Type Here to Get Search Results !

TNPSC 29th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'டுவிட்டர்' சி.இ.ஓ இந்தியரான பரக் அகர்வால் நியமனம்
  • அமெரிக்காவைச் சேர்ந்த, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.
  • இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த இந்தியரான பரக் அகர்வால், புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை ஐ.ஐ.டி.,யில் படித்த பரக் அகர்வால், உயர் கல்வியை அமெரிக்காவில் முடித்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
  • நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 
  • அதன்படி நாடாளுமன்றத்தில் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது. 
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதிநவீன ஹைபா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா
  • வெண்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் அட்மிரல் கோா்ஷ்கோவ் கப்பலில் இருந்து ஹைபா்சோனிக் ஏவுகணை வகையைச் சோந்த 'சிா்கான்' ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அது 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சிா்கான் ஏவுகணை ஒலியைவிட ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என்றும், 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய திறன் பெற்றது என்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் - ஹர்பஜனை முந்தினார் அஸ்வின்
  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட். 
  • இதன்மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.  80 டெஸ்டுகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். 
  • 619 - அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்)
  • 434 - கபில் தேவ் (131 டெஸ்டுகள்)
  • 418*- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்)
  • 417 - ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்)
இந்தியாவில் முதன்முதலாக காற்று-சோலார் கலப்பின ஆற்றலைப் பயன்படுத்தும் எம்.ஜி மோட்டார்
  • சூரிய ஒளி ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல் போன்றவற்றை கொண்டு நமக்கு தேவையான மின்சாரம் முதல் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் வரை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். 
  • இந்நிலையில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒரு புதுவித கலப்பின ஆற்றல் மூலம் தனது உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.
  • ஹலோல் என்கிற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி மோட்டாரின் உற்பத்தி ஆலையில் 50% புதுப்பிக்க கூடிய ஆற்றலை கொண்டு இயங்குகிறது. 
  • இந்நிலையில் காற்று ஆற்றலை தனது ஆலைகளில் பயன்படுத்த ராஜ்கோட்டில் உள்ள கிளீன் மேக்ஸ் (CleanMax Wind Solar Hybrid Park) நிறுவனத்துடன் இணைத்து காற்று மற்றும் சூரிய ஒளியினால் கலப்பின ஆற்றலை உருவாக்கி பயன்படுத்த உள்ளது.
  • ஹலோலில் உள்ள உற்பத்தி ஆலைக்கு சுமார் 4.85 மெகாவாட் காற்று-சூரிய கலப்பின ஆற்றலை பயன்படுத்துவதாக ஷாங்காய் ஹைட்ரஜன் புரொபல்ஷன் டெக்னாலஜி லிமிடெட் (SAIC) தெரிவித்துள்ளது.
  • இதன் மூலம், 15 ஆண்டுகளில் தோராயமாக இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கார்பன்டை ஆக்ஸைடை குறைக்க முடியும் என்று எம்ஜி மோட்டார் கூறுகிறது. அதாவது 13 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு இது சமம். 
‘ஒமிக்ரான்' பெயருக்கு பின் உள்ள சுவாரஸ்ய கதை
  • உருமாறிய கொரோனா தொற்றுக்கு ALPHA, BETA, GAMMA, DELTA என கிரேக்க அகர வார்த்தைகளில் பெயர் வைக்கப்படுவது வழக்கம்.
  • அதன்படி 'NU' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 'NEW' என உச்சரிக்கப்படும் என்பதால் தவிர்ப்பு. அடுத்த XI என்ற வார்த்தை சீன அதிபரின் பெயருடன் தொடர்புடையதால் தவிர்ப்பு
  • ஏற்கனவே சீனாவில் இருந்து கொரோனா பரவியது என குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே 15வது கிரேக்க அகர வார்த்தையான ஒமிக்ரான் WHOஆல் சூட்டப்பட்டது
2021ம் ஆண்டிற்கான வார்த்தையாக 'தடுப்பூசி' தேர்வு
  • அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் 'டிக்ஷனரி' எனப்படும் அகராதிகளுக்கு பெயர்பெற்றது.
  • இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, சிறந்த வார்த்தையாக அறிவித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு 'பேண்டமிக்' எனப்படும் பெருந்தொற்றை குறிப்பிடும் வார்த்தை தேர்வு செய்யப்பட்டது.
  • இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வார்த்தை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'வேக்சின்' எனப்படும் தடுப்பூசியை குறிப்பிடும் வார்த்தையை மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஸ்வீடனின் பிரதமராக மேக்தலீனா மீண்டும் தேர்வு
  • ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. மொத்தமுள்ள 349 இடங்களில் 175 எம்.பி.க்களின் எதிர்ப்பு இல்லாதவர்கள் மட்டுமே பிரதமராக முடியும்.
  • இந்நிலையில் கடந்த வாரம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடந்தது. அதில் 117 பேர் நிதி அமைச்சராக இருந்த மேக்தலீனாவுக்கு ஆதரவாகவும் 174 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். 
  • ஆனால் 175 பேர் எதிர்ப்பு இல்லாததால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மேக்தலீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
  • ஆனால் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் பார்லியில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஏழு மணி நேரத்தில் பிரதமர் பதவியில் இருந்து மேக்தலீனா விலகினார்.
  • இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க மீண்டும் ஓட்டெடுப்பு நடந்தது.இதில் மேக்தலீனாவுக்கு ஆதரவாக 101 பேரும் எதிராக 173 பேரும் ஓட்டளித்தனர். 
  • மேக்தலீனாவுக்கு ஆதரவாக முக்கிய கட்சியான சென்டர் கட்சியின் 75 எம்.பி.க்களும் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சமூக ஜனநாயகக் கட்சியின் மேக்தலீனா ஆண்டர்சன் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அடுத்தாண்டு செப்.ல் பார்லிக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மனாமா சேலஞ்சர் டென்னிஸ்: ராம்குமார் சாம்பியன்
  • பஹ்ரைனில் நடந்த மனோமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஏடிபி சேலஞ்சர் தொடர்களில் 7 முறை பைனலுக்கு முன்னேறி உள்ள ராம்குமா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel