2021-26க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரூ.93,068 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், 2021-26-க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவியாக ரூ.37,454 கோடி வழங்கவும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட காலத்தில், 2016-21 பாசன மேம்பாட்டிற்காக மத்திய அரசால் கடன் வழங்க ரூ.20,434.56 கோடிக்கும் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் சிறப்புத் திட்டமான விரைவுப்படுத்தப்பட்ட பாசனப்பயன் திட்டம் நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2021-26 காலத்தில் கூடுதலாக 13.88 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறும்.
- குற்ற விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவி தொடர்பாக இந்தியா – போலந்து இடையேயான உடன்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பரஸ்பர சட்ட உதவியின் மூலம் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடுத்தல் புலனாய்வு ஆகியவற்றில் இருநாடுகளின் திறனையும், தீவிரத்தன்மையையும் விரிவுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
- இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை இந்தியாவில் செயல்படுத்த 1973ஆம் ஆண்டின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ், அரசிதழ் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
- எலக்ட்ரோலைசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியுடன் கூடிய தனித்த எரிபொருள்-செல் அடிப்படையிலான மைக்ரோ-கிரிட் திட்டத்தை சிம்ஹாத்ரியில் (விசாகப்பட்டினத்திற்கு அருகில்) உள்ள என்டிபிசி விருந்தினர் மாளிகையில் என்டிபிசி அமைத்துள்ளது.
- இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிசக்தி சேமிப்பு திட்டம் இதுவாகும். பெரிய அளவிலான ஹைட்ரஜன் எரிசக்தி சேமிப்பு திட்டங்களுக்கு இது முன்னோடியாக இருப்பதோடு நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் பல மைக்ரோகிரிட்களைப் நிறுவவும் பயனுள்ளதாக இருக்கும்.
- அருகிலுள்ள மிதக்கும் சூரியசக்தி திட்டத்தில் இருந்து உள்ளீட்டு எரிபொருளை எடுத்து மேம்பட்ட 240 கிலோவாட் சாலிட் ஆக்சைடு எலக்ட்ரோலைசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்.
- சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் உயர் அழுத்தத்தில் சேமிக்கப்பட்டு 50 கிலோவாட் திட ஆக்சைடு எரிபொருள் கலத்தைப் பயன்படுத்தி மின்மயமாக்கப்படும். மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை தனித்த முறையில் இந்த அமைப்பு செயல்படும்.
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை
- 2021 - 22ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை தற்போது தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. அதன்படி தற்போது 2021 - 22ஆம் ஆண்டுக்கு 352 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் துர்கா பூஜை
- கோல்கட்டாவில் செப்., - அக்., மாதங்களில், பிரமாண்ட துர்காசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 10ம் நாள்முடிவில் துர்கா சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும்.இந்நிலையில், கோல்கட்டா துர்கா பூஜையை, உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில், யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
சரக்குகள் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் சாதனை
- கடந்த சனிக்கிழமை எம்.வி.ஆா்பி ஈடன் என்ற கப்பல் சரக்கு ஏற்றுவதற்காக சென்னைத் துறைமுகம் வந்தது. இக்கப்பலில் ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) 38,079 மெட்ரிக் டன் பாரைட்ஸ் என்ற கனிம பொருள் ஏற்றப்பட்டது.
- ஒரே நாளில் கையாளப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு கடந்த அக்.4, 2020-ல் எம்.வி.பைலா என்ற என்ற கப்பலில் கையாளப்பட்ட 35,671 மெட்ரிக் டன் பாரைட்ஸ் கையாண்டதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
சூரியனைத் 'தொட்ட' நாசா விண்கலம்
- வரலாற்றில் முதல்முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் 'தொட்டுள்ளது'. நாசாவின் பாா்க்கா் விண்கலம் சூரிய வளிமண்டலத்தில் மேல்பகுதியில் நுழைந்து பல்வேறு புதிய தகவல்களை சேகரித்துள்ளது.
- நிலவில் முதல்முறையாக மனிதா்கள் தரையிறங்கிய பிறகுதான் அதனைக் குறித்த பல விவரங்கள் அறிவியல் உலகுக்குத் தெரியவந்தது. அதே போல், சூரியனின் வளிமண்டலத்துக்குள் பாா்க்கா் விண்கலம் நுழைந்துள்ளது இதுதொடா்பான ஆய்வில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.
- நீண்ட தொலைவிலிருந்து மற்ற விண்கலன்களால் தெரிந்து கொள்ள முடியாத உண்மைகளை பாா்க்கா் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து கண்டறிந்துள்ளது என்று நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த விண்கலத்தை மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்கவகம் வடிவமைத்தது.
- சூரியக் காற்று குறித்த உண்மைகளை கடந்த 1958-ஆம் ஆண்டு கண்டறிந்து சொன்ன விஞ்ஞானி யுஜீன் பாா்க்கரின் (91) பெயா் இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.
'செமி கண்டக்டர்' உற்பத்தியை அதிகரிக்க ரூ.76 ஆயிரம் கோடி ஊக்க திட்டம்
- இந்தியாவை மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக உயர்த்தமத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும், செமி கண்டக்டருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
- அதையடுத்து, செமி கண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மூலம், இந்த துறையில், 1.70 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
RuPay டெபிட் கார்டு, BHIM UPI டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசு - மத்திய அரசு
- Rupay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தவதற்கு ஊக்கப்பரிசு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
- மைக்ரோசிப்கள் பற்றாக்குறை தொழில்துறை உற்பத்தியை பாதிக்கும் என்பதால் நாட்டை எலக்ட்ரானிக்ஸ் மையமாக மாற்றும் லட்சியத்துடன் குறைக்கடத்திகளுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு (பிஎல்ஐ) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்சின் ஷனெல் நிறுவனத்தின் உலகளாவிய சி.இ.ஓ.,வாக இந்திய பெண் நியமனம்
- உலக புகழ்பெற்ற பிரான்சின் பேஷன் ஆடை விற்பனை நிறுவனமான ஷனெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இந்திய பெண் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மஹாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் பிறந்தவர் லீனா நாயர், ஜம்ஷெத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் மனிதவள படிப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பசுமை தமிழ்நாடு திட்டம்
- அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு 1,30,060 சதுர கிமீ பரப்பளவு கொண்டது.
- இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டு மரக்கன்றுகளை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிலங்கள், பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழிற்பகுதிகள், படுகை பகுதிகளில் நட முடிவு செய்யப்பட்டது.
- நடப்பாண்டு முதல் 2030 - 31ம் ஆண்டுக்குள், வனப்பரப்பை அதிகரிக்க, 265 கோடி உள்நாட்டு மரக்கன்றுகளை, பொது இடங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
- அதன்படி நடப்பாண்டு 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 47 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மரக்கன்றுகளை உருவாக்கவும், அவற்றை நடவும் 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடுத்த நிதியாண்டில், 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 1.30 கோடி மரக்கன்றுகள் நட 17.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.