Type Here to Get Search Results !

காா்பன் சமநிலை மற்றும் நிகர பூஜ்ஜியம் / CARBON NEUTRALITY & NET ZERO EMISSIONS


TAMIL

காா்பன் சமநிலை என்றால் என்ன?

 • காா்பன் சமநிலை அல்லது நிகர பூஜ்ஜிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு என்பது, வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அகற்றத்துக்கு இடையிலான சமநிலை ஆகும்.
 • வெளிநாடுகளில் புதிதாக அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நிதியுதவியை நிறுத்துவது என இம்மாநாடு உறுதி மேற்கொண்டாலும், உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இலக்கு எதுவும் நிா்ணயிக்கவில்லை. 
 • மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் சாா்ந்திருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இது பலனளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முழுமையாக மாறுவதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் படிப்படியாக மேற்கொள்ள கால அவகாசத்தை அளிக்கும்.
நிகர பூஜ்ஜியம் ஏன்?
 • நிகர பூஜ்ஜியத்தை அடைவது அல்லது நிகர பூஜ்ஜிய இலக்கை நெருங்குவது ஆகியவற்றால், 1.5 டிகிரி செல்சியஸில் புவி வெப்பமடைதலை தடுக்கச் செய்ய வேண்டியது அவசியம் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு (IPCC - ஐபிசிசி) தனது அக்டோபர் 2018 அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 • ஆனால் இதை அடைய, இந்த பூமிக்கு 2050 ஆம் ஆண்டு வரை மட்டுமே நேரம் உள்ளது. இதுவரை, 77 நாடுகள், 10 பிராந்தியங்கள் மற்றும் 100 நகரங்கள் நிகர பூஜ்ஜிய இலக்குகளை சட்டங்களை இயற்றுவதன் மூலம் அல்லது செயல் திட்டங்களை வெளியிட்டு, இதற்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
 • 2017 ஆம் ஆண்டில் ஸ்வீடன், 2045 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளராக மாற ஏதுவாக ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் 2018 ல் நடைமுறைக்கு வந்தது. 
 • இதேபோல், இங்கிலாந்து அதன் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு சட்டத்தை 2019 இல் நிறைவேற்றியது.
நிகர பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்த நாடுகள் (சில எடுத்துக்காட்டுகள்)
 • ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் நியூட்ராலிட்டி இலக்கை வழங்குவதற்கு "ஃபிட் ஃபார் 55" என்ற திட்டத்தை கொண்டுள்ளது.
 • 2060-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியமாகிவிடும் என்றும், 2030-ல் இருந்ததை விட அதன் உமிழ்வுகள் உச்சத்தை அடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் சீனா அறிவித்தது.
 • சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) அதன் நிகர பூஜ்ஜிய உமிழ்வுகள் (NZE) சாலை வரைபடத்தை வெளியிட்டது - '2050க்குள் நிகர பூஜ்யம்' என்று பெயரிடப்பட்டது.
ENGLISH
  What is the carbon balance?
  • Carbon equilibrium, or net zero greenhouse gas emissions, is the equilibrium between the emission and removal of greenhouse gases into the atmosphere.
  • Although the conference pledged to suspend funding for the construction of new thermal power plants abroad, it has not set any targets for ending domestic coal use.
  • This will benefit countries including India and China, which are heavily dependent on coal for power generation. This will give these countries time to gradually take steps to fully transition to renewable energy.
  Why net zero?
  • The United Nations International Panel on Climate Change (IPCC - IPCC) said in its October 2018 report that achieving net zero or approaching net zero is essential to prevent global warming by 1.5 degrees Celsius.
  • But to achieve this, the earth has only time until 2050. So far, 77 countries, 10 regions and 100 cities have issued notices in support of this by enacting laws or enacting net zero targets.
  • In 2017, Sweden passed a law that would allow it to become a net zero carbon emitter by 2045. This law came into force in 2018.
  • Similarly, the UK passed a law in 2019 to bring its greenhouse gas emissions to net zero by 2050.
  Countries declaring net zero targets (some examples)
  • The European Union has a plan called "Fit for 55" to deliver the Carbon Neutrality Goal.
  • China has announced that the net will be zero by 2060 and will not allow its emissions to peak above what it was in 2030.
  • The International Energy Agency (IEA) has released its Net Zero Emissions (NZE) roadmap - titled 'Net Zero by 2050'.

  Post a Comment

  0 Comments
  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

  Top Post Ad

  Below Post Ad

  Hollywood Movies

  close

  Join TNPSC SHOUTERS Telegram Channel

  Join TNPSC SHOUTERS

  Join Telegram Channel