தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் - தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு
- புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும், கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இது தவிர, தாம்பரம் நகராட்சி எல்லையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாம்பரம் நகராட்சிக்கு சமமாக வளர்ந்து வருகின்றன.
- எனவே, தாம்பரம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர், பாதாள சாக்கடை போன்றவற்றை விரிவுபடுத்தப்படும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைந்துள்ளதால், அதற்கு ஈடாக தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்
- இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது.
- இதனையடுத்து, 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிறுவனம் அமைத்து அரசாணை வெளியீடு
- தமிழ்நாடு காலநிலை மாற்ற நிறுவனம் புதிதாக ஏற்படுத்தப்பட்டதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் அரசாணையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் இருப்பார்
- மேலும், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை பொறியாளர் உள்பட 7 பேர் நிர்வாக குழுவில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழக அரசின் அரசாணையின்படி நிறுனத்தின் தலைவராக, சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக, இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தலைவராக கூடுதல் பொறுபபு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தீப ஒளியில் ஜொலித்த சரயு நதிக்கரை - 12 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை
- உத்தரப் பிரதேச அரசு சார்பில் அயோத்தியில் கடந்த ஆண்டு 6 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. அதனை இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில் 12 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அயோத்தியில் 3 லட்ச தீபங்களும், சரயு நதிக்கரையில் 9 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன.
- இருளை கிழித்து சுடர்விட்ட தீபங்களால் சரயு நதிக்கரை முழுவதுமே பிரகாசமாக ஜொலித்தது. அதே போல் அயோத்தியில் லேசர் மின்விளக்கு ஒளிர, வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.