தில்லியில் தொடங்கியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு
- ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து, தலிபான்கள் அங்கு புதிதாக ஆட்சியை அமைத்துள்ளனர்.
- தலிபான் ஆட்சியாளர்களுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒருசில நாடுகளே ஆதரவுதெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு வழங்க வில்லை.
- இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்களால் ஆசிய கண்டத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக உலகம் முழுவதும் கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் 8 நாடுகளின் மண்டல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
- பின்னர் கூட்டத்தில், எந்தவொரு சூழலிலும் தீவிரவாதிகளின் புகலிடமாகவோ, பயிற்சி, திட்டமிடல் நடைபெறும் இடமாகவோ, இவற்றுக்கு நிதியுதவி அளிக்கும் நாடாகவோ ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆப்கனில் நடைபெறும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- ஜப்பானில் பார்லிமென்ட் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நாட்டின் பிரதமராக புமியோ கிஷிடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- கிழக்காசிய நாடான ஜப்பானில் கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிஹைட் சுகா பதவி விலகுவதாக கடந்த செப்டம்பரில் அறிவித்தார். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பதவி வகிப்பார்.
- 31ம் தேதி 465 இடங்களை உள்ளடக்கிய பார்லி.க்கு பொதுத் தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை என இருந்த நிலையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி 261 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான கோமிட்டோ 32 இடங்களில் வென்றது.
எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நிதிச்சுமையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- எனினும், அடுத்த ஆண்டு முதல், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான 5 கோடி ரூபாயை, 2 தவணையாக பிரித்து, தலா 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
- மேலும், நாடு இப்போது பொருளாதார மீட்சிக்கான பாதையில் சென்று கொண்டிருப்பதால் மீதமுள்ள 2021-22 ஆம் நிதி ஆண்டு முதல் வரும் 2025 - 26 ஆம் நிதி ஆண்டு வரை தொகுதி மேம்பாட்டு நிதியை தொடர்ந்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் உள்ள 216 மாவட்டங்களில் நடத்தப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் நிதியை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 2021- 22 ஆம் நிதியாண்டு முதல் 2025-26 ஆம் நிதி ஆண்டு முதல் வரை 17,417 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- ஓமனில் நடைபெற்ற ஆசிய 49 இஆர் செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் வருண் தக்கர்/ கே.சி.கணபதி இணை சாம்பியன் ஆனது. ஆசிய போட்டியில் இது இந்த இணையின் 3ஆவது பதக்கமாகும்.
- இதேபோட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர்/ஸ்வேதா ஷெர்வெ போட்டியின் முடிவில் வருண்/கார் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
- 4 நாள்கள் நடைபெற்ற இப் கணபதி இணை முதலிடம் பிடிக்க, ஓமனின் முசாப் அல் ஹாதி/வாலித் அல் கின்டி இணை வெள்ளியும், அதே நாட்டின் அகமது அல் ஹசானி/அப்துல்ரஹ்மான் அல் மஷாரி ஜோடி வெண்கலமும் வென்றது.
- அடுத்தபடியாக, வருண்/கணபதி இணை அதே நகரில் வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் கலந்து கொள்கிறது.
- தீரமான பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறவும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும் நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவின் சுதந்திர போராட்டம் சந்தால்கர்கள், தமார்கள், கோல் இனத்தவர், பில், காசி இனத்தவர் மற்றும் மிசோ இனத்தவர் உட்பட இன்னும் பல பழங்குடியின சமுதாயத்தினரால் வலுப்படுத்தப்பட்டது.
- இந்த பழங்குடி இனத்தவர்கள் நடத்திய புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் அவர்களின் மகத்தான தைரியம் மற்றும் உன்னத தியாகத்தால் குறிக்கப்பட்டன.
- ஆங்கில ஆட்சிக்கு எதிரான, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின இயக்கங்கள், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டு நாடு முழுவதும் இந்தியர்களை ஊக்குவித்தன.
- எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் கரும்பு சார்ந்த பல்வேறு மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனாலுக்கு அதிக விலையை நிர்ணயிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விநியோக வருடம் 2020-21-க்கு (1 டிசம்பர் 2020 முதல் 30 நவம்பர் 2021 வரை) இது பொருந்தும்.
- சி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 45.69-ல் இருந்து ரூ 46.66 ஆக உயர்த்துவது, பி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 57.61-ல் இருந்து ரூ 59.08 ஆக உயர்த்துவது
- கரும்புச்சாறு, சர்க்கரை/சர்க்கரை பாகு மூலமாக வரும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ 62.65-ல் இருந்து ரூ 63.45 ஆக உயர்த்துவது, கூடுதலாக ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டும்
- நாட்டில் மேம்பட்ட உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இது உதவும் என்பதால், 2ஜி எத்தனாலுக்கான விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. தானியங்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனால் விலைகள் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு, இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) ரூ.17,408.85 கோடிக்கான உறுதியான விலை ஆதரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அதன் உள்கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதால், பருத்தி வளரும் பெரிய 11 மாநிலங்களில், 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறக்கிறது.
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் 10, நவம்பர் 2021 அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2021-22 சணல் ஆண்டில் (1, ஜூலை 2021 முதல் 30 ஜூன் 2022 வரை) பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கு சணல் பைகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2021-22 சணல் ஆண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி, உணவு தானியங்களை 100%-ம் சர்க்கரையை 20% அளவிற்கும் கட்டாயம் சணல் பைகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.
- இந்த ஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்நாட்டு கச்சா சணல் உற்பத்தி மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் நலனைப் பாதுகாக்க மேலும் உதவிகரமாக அமைவதோடு, தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஏற்ப, இந்தியா தற்சார்பு அடையவும் வழிவகுக்கும்.
- சணல் பேக்கேஜிங் பொருட்கள் ஒதுக்கீடு, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா சணலில் 66.57% பயன்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும். இந்தப் புதிய ஒதுக்கீடு முறை மூலம், சணல் ஆலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 0.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் அளித்துள்ளது.
- மூன்றாவது கோவா கடல்சார் கூட்டம் - 2021 கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்தது. இது இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளான வங்கதேசம், கமொரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் கடற்படை தலைவர்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றாக இணைத்தது.
- "கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெருகிவரும் புதுவகை அச்சுறுத்தல்கள்: இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைகளின் துடிப்பான பங்களிப்பு குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் இந்தாண்டின் கூட்டம் நடைபெற்றது. இந்திய பெருங்கடல் பகுதியில், அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
- வருடம் இருமுறை நடைபெறும் விமானப்படை தளபதிகள் மாநாடு பாதுகாப்பு அமைச்சரால் 2021 நவம்பர் 10 அன்று விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) தொடங்கி வைக்கப்பட்டது.
- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு ராஜ் குமார் ஆகியோரை விமானப்படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதரி வரவேற்றார். இந்திய விமானப்படை தளபதிகளை அமைச்சருக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.
- இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம், காணொலி வாயிலாக நவம்பர் 9, 2021 அன்று நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் (ராணுவ தளவாட உற்பத்தி) திரு.ராஜ்குமார் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தளவாட கொள்முதல் பிரிவு துணைச் செயலாளர் திரு.க்ரிகோரி கவுஸ்னர் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.
- இந்தக் குழுவின் கூட்டம், ஆண்டுக்கு இருமுறை, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம். எனினும், கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக இக்கூட்டம் தொடர்ந்து 2வது முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது.