TAMIL
- பள்ளிக்கு வராத 3 - 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு புதிய முறையை தேசிய கல்விக் கொள்கை முன்னெடுத்தது.
- இதன்கீழ், முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது.
- எனவே, இந்த புதிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப, நடுநிலைப் பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. முன்னதாக, மத்திய அரசு (balvatikas) பால்வதிகாஸ் என்ற தொடக்கப்பள்ளியை நிறுவியது.
- மேலும், இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் பள்ளிகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யப்படுவதால் வருவாய் இழப்பு குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- சிறப்பு நிகழ்வுகள் / பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் யோசனையும் ஊக்குவிக்கப்படும்.
- பள்ளி குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் தோட்டங்கள் குறித்த முதல் அனுபவத்தை கொடுக்க, பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்களை வளர்க்கவும் அரசு ஊக்குவிக்கிறது. இந்த தோட்டங்களில் விளையும் பொருட்கள் கூடுதல் நுண்ணுாட்டச் சத்துக்கள் வழங்க பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஊட்டச்சத்து தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- அனைத்து மாவட்டங்களில் சமூக தணிக்கை திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது.
- ரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதற்கான சிறப்பு வசதியும் உருவாக்கப்படுகிறது.
- உள்ளூரில் விளையும் காய்கறிகள் மற்றும் பொருட்களை வைத்து புதுமையான உணவுகளை தயாரிக்க கிராமங்கள் அளவில், தேசிய அளவில் உணவு சமைக்கும் போட்டிகளும் ஊக்குவிக்கப்படும்.
- தற்சார்பு இந்தியாவுக்கு உள்ளூர் பொருட்கள்: இத்திட்டத்தை அமல்படுத்துவதில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுவினரின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும். உள்ளூர் பாரம்பரிய உணவுப் பொருட்கள் பயன்பாடு மூலம், உள்ளூர் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும்.
- முன்னேற்றத்தை கண்காணிக்க கள ஆய்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். பிரபல பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்கள் கள ஆய்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்
- The National Education Policy has introduced a new system for schooling between the ages of 3 and 6 who do not attend school.Under this, the existing 10 + 2 syllabus will be changed to emphasize early childhood care and education and the 5 + 3 + 3 + 4 year syllabus will be introduced for 3-8, 8-11, 11-14 and 14-18 year olds respectively.
- Therefore, in line with these new education policies, the federal government has proposed to provide lunch in schools to students studying in pre-middle school classes. Earlier, the central government (balvatikas) established a primary school called Balvatikas.
- The central government has also said that under the scheme, remittances to 11.20 lakh schools across the country will reduce revenue loss. The idea of providing special meals for children during special events / festive seasons will also be encouraged.
- The government also encourages school children to develop nutritious gardens in schools to give them a first-hand experience of nature and gardens. The produce of these gardens is used to provide additional micronutrients. Already in more than 3 lakh schools, nutrition gardens have been developed.
- A community audit program is mandatory in all districts. Special facilities are also being set up to provide supplementary nutrition to children in districts with high levels of anemia.
- Village level and national level cooking competitions will also be promoted to produce innovative dishes with locally grown vegetables and ingredients.
- Local Products for Independent India: The involvement of Agricultural Producers' Organizations (FPOs) and women's self-help groups in the implementation of the scheme will be encouraged. Through the use of local traditional food items, the local economy will be promoted.
- Field surveys will also be arranged to monitor progress. Students from reputed universities, educational and training institutions will be organized for field studies