எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்த 4 வயது இந்திய சிறுவன்
- மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஸ்வேதா கோலெச்சா - கவுரவ் கோலெச்சா என்ற இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வந்தனர. இவர்களுக்கு 4 வயதில் அத்விக் என்ற மகன் உள்ளார்.
- பயிற்சிகளை மேற்கொண்ட அத்விக், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்துள்ளார். கடந்த அக்டொபர் 8-ஆம் தேதி மழை ஏற துவங்கி கடந்த 6-ஆம் தேதி, 5,364 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அடித்ததளத்தை அடைந்தார்.
- இதன் மூலம் ஆசியாவிலிருந்து எவரஸ்ட் அடித்தள முகாமை அடைந்த மிகக் குறைந்த வயது நபர் என்ற பெருமையை அத்விக் பெற்றுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியின விடுதலை வீரா்கள் அருங்காட்சியம் கட்டுமானம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தாா்
- ரூ 15 கோடி மதிப்பீட்டில் இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி கெய்டின்லியு பிறந்த இடமான தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்திருந்தது.
- விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தையும், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பழங்குடியினர் கவுரவ தினத்தையும் நவம்பர் 15 முதல் பழங்குடியினர் விவகார அமைச்சகம் கொண்டாடி வருகிறது.
- மணிப்பூரில் ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரா்கள் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா்.
- இந்த நிகழ்ச்சியில் மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- ராணி கெய்டின்லியு 1915-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் பிறந்தார்.
- 13 வயதில் ஜடோனாங்குடன் இணைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராளியாக மாறினார். ஜடோனாங் தூக்கிலிடப்பட்ட பிறகு, கெய்டின்லியு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார்.
2022 முதல் UIP பயன்படுத்தி பணம் செலுத்தும் நடைமுறை - புதிய ஒப்பந்தம் கையெழுத்து
- 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுபிஐ தற்போது இந்தியாவில் பல சேவைகளை வழங்கி வருகிறது. தற்பொழுது யுபிஐ உலக நாடுகளுக்கு பயனுள்ளதாக மாறி வருகிறது.
- முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவையான யூ.பி.ஐ தளத்தை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பயன்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் இந்தியா மற்றும் குளோபல் டிஜிட்டல் காமர்ஸ் நெட்வொர்க் இண்டர்நேஷனல் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.1%-ஆக இருக்கும் - எஸ்பிஐ
- திரட்டப்பட்ட தற்போதைய தகவல்களின் அடிப்படையில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 8.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- அதேபோன்று, நடப்பு முழு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சியும் மறுமதிப்பீட்டில், முந்தைய மதிப்பீடான 8.5-9 சதவீதத்திலிருந்து, 9.3-9.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 20.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், 2022 நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாகவும்; இரண்டாவது காலாண்டில் 7.9 சதவீதம்; மூன்றாவது காலாண்டில் 6.8 சதவீதம்; நான்காவது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
'வீர் சக்ரா' விருது பெற்றார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்
- விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்தமான், 'மிக் - 21' ரக போர் விமானத்தை இயக்கினார்.அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திய பாக்., ராணுவத்தின் 'எப் - 16' ரக போர் விமானத்தை, அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
- பின், அபிநந்தனின் துணிச்சலை பாராட்டும் விதமாக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் நிலைக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.
- இந்நிலையில் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
சையது முஸ்தக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் தமிழகம் தமிழக அணி சாம்பியன்
- சையது முஸ்தக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
- 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி பிரதீக் ஜெயின் வீசிய அந்தப் பந்தை தமிழக வீரர் ஷாருக்கான் சிக்ஸருக்கு பறக்க விட்டு, தமிழக அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
- இதன் மூலம், 3வது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டார்.
- (சி-டி.ஏ.சி-டி) என்பது இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.
- நாடு முழுவதிலும் உள்ள இடர்பாடு அழைப்பு பதிலளிப்பு மேலாண்மை அமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளில் காவல் துறையினருடன் நீண்டகாலமாக இணைந்திருந்ததன் மூலம், அவசரநிலை பதிலளிப்பு உதவி அமைப்புக்கான (இ.ஆர்.எஸ்.எஸ்) 'ஒரு இந்தியா ஒரு அவசர எண் 112' ஐ செயல்படுத்துவதற்கான முழுமையான தீர்வை உருவாக்கும் பொறுப்பிற்காக சி-டி.ஏ.சி-டியை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்ததுடன், நாடு முழுவதும் இ.ஆர்.எஸ்.எஸ்-112 நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான தீர்வு வழங்குநராக சி-டி.ஏ.சி-டியை நியமித்துள்ளது.
- அதன்படி, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி சி-டி.ஏ.சி்-டி இ.ஆர்.எஸ்.எஸ்-112 முதன்மைத் தீர்வினை உருவாக்கியுள்ளது. தற்போது சி-டி.ஏ.சி-டியின் இ.ஆர்.எஸ்.எஸ்-112 நிறுவும் பணியானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளது.
- இப்போது, செயல்திறன் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் கனடாவின் என்.ஜி-911 அமைப்புகளுடன் பொருந்தக்கூடிய, அடுத்த தலைமுறை முன்னேற்றத் தீர்வாக இ.ஆர்.எஸ்.எஸ்-112 யை நவீனப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.