இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
- ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படும், ரிசர்வ் வங்கி சிறு முதலீட்டாளர் நேரடி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஆம்பட்ஸ்மேன் திட்டம் (ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம்) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரசிங் மூலம் துவக்கி வைத்தார்.
- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் - இந்திய ராணுவம் ஒப்புதல்
- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு ராணுவ நிரந்தர ஆணையம் துணையாக இருக்கிறது.
- ஆனால், தங்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும், இந்த ஆணையத்தில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்படுவதாக 11 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிரந்தர ஆணையத்தில் இவர்களை நவம்பர் 26ம் தேதிக்குள் சேர்க்கும்படி கெடு விடுத்தது. ஆனால், ஆணையத்தில் சேர்க்கப்படுவதற்கான சில தகுதிகளை இவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று ராணுவ தரப்பில் கூறப்பட்டது.
- இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை அமல்படுத்தாத ராணுவத்துக்கும், அதன் தலைமை தளபதிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எச்சரிக்கையை விடுத்தது.
- இதனால், இவர்களை நிரந்தர ஆணையத்தில் சேர்ப்பதாக ராணுவம் ஒப்புக் கொண்டது. இதன்மூலம், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகரான உயர் பதவிகளுக்கும் செல்லும் வாய்ப்பு இந்த பெண் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
- வாரத்தின் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு (நிக்சி) நிறுவியுள்ளது. இதன் மூலம், நிக்சியின் அனைத்து பிரிவுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கப்படும்.
- இணையப் பரிமாற்றம், டாட் இன் பதிவகம் மற்றும் ஐஆர்ஐஎன்என் ஆகிய மூன்று வணிகப்பிரிவுகளுடன் நிக்சி இயங்கி வருகிறது. வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த முன்முயற்சியை நிக்சி எடுத்துள்ளது.
- 011-48202001 எனும் தொலைபேசி எண் மூலமாகவும் customercare@nixi.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் நிக்சி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
- நாட்டின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் (ஐஆர்சிடிசி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2021 நவம்பர் 10 அன்று சுற்றுலா அமைச்சகம் கையெழுத்திட்டது
- ஈஸ் மை டிரிப், கிளியர்டிரிப், யாத்ரா.காம், மேக் மை டிரிப் மற்றும் கோஇபிபோ ஆகியவற்றுடன் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுற்றுலா அமைச்சகம் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது.
- ஓடிஏ தளத்தில் சாத்தி (விருந்தோம்பல் துறைக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான அமைப்பு) மூலம் தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொண்ட தங்கும் இடங்களுக்கு விரிவான விளம்பரத்தை வழங்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.
- நிதி மற்றும் சாத்தி அமைப்பில் பதிவு செய்து கொள்ள அவர்களை ஊக்குவித்து, கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உள்ளூர் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- தங்குமிடங்கள் குறித்த அதிக தகவல்களை அளித்து பாதுகாப்பான, கவுரவமான மற்றும் நீடித்த வசதிகள் கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பதை ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.