கும் நிலையில், 28 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆப்கான் நிலவரம் தொடர்பாக இந்தியா & மத்திய ஆசிய நாடுகள் இடையேயான ஆலோசனை கூட்டம்
- ஆப்கான் நிலவரம் தொடர்பாக இந்தியா, 5 மத்திய ஆசிய நாடுகள் இடையேயான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- இதில், அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு தங்கள் வலுவான ஆதரவை தெரிவித்த அமைச்சர்கள், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் உள்விவகாரங்களில் தலையிடாதது ஆகியவற்றை மதிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
- மேலும், ஐநா தீர்மானத்தின்படி, ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு தங்குமிடம், பயிற்சி, திட்டமிடல் அல்லது நிதியுதவி செய்ய பயன்படுத்தப்படக் கூடாது என்றும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
- சர்வதேச சமூகமும், ஐநாவும் ஆப்கான் மக்களுக்கு வேண்டிய மனிதாபமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
ஆப்கான் நிலவரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம்
- ஆப்கான் நிலவரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்தது.
- இதில், 30 முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், ஐநா பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில், ஆப்கானுக்கு உலக சமூக மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
கீழடியில் வயல்வெளியில் உறைகிணறு கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், ஒன்றிய அரசு 3 முறையும், தமிழக அரசு 4 முறையும் என 7 கட்ட அகழாய்வு பணிகளை நடந்துள்ளன. 8ம் கட்ட அகழாய்விற்காக திட்ட வரைவை தமிழக தொல்லியல் துறை, ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்து விட்டது.
- இந்நிலையில் கீழடியில் பாலன் என்பவரது வயலில் கடந்த 20 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக இயந்திரம் மூலம் குழி தோண்டினர். அப்போது குழியின் ஒரு பகுதியில் 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு தென்பட்டது.
- இதுவரை கீழடி அகழாய்வில் இரண்டு அடுக்குகள் முதல் 32 அடுக்குகள் வரையான 18 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் மிக வயதான 135 வயது மூதாட்டி மரணம்
- சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான் செயேட்டி என்பவர், கடந்த 1886ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்துள்ளார்.
- வயது முதிர்ந்த பெண்ணான இவரை கடந்த 2013ம் ஆண்டு சீனாவின் மிக வயதான நபர் என்று சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
100 % மக்களுக்கு தடுப்பூசி - அந்தமான் நிக்கோபார் சாதனை
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத இரண்டு டோஸ் கோவிட் 19 தடுப்பூசி அளித்து இலக்கை அடைந்துள்ளதாகவும், இந்த சாதனையும் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவே முதன்மையானது என கூறப்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் என்ற லக்ஷயா சென் சாதனை
- இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் இளம் வயதில் (20) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் லக்ஷ்யா சென்.
- இந்நிலையில், இப்போது நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (BWF World Championships) அரையிறுதியில் பங்கேற்று சக இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்திடம் தோல்வியுற்று வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
- திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என முதலமைச்சர் பெயர் சூட்டினார்.
- பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- பின்னர், நாட்டுடமையாக்கப்பட்ட பேராசிரியர் அன்பழகனின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையை அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
- 2024-ம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசு முழு ஆதரவை வழங்குகிறது.
- இலக்கை அடைவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு உதவ, 2021-22-ம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்திற்காக ரூ. 10,180 கோடி மத்திய ஒதுக்கீட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஒப்புதல் அளித்தார். 2020-21ல் ஒதுக்கப்பட்ட ரூ 2,522 கோடியுடன் ஒப்பிடும் போது இது நான்கு மடங்கு உயர்வு ஆகும்.
- இன்றைய நிலவரப்படி, 8.67 கோடிக்கும் அதிகமான (45.15%) கிராமப்புறக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் நீர் விநியோகத்தைக் கொண்டுள்ளன.
- பிரதமரால் ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட 15 ஆகஸ்ட் 2019 நிலவரப்படி,ர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 1.01 கோடி கிராமப்புற குடும்பங்களில், 11.74 லட்சம் (11.5%) குடும்பங்கள் குழாய் நீர் விநியோகத்தைக் கொண்டிருந்தன.
- பணி தொடங்கப்பட்டதில் இருந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் 9.65 லட்சம் வீடுகளுக்கு (9.5%) குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று, மாநிலத்தில் 21.39 (21.1%) லட்சம் கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் நீர் விநியோகத்தைப் பெறுகின்றன.
- இத்திட்டத்தின் காரணமாக ராஜஸ்தானில் குடிநீர் விநியோகத்தின் நிலை படிப்படியாக மாறி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில், சுமார் 30 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டின் நடுவில் செயல்பாடுகளை தொடங்க திட்டமிடப்பட்ட பி15பி (P15B) பிரிவை சேர்ந்த இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாவது ரகசிய அழிக்கும் கப்பலான மோர்முகாவ் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது.
- போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்று நாடு கொண்டாடுவதால், கப்பல் கடலுக்குச் செல்ல மிகவும் பொருத்தமான தேதியாக டிசம்பர் 19 அமைந்துள்ளது.
- பல முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த கப்பல் தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் இக்கப்பல் அளித்துள்ளது
- காதி கிராம தொழில் ஆணையத்தின் சுய வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் இணைந்ததன் மூலம், உத்தரப் பிரதேசத்தின் புந்தல்கண்ட் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சுயசார்பை நோக்கி முன்னேறியுள்ளனர்.
- ஊரக கலைஞர்களுக்கு பானை செய்யப் பயன்படும் மின்சார சக்கரம், தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் அகர்பத்தி இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
- ஜான்சி எம்.பி. திரு அனுராக் சர்மாவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அரசின் முன்னணி திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமும் (PMEGP) இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
- காதி கிராம தொழில் ஆணையத்தின் 200 தேனீ வளர்ப்பு பெட்டிகள், பானை செய்ய பயன்படும் 100 மின்சார சக்கரங்கள், 50 அகர்பத்தி இயந்திரங்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
- இது உள்ளூரைச் சேர்ந்த 600 பேருக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இதற்காக, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று தொழில் பயிற்சிகளை காதி கிராம தொழில் ஆணையம் வழங்கியுள்ளது.