Type Here to Get Search Results !

இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரம், மாநிலம், மாவட்டம் / LIST OF CLEANEST STATE, CITY AND DISTRICT IN INDIA

 

TAMIL
  • மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், தூய்மை இந்தியா இயக்கம்கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
  • இதன்கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தூய்மைப் பணியில் சிறந்து விளங்கும் நகர்ப்புற உள்ளாட்சிக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு விருதுகளை வழங்கினார்.
  • 28 நாட்களில் 4,320 நகரங்களில் இந்த தூய்மைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 4.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பட்டியல் எதிலும் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்து.
தமிழ்நாட்டிற்கு விருதுகள்
  • தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சி 43-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில், சென்னை 45-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • இப்போட்டியில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 48 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றிருந்தன. இதில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. இத்தரவரிசையில் தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெற்ற சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது.
  • இந்த ஆண்டுக்கான 'திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்' என்ற பிரிவின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது. 
  • சென்னை மாநகராட்சியின் சுகாதாரக் கல்வித்துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பைகள் மூலம் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
  • ஒவ்வொரு மாணவ, மாணவியும் மாநகராட்சியின் சுகாதாரத் தூதராக செயல்பட்டு, மாநகர தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, உறுதிமொழி எடுத்தல் மற்றும் 'சுகாதார தூதர்' அடையாள அட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கவுரவிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
  • இப்பணியை பாராட்டியே இந்த ஆண்டு, மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் 'புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்' என்ற விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 25,000 மக்கள் தொகைக்கு குறைவான நகரங்கள் பிரிவில் "வைத்தீஸ்வரன்கோவில்” பேரூராட்சிக்கு தென்இந்தியாவின் சிறந்த "தனித்திறன் செயல்பாட்டு நகரம்”, தமிழகத்தின் தூய்மையான நகரங்களில் முதலிடம் ஆகிய விருதுகள் கிடைத்தன.
இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரம்
  • மத்திய பிரதேச தலைநகரான இந்தூர் நகரம் 'இந்தியாவின் சிறந்த நகரம்' என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தூர் தொடர்ந்து 5-வது முறையாக சிறந்த தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • தூய்மையான நகரம்' பிரிவில் இரண்டாவது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரும், ஆந்திர மாநிலம் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 
  • கடந்த ஆண்டு மூன்றாவது இடம் பெற்ற நவி மும்பை தற்போது ஒரு இடம் சறுக்கி 4-வது இடம் பெற்றுள்ளது. 
இந்தியாவின் சிறந்த தூய்மையான மாநிலம்
  • மாநிலங்கள் வரிசையில் 'இந்தியாவின் சிறந்த மாநிலம்' என்ற பட்டத்தை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் 2-வது இடத்தையும், மத்தியப் பிரதேச மாநிலம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 
  • 100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், ஜார்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியானா மற்றும் கோவா இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன.
1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரங்கள் பட்டியல்
  • இந்தூர், சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது தில்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன. 
  • இதே பிரிவில் உள்ள 25 நகரங்களில் லக்னோ மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளது. 
1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரங்கள் பட்டியல்
    • மகாராஷ்டிராவின் விட்டா நகரம் 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து லோனாவாலா மற்றும் சாஸ்வாட் உள்ளன.
    1 - 3 லட்சத்திற்கும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரங்கள் பட்டியல்
        • 1-3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாட்டின் தூய்மையான சிறிய நகரப் பிரிவில் புது டெல்லி மாநகராட்சி முதல் இடத்தைப் பிடித்தது. 
        • கன்டோன்மென்ட் போர்டுகளின் பிரிவில், அகமதாபாத் தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீரட் மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. 
        இந்தியாவின் சிறந்த தூய்மையான மாவட்டத்தின்  தரவரிசைப் பட்டியல்
        • மாவட்ட தரவரிசைப்பிரிவில் சூரத் முதல் விருதைப் பெற்றுள்ளது, இந்தூர் மற்றும் புது தில்லி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
        இந்தியாவின் சிறந்த தூய்மையான தூய்மையான கங்கை நகரம்
        • பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி, "தூய்மையான கங்கை நகரம்" என தேர்ந்தெடுக்கப்பட்டது, பீகாரின் முங்கர் மற்றும் பாட்னா ஆகியவை இந்த பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 
        ENGLISH
        • The Clean India Movement was launched in 2014 on behalf of the Ministry of Housing and Urban Affairs of the Union Government. Under this, the national cleanliness city survey has been conducted since 2016 and the ranking list is published. Awards are also given to urban localities that excel in cleaning work.
        • The awards ceremony for the year 2021 was held in Delhi. President Ramnath Govind presented the list and presented the awards. The cleanup survey was conducted in 4,320 cities in 28 days. It is noteworthy that more than 4.2 crore people have expressed their opinion. It is noteworthy that Tamil Nadu is not included in any of the above lists.
        Awards for Tamil Nadu
        • Chennai Corporation is ranked 43rd in the list of cleanest cities. Last year, Chennai was ranked 45th. The competition was attended by 48 urban local bodies with a population of over 10 lakh. Chennai Corporation has got the 43rd place in this. 
        • Chennai tops the list of cities from Tamil Nadu that have participated in Chennai, Madurai and Coimbatore. The Corporation of Chennai has received the award for this year under the category of 'Innovation in Solid Waste Management and Adherence to Best Practices'.
        • Awareness is being created for school children on behalf of the Health Education Department of the Corporation of Chennai on solid waste management, including composting and composting at home.
        • The Department of Health Education of the Corporation also acts as the Health Ambassador of the Corporation, requesting that every student act to ensure the cleanliness of the Corporation, taking the oath of office and honoring the students with 'Health Ambassador' identity cards.
        • In appreciation of this work, this year the Central Government has presented the Chennai Corporation with the award for 'Innovation and Adherence to Best Practices' in Solid Waste Management.
        The Best Clean City in India
        • The city of Indore, the capital of Madhya Pradesh, tops the list of 'Best Cities in India'. Indore has been selected as the best clean city for the 5th consecutive time. 
        • Gujarat's Surat is second and Andhra Pradesh's Vijayawada is third in the 'Clean City' category. Navi Mumbai, which was ranked third last year, has now slipped one place to fourth.
        The Best Clean State in India
        • Chhattisgarh has been adjudged the 'Best State in India' in the list of States. In this category, Maharashtra is ranked 2nd and Madhya Pradesh is ranked 3rd.
        • Jharkhand tops the list of states with less than 100 urban local bodies, followed by Haryana and Goa.
        List of Cleanest Cities in India with a population of over 1 lakh
        • Indore, Surat, Vijayawada, Navi Mumbai, New Delhi, Ambikapur, Tirupati, Pune, Noida and Ujjain are among the top 10 cities with a population of over 1 lakh. Of the 25 cities in the same category, Lucknow has the lowest ranking.
        List of Cleanest Cities in India with a population of less than 1 lakh
        • The city of Vita in Maharashtra is ranked as the cleanest city with a population of less than 1 lakh, followed by Lonavala and Chaswat.
        List of Best Clean cities in India with a population of 1 - 3 lakhs
        • New Delhi tops the list of cleanest small towns in the country with a population of 1-3 lakh. In the category of cantonment boards, Ahmedabad was ranked as the cleanest city. It is followed by Meerut and Delhi.
        Rankings of the best clean districts in India
        • Surat bagged the first award in the district rankings, while Indore and New Delhi bagged the second and third positions respectively.
        The best clean clean Ganga city in India
        • Varanasi, Prime Minister Narendra Modi's parliamentary constituency, was voted the "cleanest Gangetic city", followed by Bihar's Munger and Patna in second and third place respectively.

        Post a Comment

        0 Comments
        * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

        Top Post Ad

        Below Post Ad

        Hollywood Movies

        close

        Join TNPSC SHOUTERS Telegram Channel

        Join TNPSC SHOUTERS

        Join Telegram Channel