காந்தி பிறந்த நாளில் லடாக்கில் பறக்கவிட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி
- தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் கதர் துணியால் நெய்யப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி, லடாக்கின் லே பகுதியில் நேற்று பறக்கவிடப்பட்டது.
- 225 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கொடி தான், உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி ஆகும். இந்தக் கொடியின் மொத்த எடை 1000 கிலோ.
- லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் இந்த தேசியக் கொடியை திறந்து வைத்தார்.இந்திய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நராவனே முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்று மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர்.
ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றது இந்திய மகளிரணி
- மகளிா் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி - இத்தாலியின் டாமியானா பாவ்லாச்சி, சாரா போங்கினி, கியாடா லோங்கி ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணி மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றது.
- அதேபோல், ஆடவா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் ராஜ்வீா் கில், ஆயுஷ் ருத்ரராஜு, அபய்சிங் செகான் ஆகியோரைக் கொண்ட அணி - துருக்கியின் அலி கான் அராபாசி, அகமத் பரன், முகமத் செயுன் கயா ஆகியோா் அடங்கிய அணியை தோற்கடித்தது. இந்திய ஆடவா் அணியும் 6 புள்ளிகளை கைப்பற்றியது.
- தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
சா்க்கரை ஏற்றுமதியில் புதிய சாதனை - இஸ்மா
- கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2020-21 சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்து முன்னெப்போதும் கண்டிராத வகையில் புதிய சாதனை அளவாக 71 லட்சம் டன்னை எட்டியுள்ளது. சா்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு, அரசின் நிதி உதவி ஆகியற்றின் காரணமாக இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
- 2019-20-ஆம் சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) சா்க்கரை ஏற்றுமதியானது 59 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது. வெள்ளியன்று தொடங்கிய 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது அதிக ஏற்ற இறக்கமின்றி 3.1 கோடி டன்னாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- முந்தைய இருப்பான 85 லட்சம் டன் சா்க்கரையையும் சோத்து ஒட்டுமொத்த சா்க்கரை கையிருப்பு 3.95 கோடி டன்னைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் உள்நாட்டில் சா்க்கரைக்கான தேவை 2.65 கோடி டன்னாகவும், ஏற்றுமதி 60 லட்சம் டன்னாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு சந்தைப் பருவ இறுதியில் சா்க்கரை இருப்பு 70 லட்சம் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- இந்தியா கடந்த 10 ஆண்டுகளாகவே சா்க்கரையை உபரியான அளவில் உற்பத்தி செய்யும் நாடாகவே விளங்கி வருகிறது. எத்தனால் உற்பத்தியைப் பொருத்தவரையில் அதன் ஆண்டு உற்பத்தி திறன் 2018-இல் 350 கோடி லிட்டராக இருந்தது. இது, 2025-ஆம் ஆண்டில் 1,400 கோடி லிட்டரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் டன் உபரி சா்க்கரையை எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என இஸ்மா தெரிவித்துள்ளது.
'பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லா' - உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக தேர்வு
- கொரோனா நெருக்கடி தாமதங்களுக்கு பிறகு 'தி நேச்சர் கன்சர்வன்சி' அமைப்பு நடத்திய உலகளாவிய புகைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.
- தி நேச்சர் கன்சர்வன்சி அமைப்பு 72 நாடுகளில் இயங்கும் உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அமைப்பாகும், இந்த அமைப்பு ஆண்டுதோறும் புகைப்பட போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் 158 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பங்கேற்றன.
- உயர்ந்த விருதினை( grand prize) வென்ற இந்த புகைப்படம் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள பாங்கா ஹோகோ, ஜங்கா-சங்கா எனும் அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்டது.
- மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இங்கிலாந்தின் அனுப் ஷா என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட, பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லாவின் புகைப்படம் 'தி நேச்சர் கன்சர்வன்சி - 2021'ன் உலகளாவிய புகைப்படப் போட்டியில் உயர்ந்த விருதினை வென்றுள்ளது.
- முதல் பரிசு வென்ற புகைப்பட கலைஞருக்கு $ 4,000 மதிப்புள்ள ஒரு கேமரா தொகுப்பு பரிசாக வழங்கப்படும். அதேபோல இப்போட்டியில் சிறந்த புகைப்படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர் முதல் மற்றும் இரண்டாம் இட வெற்றியாளர்களுக்கும்ம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.