எரிசக்தி மாற்றத்தில் இத்தாலி-இந்தியா இடையே நீடித்த ஒத்துழைப்பு பற்றிய கூட்டறிக்கை
- ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, பிரதமர் மோடி இடையே இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தியா-இத்தாலி இடையே மேம்படுத்தப்பட்ட கூட்டுறவுக்கான செயல் திட்ட தீர்மானம் கடந்த 2020 நவம்பர் 6ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
- பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தூய எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் உட்பட செயல்திட்டத்தில் கூறியபடி முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.
- மேலும் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு ஆகியவற்றில் உள்ள சவால்களை தீர்ப்பதன் அவசியத்தை ஐரோப்பிய யூனியனும், இந்தியாவும் வலியுறுத்தியது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒத்துழைப்பு, பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு, எரிசக்தி திறனை ஊக்குவித்தல், ஸ்மார்ட் மின் தொகுப்புகளை உருவாக்குதல், சேமிப்பு தொழில்நுட்பங்கள், மின்சந்தையை நவீனப்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டன.
- இதனடிப்படையில் 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைக்கும் இந்தியாவின் முடிவை இத்தாலி பிரதமர் பாராட்டினார்.
ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரம், கா்நாடகம், கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
- மெட்ராஸ் மாகாணம் என்று இருந்தது மாற்றப்பட்டு, 1967 ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்டது. அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தின் அடிப்படையில் ஜூலை 18-ஆம் தேதிதான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
- பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்.
- மேலும், எல்லைக் காவலா்களின் மரபு உரிமையாளா்கள் 137 பேருக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், மருத்துவப் படியாக ரூ.500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
- எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலா்கள் 110 பேருக்கு சிறப்பு நிகழ்வாக, வரும் 1-ஆம் தேதி ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கப்படும்.
ஜி20 உச்சி மாநாடு 2021
- இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது.
- இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை விவரித்தார். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்யும் எனவும் அறிவித்தார்.
- மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல் மெர்கல், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங், தென்கொரியா பிரதமர் மூன் ஜே இன் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
- வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணியாக விளங்கும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் 2020-ஆம் ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக ஐ.நா.வின்" உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
- முக்கியமான பசுமை இல்ல வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் (கரியமில வாயு) வெளியேற்றமானது உலக சராசரி அளவானது 10 லட்சத்துக்கு 413.2 பாகங்கள் என்ற புதிய உச்சத்தை 2020-ல் எட்டியது. இந்த உச்சமானது கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும்.
- இதன்மூலம் வெப்பமயமாதல் அதிகரிக்கும். ஸ்காட்லாந்தில் ஐ.நா.வின் பருவநிலை மாற்ற மாநாடு அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.
- மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின்கீழ், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க அமைக்கப்பட்ட 5 ஒருங்கிணைந்த சேவை மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 6வது ஆயுர்வேத தின கொண்டாட்டங்களின் வரிசையில், 'ஆயுர்வேதம் ஃபார் போஷன்' என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கு மற்றும் ஆயுர்வேத உணவு கண்காட்சி 30 அக்டோபர் 2021 அன்று, புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- ஆயுஷ் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MSME), IITs, IIMகள், NCISM, NIFTEM, உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் தங்கள் நிபுணத்துவத்தை பயிலரங்கில் பகிர்ந்து கொண்டனர்.