Type Here to Get Search Results !

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை / Priority in Tamilnadu Government employment for those educated in the Tamil Way

TAMIL

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார். 
  • அப்போது, "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்" என்று அறிவித்திருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
  • இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.
  • இதேபோல போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோர் முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகவுள்ளது
ENGLISH
  • The governor addressed a series of legislative sessions on June 21 after the government headed by Chief Minister MK Stalin took office.
  • He had then declared, "The Government will ensure that the people of Tamil Nadu, especially those who have studied in the Tamil way and those who have studied in government schools, are given priority in employment for government posts."
  • Addressing a series of meetings on the grant request, Human Resource Management Minister Palanivel Thiagarajan announced that priority would be given to youth who have lost both their parents to the corona epidemic, first generation graduates and those who have studied Tamil in Tamil Nadu government schools.
  • In this situation, the government of Tamil Nadu has issued an order for this today. It has been reported that reservation will be adhered to in direct appointments made through employment centers and newspaper advertisements.
  • As a result, reservation is being implemented on a rotational basis for youths who have lost both their parents due to corona, first generation graduates and those who have studied Tamil in government schools.
  • Similarly, the reservation applies to soldiers who have lost their physical fitness in war, those who have lost their husbands, and caste-denied married couples. Sequence numbers are assigned to each section, and the reservation is rotated each time
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel