பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. வரைவு தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பருவநிலை மாறுபாடு தொடர்பான வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- இந்த தீர்மானத்தை 12 நாடுகள் ஆதரித்தன. இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்த்து வாக்களித்தன. சீனா வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
- புவி வெப்பம் அதிகரிப்பதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகள் பருவநிலை மாறுபாட்டை தடுக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
- வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கக்கூடாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்
- கடந்த நவம்பரில் 4ஜி பதிவிறக்க சேவையில் 24.1 எம்பிபிஎஸ் (மெகாபைட் பொ செகண்ட்) வேகத்துடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருந்தது.
- ஜியோ நெட்வொக் சராசரி 4ஜி தரவு வேகத்தில் சுமாா் 10 சதவீத உயா்வை பதிவு செய்துள்ளது. அதேசமயம், பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் நெட்வொக் வேகம் 8.9 சதவீதமும், வோடஃபோன் வேகம் 5.3 சதவீதமும் உயா்ந்துள்ளது.
- எனினும், 4ஜி பதிவேற்றத்தில் 8 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடஃபோன் ஐடியா நிறுவனம் தொடா்ந்து 5 மாதங்களாக முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹசாரே டிராபியில் 4வது சதம் விளாசினார் ருதுராஜ்
- நடப்பு தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்த கெயிக்வாட், விஜய் ஹசாரே டிராபியில் கோஹ்லி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோரின் சாதனையை (தலா 4 சதம்) சமன் செய்தார். மேலும், நடப்பு தொடரின் 500 ரன் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குனர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்
- சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குனர்கள் பதவிக் காலம் தற்போது 2 ஆண்டுகளாக இருக்கிறது. இதை 5 ஆண்டுகளாக மாற்றி, ஒன்றிய அரசு 2 மாதங்களுக்கு முன் அவசர சட்டம் பிறப்பித்தது.
- இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், இந்த பதவி நீட்டிப்புக்கான, 'டெல்லி சிறப்பு காவல் அமைப்பு திருத்த மசோதா 2021' மற்றும் 'ஒன்றிய விஜிலன்ஸ் கமிஷன் திருத்த மசோதா 2021' ஆகியவை, கடந்த 9ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - ஐகோர்ட் கிளை உத்தரவு
- மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கு 2019ல் நடந்த தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை உள்ளிட்ட பலருக்கும் பங்கு இருக்கலாம்.
- இந்நிலையில் இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர், ''டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
மார்ச் 4ஆம் தேதி முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய தொகுதி- 1 பணிகளுக்கான மொத்த காலிப் பணியிடங்களில் எண்ணிக்கை 66 ஆகும். முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,800 ஆகும். முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு
- இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக்கத்தில் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிற ஃபிளிப்கார்ட் வேறு சில புதிய நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறது.
- அந்த வகையில் தற்போது விவசாயப் பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிற நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் வால்மார்ட்டுடன் இணைந்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் ரூ.1100 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது.
- இந்தியாவில் விவசாயிகளிடம் இருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கொண்டு வணிகப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான பங்களிப்பை அளித்து வரும் நிஞ்சாகார்ட் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம்.
- சமீப காலங்களில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்திருப்பதாலும் நாடு முழுவதிலும் 1,800 மளிகைக் கடைகளுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தன் வணிகத்தை விரிப்படுத்த நிஞ்சாகார்ட் உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
- தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ச்ன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.
- இந்நிலையில்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர் 'டைம்ஸ்' தேர்வு
- அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், ஆண்டுதோறும் சிறந்த நபரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மின்சார கார் விற்பனையில், டெஸ்லா நிறுவனம் இந்தாண்டு ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது, எலான் மஸ்க் இந்த விருது பெற காரணமாக கருதப்படுகிறது. அதோடு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- மேலும், கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளை 2021ம் ஆண்டின் கதாநாயகர்களாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது.
போதை பொருள் மசோதா நிறைவேற்றம்
- சட்டவிரோத கடத்தலுக்கு நிதியுதவி செய்பவர்களை தண்டிப்பது தொடர்பான போதை பொருள் தடுப்பு சட்ட மசோதா கடந்த செப்.,ல் அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
- அவசர சட்டத்துக்கு பதிலாக தடுப்பு சட்டத்தின் விதிகளில் உள்ள எழுத்துபிழைகளை சரி செய்யும் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் டிச.,6ல் தாக்கல் செய்யப்பட்டது.