டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
- ஈடன் கார்டனில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது.
- அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன் மட்டுமே எடுத்து, 73 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா 3-0 என ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
அதிநவீன கருவிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டினம் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு
- மத்திய பாதுகாப்புத் துறை 15பி என்ற பெயரில் 4 அதி நவீன போர்க் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
- அதன்படி, முதல் அதிநவீன போர்க் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மும்பை கப்பல்கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. அதன்பின், பல்வேறு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
- இதையடுத்து 7,400 டன் எடையுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டினம் போர்க் கப்பல் கப்பற்படையில் இணைக்கப்பட்டது. அதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. போர்க் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப் பணித்தார்.
- தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் ஏராளமான ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும்ராக்கெட்டுகள், ரேடார்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட போர் சூழ்நிலையின் போது தேவைப்படும் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.
- மேலும், சூப்பர்சானிக் சென்சார் கள் வசதியும் உள்ளது. அதிநவீன துப்பாக்கிகள், மின்னணுபோர்க் கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்தப்போர்க்கப்பலில் இடம்பெற்றுஉள்ளன.
பாரா பாட்மிண்டனில் தங்கம் வென்றார் சுகந்த்
- உகாண்டாவின் கம்பலா நகரில் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் ஆடவருக்கான எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுகந்த் கதம் சகநாட்டைச் சேர்ந்த நிலேஷ் பாலுவை எதிர்த்து விளையாடினார்.
- இதில் சுகந்த் 21-16, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டின் மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இதில் பிரமோத் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், மனோஜ் சர்கார் ஜோடி 21-10, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் சகாட்டின் மொகமது அர்வாஸ் அன்சாரி, தீப் ரன்ஜன் பிஸோயி ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது.
- எஸ்எல் 3, எஸ்யு 5 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், பாலக் ஜோஷி ஜோடி இறுதிச் சுற்றில் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான ருத்திக் ரகுபதி, மானஷி கிரிசந்திரா ஜோஷியிடம் வீழ்ந்தது.
- இந்தத் தொடரில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை குவித்தது.
சூடான் பிரதமரிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவம் ஒப்புதல்
- சூடானில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோகின் அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
- அந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், பிரதமா் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க ராணுவம் ஒப்புக் கொண்டது.
- மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் விடுவிக்கவும் ராணுவம் சம்மதித்தது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதில் ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்தன.
- மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சுதந்திரமான ஓா் அமைச்சரவைக்கு ஹாம்டோக் தலைமை வகிப்பாா். ஆட்சியில் தனது பிடியை இறுக்கும் வகையில் புதிய இறையாண்மை கவுன்சிலை ராணுவம் அமைத்துள்ளது.
- இந்திய-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பான “எக்ஸ் சக்தி 2021”, 15 நவம்பர் 2021 அன்று பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தொடங்கியது. மூன்று அதிகாரிகள், மூன்று இளநிலை அதிகாரிகள் மற்றும் 37 வீரர்கள் இந்திய தரப்பில் இருந்து பங்கேற்றுள்ளார்கள்.
- கூட்டுத் திட்டமிடல், செயல்பாடுகளின் பரஸ்பர புரிதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் கூட்டாகச் செயல்படுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு அம்சங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் இதுவரையிலான பயிற்சியின் போது கவனம் செலுத்துப்பட்டுள்ளது.
- முதல் உலகப் போரின் போது 1,002 இந்திய வீரர்களின் உடல் தகனம் செய்யப்பட்ட மார்சேயில் உள்ள மசார்குவிஸ் போர் கல்லறையை இந்திய குழு பார்வையிட்டது. வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்திய மற்றும் பிரான்ஸ் குழுக்கள் இணைந்து மரியாதை செலுத்தினர்.
- ஐஐடி கவுகாத்திக்கு இன்று சென்ற மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர ப்ரதான், நானோ தொழில்நுட்பத்திற்கான அதிநவீன மையம் (சிஎன்டி), இந்திய அறிவுசார் அமைப்புக்கான மையம் (சிஐகேஎஸ்) மற்றும் இரண்டு தங்கும் விடுதிகளை திறந்து வைத்தார்.
- தேசிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்தல் குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். அஸ்ஸாம் கல்வி அமைச்சர் டாக்டர் ரனோஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஓஜா ஆகியோர் உடனிருந்தனர்.