TAMIL
- ஜவுளி உற்பத்திக்கான முழு மதிப்புச் சங்கிலியின் தனித்துவமான அனுகூலத்தை இந்தியா பெற்றுள்ளது. பெரிய சந்தையை நாடு கொண்டுள்ள நிலையில், செலவு குறைந்த மனிதவளத்துடன் இது வேகமாக வளர்ந்து வருகிறது.
- உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியின் மதிப்பு $ 140 பில்லியன் ஆகும். ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் மதிப்பு $ 40 பில்லியன் ஆகும்.
- 2019-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% மற்றும் மொத்த மதிப்புக் கூட்டில் 11% பங்களிப்பை ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் வழங்கியுள்ளது.
- கொவிட் பாதிப்புக்கு பின்னர் வெறும் மூன்று மாத காலத்திற்குள் ரூ 7000 கோடி மதிப்பிலான தனிநபர் பாதுகாப்பு உபகரண தொழில்துறையை இந்தியா நிறுவி, இதில் இரண்டாவது பெரிய நாடாக மாறியிருப்பது அமைச்சகத்தின் முக்கிய சாதனையாகும்.
- பிரதமரின் மித்ரா பூங்காக்கள்: பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் (மித்ரா) பூங்காக்கள் 7-ஐ 5 ஆண்டுகளில் ரூ 4445 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஜவுளிகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம்: ஜவுளிக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஜவுளித்துறையின் வளர்ச்சி மீது கவனம் செலுத்துகிறது மற்றும் இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ 10,683 கோடி வழங்கப்படும்.
- திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல் நிதி திட்டம்: தொழில்நுட்ப மேம்படுத்தல் நிதித் திட்டம் என்பது கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும், இந்திய ஜவுளித் தொழிலின் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப ஜவுளி: தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது ஒரு தற்கால துறை ஆகும். உள்கட்டமைப்பு, நீர், சுகாதாரம், பாதுகாப்பு, பாதுகாப்பு, ஆட்டோமொபைல், விமானப் போக்குவரத்து ஆகியவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் செயல்திறனை இதன் பயன்பாடு மேம்படுத்தும். இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
- சமர்த் (திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பு): பாரம்பரியத் துறையில் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள வேலையற்ற இளைஞர்களின் திறன் கட்டமைப்பை இலக்காகக் கொண்ட வேலை வாய்ப்பு சார்ந்த திட்டம்.
- இயற்கை இழைகள்: மத்தியத் துறைத் திட்டமான “சில்க் சமாக்ரா” பட்டுத் துணியின் தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி ஆதரவு, தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.
- ஜவுளிகளின் பாரம்பரிய வாழ்வாதாரத் துறை - கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள்: கைத்தறி மேம்பாடு, நெசவாளர்களின் நலன் மற்றும் கைத்தறி தொழிலின் மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் திட்டங்களை ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கைத்தறி பொருட்களின் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்க, நெசவாளர்களுக்கான சர்வதேச கண்காட்சிகள் மற்றும் உள்நாட்டு சந்தைப்படுத்தல் நிகழ்வுகளை கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்து வருகிறது.
- இந்திய பொம்மைகளை ஊக்குவித்தல்: கைவினைப் பொருட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைப் பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொம்மைத் தொழிலை மேம்படுத்த, தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அனைவரும் “பொம்மைகளுக்காக அணிசேர வேண்டும்” என்று மாண்புமிகு பிரதமர் தனது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் வலியுறுத்தினார். இந்திய அரசின் 14 அமைச்சகங்கள்/துறைகளின் ஒத்துழைப்புடன் இந்திய ‘டாய் ஸ்டோரி’க்கான தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- India has the unique advantage of a full value chain for textile production. With the country having a large market, it is growing rapidly with low cost manpower. Domestic textile and apparel production is valued at $ 140 billion. Textile and apparel exports are valued at $ 40 billion.
- The textile and apparel industry contributes 2% to India's GDP and 11% to GDP in 2019.
- In just three months after the impact of the Covid, India has established a personal protective equipment industry worth Rs 7000 crore, making it the second largest country in the world.
- Prime Minister's Mitra Parks: The government has approved the setting up of 7 Prime Minister's Mega Integrated Textile Zone and Clothing (Mitra) Parks at an estimated cost of Rs 4445 crore over 5 years.
- Textile Manufacturing Incentive (PLI) Scheme: The Textile Manufacturing Incentive Scheme focuses on the development of the textile sector and will provide Rs 10,683 crore over five years.
- Revised Technology Improvement Fund Scheme: The Technology Improvement Fund Scheme is a loan-linked subsidy scheme designed to modernize the Indian textile industry and improve technology, facilitate trade, create employment and promote exports.
- Technical Textiles: The technical textile division is a contemporary sector. Its use will enhance the performance of various sectors of the economy, including infrastructure, water, sanitation, safety, security, automobile and aviation. The Government has launched the National Technology Textile Program to promote research and development initiatives in this field.
- Samarth (Skill Development and Skill Building): An employment oriented project aimed at improving the skills of weavers and artisans in the traditional field and building the skills structure of unemployed youth in the textile value chain.
- Natural Fibers: Silk Samagra, a central sector project, provides research support, technical and financial assistance to improve the quality and production of silk.
- Traditional Livelihood Sector of Textiles - Handloom and Handicrafts: The Ministry of Textiles is implementing programs across the country for the development of handloom, welfare of weavers and revival and development of the handloom industry. The Handloom Export Development Council is organizing international exhibitions and domestic marketing events for weavers to promote the marketing of handloom products.
- Promoting Indian Toys: In his "Voice of the Mind" program, the Hon'ble Prime Minister stressed the need for all to "line up for toys" to promote the Indian toy industry, including handicrafts and handicrafts, with a focus on the theme of Autonomous India. The National Action Plan for Toy Story India has been developed in collaboration with 14 Ministries / Departments of the Government of India.