லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
- கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் 1962 நவம்பர் 18-ல் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது. 18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர்.
- சீன ராணுவத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றனர். உடல் முழுவதும் குண்டு காயங்களுடன் ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். மறைவுக்குப் பிறகு இவருக்கு நாட்டின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
- இந்நிலையில் ரெசாங் லா போரின் 59-வது நினைவு தினத்தைமுன்னிட்டு, அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்.
கூகுளுடன் இணைந்து எம்எஸ்எம்இகளுக்கு ரூ.110 கோடி கடன்: சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி திட்டம்
- இந்திய சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) கூகுள் நிறுவனத்துடன் இணைந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.110 கோடி (15 மில்லியன் டாலர்) கடன்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.5 கோடி வரை ஆண்டு விற்பனைஉள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரைகடன் வழங்க சிட்பி திட்டமிட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களுக்கு வட்டிச் சலுகையுடன் கடன்உதவி வழங்குவது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021
- வங்கதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதிசுரேகா, முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- முன்னதாக நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ரிஷப் யாதவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார் ஜோதி சுரேகா. இறுதி சுற்றில் இந்திய ஜோடி 154-155 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யுன்ஹீ, சோய் யோங்கி ஜோடியிடம் தோல்வி கண்டது.
- வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. 6 அணிகளே இடம்பெற்றிருந்த மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா 'பை' வாய்ப்பு பெற்று நேரடியாக அரையிறுதிக்கு வந்தது.
- இதில் அங்கிதா பகத், மது வேத்வான், ரிதி ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி 6-0 (51-48, 56-50, 53-50) என்ற கணக்கில் வியத்னாம் மகளிா் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
- இதில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.
- இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது. இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது.
இந்திய திரைத் துறையில் சிறந்த ஆளுமைக்கான விருது ஹேமமாலினிக்கு அறிவிப்பு
- ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம்.
- நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் வழங்கப்பட உள்ளது.
'யுனெஸ்கோ' செயற்குழு இந்தியா மீண்டும் தேர்வு
- யுனெஸ்கோ நிறுவனத்தின், 193 உறுப்பு நாடுகளில், 58 நாடுகள் செயற்குழு உறுப்பினராக உள்ளன. இந்நிலையில் யுனெஸ்கோ செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 164 ஓட்டுகள் பெற்று இந்தியா மீண்டும் செயற்குழு உறுப்பினராக தேர்வானது.
- இந்தியா 2021 - 25ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிக்கும். ஆசிய - பசிபிக் நாடுகளில் சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்னாம், குக் தீவுகள் ஆகியவையும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வாகி உள்ளன.
அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு
- தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது.
- அதன்படி, சி.ஏ.பவானிதேவி (வாள் சண்டை), எ.தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி, (தடகளம்), வி.சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்குத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டு 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை (நிலை) எண்.46, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.10.2021-ன் மூலம் ஆணையிட்டுள்ளது.
வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (18.11.2021) தலைமைச் செயலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
- நவம்பர் 18, 2021 அன்று மருந்துத் துறையின் முதல் உலகளாவிய கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
- இரண்டு நாள் உச்சிமாநாட்டில் 12 அமர்வுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் பல்வேறு பாடங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.