தமிழகத்தில் 22 மாவட்டங்களில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு - கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளது. கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், சிமென்ட் அரைத்தல் ஆலையை தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் ஆலையை டிவிஎஸ் மோடார் நிறுவனம் அமைக்க உள்ளது.
விமானப் படை நவீனமயத்துக்கு ரூ.2236 கோடி அனுமதி
- விமானப் படையின் நவீனப்படுத்தும் மற்றும் செயல்பாட்டுக்குத் தேவையான கருவிகள் ஆயுதங்கள் வாங்க 2236 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ராணுவக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- விமானப் படை சேவைக்காக ஜிசாட் - 7 சி விண்கலத்தை ஏவுவது எந்தப் பகுதியிலும் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்தும் மென்பொருள் உருவாக்குவது ஆகியவை இதில் அடங்கும்.
- இம்மாத துவகத்தில் ராணுவத்துக்கு 12 இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை வாங்கும் 7965 கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பூசி சான்றுக்கு அங்கீகாரம் - இந்தியா நேபாளம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
- காத்மாண்டில் உள்ள நேபாள சுகாதாரத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு சுகாதாரத் துறைச் செயலா் ரோஷன் போக்ரேலும் நேபாளத்துக்கான இந்திய தூதா் வினய் எம். கவாத்ராவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். நேபாள சுகாதாரத் துறை அமைச்சா் விரோத் காத்திவாடாவும் உடனிருந்தாா்.
- கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியா்கள் நேபாளத்துக்கும், அந்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இந்தியாவுக்கும் இனி சிரமமின்றி பயணம் செய்யலாம்.
சிறந்த நுாலகருக்கான விருது
- தமிழகம் முழுவதும், மாவட்ட அளவில் சிறந்த நுாலகருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக, விருதுகள் வழங்குவது தள்ளிப்போனது.
- இதில், மாநிலம் முழுவதும், 33 நுாலகர்கள் விருதுக்கு தேர்வாகினர். திருப்பூர் மாவட்ட அளவில், பல்லடம் அடுத்த கரடிவாவியை சேர்ந்த தனபாக்கியம், 43, சிறந்த கிளை நுாலகராக தேர்வு செய்யப்பட்டார்.
- இவருக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்.
- விருது பெற்ற தனபாக்கியம், 99 புரவலர்கள், மற்றும் 700க்கும் அதிகமான வாசகர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அரசாணை வெளியீடு
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 -ன் கீழ் தமிழ்நாட்டில்உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்.
- இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு மாவட்டத்திற்கு 3 ஊர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மேலும், இத்திட்டத்தில் சென்னை தவிர்த்து மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு அரசு ஆணையிட்டுள்ளது.
- முதலீடு, அடிப்படைக் கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிப்பது குறித்து 2021 நவம்பர் 15 அன்று முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
- இந்தக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியின் படி மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 47,541 கோடி என்பதற்கு பதிலாக இரண்டு தவணைகளுக்குரிய ரூ.95,082 கோடியை 2021 நவம்பர் 22 அன்று மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.3878.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.