Type Here to Get Search Results !

நீர் தரக் குறியீடு 2019 / WATER QUALITY CODE 2019

 

TAMIL
 • 1.3 பில்லியன் இந்திய மக்களுக்கு வெறும் 4% மட்டுமே ஃபிரஷ் வாட்டர் என்று சொல்லப்படும் சுத்தமான நீர் உள்ளது. அதிலும் கிராம புறங்களுக்கு சரியான அளவில் நீர் பயன்பாடு இன்னும் சென்று அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • இதை கருத்தில் கொண்டு, "ஜல் ஜீவன் மிஷன்" என்கிற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்கள் மற்றும் நகர் புறங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு சென்று, மக்கள் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 
 • நவம்பர் 4, 2021 வரை ஜல் ஜீவன் திட்டத்தை பயன்படுத்தி மொத்தமுள்ள 19.22 கோடியில் சுமார் 8.45 கோடி (44%) கிராம புறங்களுக்கு குழாய் வழியில் குடிநீர் பயன்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 • இதில் 6 மாநிலங்கள் மற்றும் யூனின் பிரதேசங்களில் உள்ள கிராம புறங்கள் 100% குழாய் இணைப்புகளை முழுமையாக பெற்றுவிட்டது என அரசு அறிவித்துள்ளது. கோவா, தெலங்கானா, ஹரியானா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியவை இவற்றில் அடங்கும். 
 • முன்பை காட்டிலும் தற்போது சில காலமாக கிராம மற்றும் நகர் புறங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் படி 2015-2016 ஆண்டை விடவும் 2019-2020 ஆண்டுகளில் 22 மாநிலங்களுக்கு தேவையான குடிநீர் வசதி வழங்கும் திட்டம் பெரிய அளவில் அடைந்துள்ளதாக வெளியிட்டுள்ளது.
 • உலக அளவில் நிலத்தடி நீரை பெரிதாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு நீரின் தரமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக 'நீர் தரக் குறியீடு 2019' ஆண்டில் நடந்த ஆய்வில் தெரிகிறது. 
 • இதில் மொத்தமுள்ள 122 நாடுகளில் இந்தியா 120 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையினாலும், தொழிற்சாலைகளாலும், மாசுபாடுகளாலும் நீர் ஆதாரங்கள் முழுவதும் அசுத்தமாகி வருகிறது.
 • இந்த ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களை சுத்தமான முறையில் வைத்துக்கொள்ளும் வழிமுறையும் செய்யப்படுகிறது. இதன்மூலம் பல கிராம புறங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. 
 • அதன்படி உத்தர பிரதேசத்தில் 12.4% கிராமப்புற மக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர். மேலும் அதிக நீர் தட்டுப்பாடுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 20.91% கிராமப்புறங்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி உள்ளனர்.
 • இந்த வரிசையில் அசாம் (22%), லடாக் (16.62%), ஜார்கண்ட் (15.16%), மேற்கு வங்கம் (13.48%) மற்றும் சட்டிஸ்கர் (13.23%) ஆகிய மாநிலங்களுக்கு குறைந்த அளவிலே இந்த ஜல் ஜீவன் திட்டம் சென்றடைந்துள்ளது. அதே போன்று நகர் புறங்களில் உள்ள சேரிகளில் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் உள்ளது. 
 • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் வெளியிட்ட அறிக்கைபடி 2050 ஆம் ஆண்டில் 30 இந்திய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. 
 • சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் டெல்லியில் வசிக்கும் 44% சேரி வாழ் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காக பாட்டில் நீரையே பயன்படுத்துவதாக வெளியிட்டுள்ளனர்.
ENGLISH
 • Only 4% of India's 1.3 billion people have access to clean water, also known as fresh water. It is noteworthy that the proper use of water in rural areas has not yet reached.
 • With this in mind, the Central Government launched the "Jal Jeevan Mission". The objective of the project is to provide drinking water to rural and urban areas through pipelines to assist people in their utilization.
 • Of the total 19.22 crore utilized under the Jal Jeevan scheme till November 4, 2021, about 8.45 crore (44%) have been piped to rural areas for drinking water use.
 • Of these, the government has declared that rural areas in 6 states and Union Territories have received 100% complete pipe connections. These include Goa, Telangana, Haryana, Dadra and Nagar Haveli, Andaman and Nicobar Islands and Pondicherry.
 • Safe drinking water has been available in rural and urban areas for some time now more than ever before. According to a recent National Family Welfare Survey, the plan to provide drinking water to 22 states in 2019-2020 has reached greater levels than in 2015-2016.
 • India is the third largest user of groundwater in the world. But the water quality here is in a very bad state, according to a study conducted in the 'Water Quality Index 2019'.
 • Out of a total of 122 countries, India is ranked 120th. The entire water source is being polluted by the growing population, factories and pollution.
 • This aquatic life project also works to keep water sources such as rivers, ponds and lakes clean. It has thus completed the project of providing piped drinking water to many rural areas.
 • Accordingly, 12.4% of the rural population in Uttar Pradesh has met their drinking water needs. In Rajasthan, which has the highest water shortage, 20.91% of the rural population has been provided with drinking water.
 • In this order, Assam (22%), Ladakh (16.62%), Jharkhand (15.16%), West Bengal (13.48%) and Chhattisgarh (13.23%) have reached the lowest level. Similarly, the problem of drinking water is high in slums in urban areas.
 • According to a report released by the World Wide Fund for Nature, 30 Indian cities will face water shortages by 2050. According to a recent survey, 44% of slum dwellers in Delhi use bottled water for their daily needs.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel