3வது முறையாக ஷி ஜின்பிங் அதிபா்சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு ஒப்புதல்
- அதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன அதிபராக தொடருவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. சீன அதிபராக ஷி ஜின்பிங் 2012-இல் பதவியேற்றாா். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான அதிபராக ஜின்பிங் கருதப்படுகிறாா்.
- இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு கூட்டத்தில் மூன்றாவது முறையாக ஜின்பிங் அதிபராக தொடர கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்நிலையில், அதிபராக ஜின்பிங் மூன்றாவது முறையாக தொடா்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநாடு பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
- இந்தக் கூட்டத்தில், மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் அதிபராக தொடர வழிசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கட்சியின் மாநாட்டை, முன்கூட்டியே ஷி ஜின்பிங்கின் இரண்டாவது அதிபா் பதவிக் காலம் நிறைவடையவுள்ள அடுத்த ஆண்டின் மத்தியில் நடத்துவதற்கும் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில், ரயில்வே வீராங்கனை நிஷா தாஹியா சாம்பியன் ஆனாா்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நிஷா சாம்பியன்
- தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில், ரயில்வே வீராங்கனை நிஷா தாஹியா சாம்பியன் ஆனாா். வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நிஷா 30 விநாடிகளில் தனது எதிராளியான பஞ்சாபைச் சோந்த ஜஸ்பிரீத் கௌரை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
- இதனிடையே, 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃப் சுற்றில் ஷஃபாலி, பிரியங்கா ஆகியோா் வெற்றி பெற்றனா். 76 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் குா்ஷரன்பிரீத் கௌரை எதிா்கொண்ட பூஜா சிஹக் காயம் காரணமாக பாதியிலேயே விலகியதால், அவா் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.
பிரிட்டனின் 'பெலோஷிப்' ஆக ஆந்திர பத்திரிகை புகைப்பட நிபுணர் தேர்வு
- விஜய வாடாவை சேர்ந்த பத்திரிகை புகைப்படக்காரர் தம்மா சீனிவாச ரெட்டி. பிரபல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர், இயற்கை, வனவிலங்கு மற்றும் பயணம் தொடர்பாக தனிப்பட்ட புகைப்படங்களையும் எடுத்து பதிவு செய்து வருகிறார்.
- பிரிட்டனில் உள்ள ராயல் போட்டோகிராபிக் சொசைட்டி, கொரோனா பாதிப்பின் போது பதிவான புகைப்படங்களின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான 'பெலோஷிப்' எனப்படும் மக்கள் பிரச்னையில் தோழமையுடன் பணியாற்றிய புகைப்பட நிபுணராக தம்மா சீனிவாச ரெட்டியை தேர்வு செய்துள்ளது.
- இந்த பெருமை பெரும் 18வது இந்தியர் தம்மா சீனிவாச ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் ஓபன் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நேத்ரா குமணன்
- ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கிரான் கனேரியா சாம்பியன்ஷிப் படகுப் போட்டித் தொடரில் கலந்து கொண்டு லேசர் ரேடியல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்றுள்ளார்.
- இது ஐரோப்பாவின் மண்டல அளவிலான ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியாகும். இந்தப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 3 வீரர்கள் உட்டட 3 நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயினின் Beneyto Lancho மற்றும் Martina Reino Cacho ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்தனர்.
ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51வது மாநாடு
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- தண்ணீர், விவசாயம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்ங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கடந்த முறை 2 நாட்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஓர் நாள் மட்டும் மாநாடு நடத்தப்படுகிறது.
- விடுதலையின் வைர விழாவை நாடு கொண்டாடும் வேளையில், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக தளத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாட்டுக்கு மத்திய இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தலைமை தாங்கினார்.
- வனங்களில் உள்ள பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கருத்துக்கள் குறித்து ஆலோசிக்க இந்த மாநாட்டை சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்தியது.
- நாட்டின் பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைகளை பாதுகாப்பதற்கான சிறந்த தளமாக விளங்கி வரும் “ஹுனார் ஹாத்தின்” 32-வது பதிப்பை 2021 நவம்பர் 12 அன்று லக்னோவில் மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்.
- மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள், பிஎஸ்பி டெவலப்பர்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியாளர்கள் ஆகியோருடனான கூட்டத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் காணொலி மூலம் தலைமை வகித்தார்.
- 'மின்துறையில் எரிசக்தி சேமிப்பை மேம்படுத்துவதற்கான விரிவான கொள்கை கட்டமைப்பு குறித்த அறிக்கை' பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.