நீதிபதிகள் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா நிறைவேறியது
- உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தும் நோக்கில் நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது.
- அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்தன. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேறியது.
டர்பிடோ உதவியுடன் நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்க, டர்பிடோ உதவியுடன் செயல்படும் சூப்பர்சோனிக் ஏவுகணையை உள்நாட்டு தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது.
- இந்த ஏவுகணை 650 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. கப்பலில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, பாராசூட் உதவியுடன் டர்பிடோ அமைப்பை கடலுக்குள் அனுப்பும். வெடிகுண்டை கொண்டிருக்கும் இந்த டர்பிடோ அமைப்பு கடலுக்கு அடியில் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பலை துல்லியமாக கண்டறிந்து தாக்கும்.
- இந்த ஏவுகணையின் சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்தது. இதில், தரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் 2021
- இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, நடப்பு ஆண்டுக்கான 'மிஸ் யூனிவர்ஸ்' பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
- லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ள நிலையில், ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அரசாங்க அலுவல் பணிகளுக்கு காகித்தை அறவே பயன்படுத்தாத உலகின் முதல் அரசாக மாறி துபாய் சாதனை
- அரசாங்க அலுவல் பணிகளுக்கு காகித்தை அறவே பயன்படுத்தாத, 100% காகிதத்திலிருந்து விடுதலை பெற்ற அரசாக மாறியுள்ளது துபாய்.
- துபாய் அரசின் அனைத்து உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை பரிமாற்றங்கள், அரச பரிவர்த்தனைகள், சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இதனை இளவரசர் ஷேக் ஹம்தன் அறிவித்துள்ளார்.
- இதன் மூலம் 336 மில்லியன் பேப்பர் பயன்பாடுகளை தூக்கி கடாசியுள்ளது துபாய். துபாயில் இது 5 கட்டங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் துபாய் அரசின் ஒவ்வொரு துறையும் காகிதப் பயன்பாடிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது.
- கடைசியில் 45 அரசுத்துறைகள் அனைத்திலும் பேப்பர் இல்லாத டிஜிட்டல் நடைமுறைகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டன. இந்த துறைகள் 1800 முக்கியமான டிஜிட்டல் சேவைகளையும் 10,500 முக்கியமான பரிவர்த்தனைகளையும் வழங்குகின்றன.
- வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கிரடாய் அமைப்பின் மாநில மாநாட்டை துவக்கி வைத்தார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்னையில் கிரடாய் அமைப்பின் மாநில மாநாட்டை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- 3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறிய முடிகிறது என உரையாற்றினார். செப். மாதத்தில் மட்டும் வீடு, மனை பத்தரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- 8வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் வரும் டிசம்பர் 27 முதல் 29ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டின் இறுதி நாளில் சிறந்த 10 தமிழார்வலர்களுக்கு "உலகத் தமிழ் மாமணி விருது” வழங்கப்படவுள்ளது.
- ஐசிசியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், சிறந்த வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகளின் ஹாலே மேத்யூஸும் வென்றனர்.
- ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியமாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் அந்த அணியின் தொடக்க வீரரான வார்னருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியின் சிறந்த வீரராகவும் வார்னரே தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- மறுபுறம், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒன்டே தொடரில் ஆல்-ரவுண்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹாலே மேத்யூஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்
- காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் ஆடவருக்கான 81 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 3-ஆவது தங்கப் பதக்கமாகும்.
- அஜய் சிங் தனது எடைப் பிரிவில் ஸ்னாட்ச்சில் 147 கிலோ, கிளீன் & ஜொக்கில் 175 கிலோ என மொத்தமாக 322 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். இதில் அவா் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய எடை தேசிய சாதனையாகும்.
- ஏற்கெனவே இப்போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுன்கா (67 கிலோ), அசிந்தா ஷியுலி (73 கிலோ) ஆகியோருடன் இணைந்து அஜய் சிங்கும் தற்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றாா்.
- இதனிடையே, இந்தப் போட்டியில் மகளிருக்கான 59 கிலோ பிரிவில் இந்தியாவின் பாப்பி ஹஸாரிகா ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜொக் பிரிவில் 105 கிலோ என மொத்தமாக 189 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா்.
- புகார்கள் மேலாண்மைக்கான ‘லோக்பால் ஆன்லைன்‘ டிஜிட்டல் தளத்தை இந்திய லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தில் நாட்டின் அனைத்து குடிமக்களும் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் புகார்களை இந்தத் தளத்தில் தாக்கல் செய்யலாம்.