அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி - இந்திய விமானப் படை ஒப்புதல்
- புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த 2016 பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது.
- மறுநாள் இதற்கு பதிலடியாக இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது, அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் விரட்டியடித்தன.
- அப்போது இந்திய விமானப் படையின் விங் கமாண்டரான அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் தவறிவிழுந்தார்.
- அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. இந்த சம்பவங்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பிறகு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அபிநந்தனை 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் விடுவித்தது.
- அப்போது இந்தியர்களின் மனதில் நிஜ ஹீரோவாக அபிநந்தன் உயர்ந்தார். அவருக்கு கடந்த ஆண்டு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- இந்நிலையில் அபிநந்தன் வர்த்தமானுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்க இந்தியா விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட நடைமுறை முடிந்ததும் அவர் பதவி உயர்வு பெறுவார்
12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து தியானம் கேதார்புரியில் ரூ.400 கோடி திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- உத்தரகாண்டில் கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் கேதார்நாத் கோயில் சேதமடைந்தது. மேலும், கோயில் அருகில் இருந்த ஆதி குரு சங்கராசாரியார் சமாதி, சிலையும் அடித்து செல்லப்பட்டது. இந்த சேதங்களை சீரமைப்பதற்கான பணி, கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.
- உத்தரகாண்டின் கேதார்நாத்தில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆதி குரு சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கேதார்புரியில் ரூ.400 செலவிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
புக்கர் பரிசு 2021
- இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டு தோறும் புக்கர் பரிசிற்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய 'தி பிராமிஸ்' என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் 'தி பிராமிஸ்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுத் தொகையான ரூ.50.21 லட்சம் டாமன் கல்கட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக டாமன் 2 முறை புக்கர் பரிசின் இறுதிச் சுற்று வரை தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி உற்பத்திக்கு தடைகோரும் ஒப்பந்தத்தை தவிர்த்த வளர்ந்த நாடுகள்
- காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பாக உலக நாடுகள் பங்குபெற்றுள்ள காலநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் கடந்த நவம்பர் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
- கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கும் விதமாக நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் உலகின் 40 நாடுகள் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளன.
- போலந்து, உக்ரைன், இந்தோனேசியா, தென்கொரியா, வியந்நாம் உள்ளிட்ட 23 நாடுகள் புதிய நிலக்கரி ஆலைகளை அமைக்கும் முடிவைக் கைவிடுவதாகவும் அறிவித்துள்ளன.
- சீனா, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நிலக்கரி உற்பத்தியை தற்போதைய சூழலில் உடனடியாக நிறுத்த முடியாது எனவும், 2040ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
650 மில்லியன் டாலர் மதிப்பிலான 280 அதிநவீன விமான ஏவுகணைகள் செளதி அரேபியாவுக்கு வழங்கும் யு.எஸ்
- ஏமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதல்களை (ட்ரோன் தாக்குதல்களை) எதிர்கொள்ள செளதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டாலர் மதிப்பினா 280 அதிநவீன விமான ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.