பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை பிரச்சாரம் - தமிழக அரசு
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜன.1 முதல் அமலில் உள்ளது.
- இதை செயல்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. அதனால் இன்று வரை பிளாஸ்டிக் தடையை முழுமையாக அரசால் செயல்படுத்த முடியவில்லை.
- இந்நிலையில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம் ஒன்றை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு அறிவித்திருந்தது.
- அதனைத் தொடர்ந்து தமிழக மக்களின் பாரம்பரிய பழக்கமான மஞ்சள் பையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதிமாக 'மீண்டும் மஞ்சள் பை' என்ற பெயரில் மக்கள் இயக்கம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'அவுட் ஸ்டாண்டிங் ரெஸ்பான்ஸ் ஃபார் கரோனா' விருதுபெற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- சென்னை மேயராக பணியாற்றியுள்ள தற்பொழுதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் உள்ளிட்ட உடல் நலம் சார்ந்த விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர்.
- தமிழக சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் திறம்படச் செயலாற்றி கரோனா ஒரு நாள் தொற்று எண்ணிக்கையைக் குறைத்தது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்ட நிலையில் பலதரப்பிலிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
- இந்நிலையில் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 'ஹவுஸ் ஆஃப் காமென்ஸ்' அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'அவுட் ஸ்டாண்டிங் ரெஸ்பான்ஸ் ஃபார் கரோனா' என்ற தலைப்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு விருது வழங்கப்பட்டது.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ. 225.24 கோடி மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை செயல்படுத்த நவம்பர் 26, 2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அனுமதிக்கப்பட்ட 12 குடிநீர் திட்டங்களில் 11 பல கிராமங்களுக்கானவையும், ஒன்று ஒரே கிராமத்திற்குமானதும் ஆகும். இதன் மூலம் 19,000 கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு கிடைக்கும்.
- இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 15.18 லட்சம் கிராமப்புற குடும்பங்களில், 7.41 லட்சம் (48.79%) வீடுகளில் குழாய் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 2.64 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.
- ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை பரிசீலிக்கவும், அங்கீகரிக்கவும் மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு உள்ளது. இந்திய அரசின் தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தால் பரிந்துரைக்கப்பட்டவரும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
- ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குழாய் நீரை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தவும், தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் சிரமத்திலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை விடுவிக்கவும், ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.