சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.
- இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார். கதிரேசன் பதிவியேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார்
மாநில டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
- உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நேற்று துவங்கிய மாநில டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றனர்.
- கடந்த, 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல், ஆண்டுதோறும் நடக்கும் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பங்கேற்று வருகிறார். சைபர் குற்றம், தகவல் பரிமாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ள நிவாரணம், தொழில்துறை முதலீடுகளுக்கான அனுமதிமற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
- இதுதவிர, வெள்ள மீட்பு பணிகள், நிவாரண உதவிகள், தமிழகத்தில் தொழில் தொடங்கஉள்ள நிிறுவனங்களுக்கான அனுமதி, நிதி மையத்தை சென்னையில் உருவாக்கி, வெளிநாட்டு நிதி முதலீடுகளை பெறுதல், வணிகவரி, பத்திரப் பதிவுதுறையில் வருவாயை பெருக்குவது, உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கான மறைமுக தேர்தலை நேரடி தேர்தலாக நடத்துதல்உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- 21-ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் திரு மார்ட்டின், ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.
- கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் இளைய தலைமுறையினரின் திறனை வெளிக்கொணரும் முயற்சியாக ‘75 நாளைய இளம் படைப்பாளிகள்’ போட்டியின் வெற்றியாளர்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று அறிவிக்கப்பட்டனர்.
- இதில் தமிழகத்தில் இருந்து 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயக்கம், படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை உள்ளிட்ட திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளரும் திறமைகள் போட்டி மதிப்பீட்டின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாகூரின் சிந்தனையில் விளைந்த புதுமையான முயற்சியே ‘75 நாளைய இளம் படைப்பாளிகள்’ போட்டி ஆகும். இதன் மூலம் திரைத்துறையின் நாளைய தலைவர்களுக்கான தளத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழா வழங்குகிறது.