Type Here to Get Search Results !

ஆர்.வேலுமயில் தேவர் / R.VELUMAYIL DEVAR

 

TAMIL
  • தமிழக அளவில் தாக்கத்தை உருவாக்கிய ஆகஸ்ட் போராட்ட நிகழ்வுகளான கோவை-சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு, சூலூர் விமானதளத் தகர்ப்பு ஆகியவற்றில் அதிகம் பேர் பங்'கேற்ற ஊர் இருகூர்’. அக்காலத்தில் கிராமமாக இருந்த இவ்வூர் கோவை நகரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • இரண்டுமே மக்கள் எழுச்சியால் சம்பவித்த சரித்திர நிகழ்வுகள். இதற்கு வடிவம் கொடுத்த வர்கள். இதனை வழிநடத்தியவர்கள் தொழிலாளர் தலைவர் என்.ஜி. ராமசாமி. கண்ணம்பாளையம் கே.வி. ராமசாமி. கே.பி. திருவேங்கடம் உள்ளிட்ட தலைவர்கள். 
  • இருகூரிலும் பக்கத்து ஊர்களிலும் வசித்தவர்களில் பெரும்பாலானோர் கோவையிலுள்ள பஞ்சாலைகளில் வேலை செய்தவர்கள். அங்கு ஏற்பட்ட தொடர்புகளாலும் தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் நாட்டுநடப்புகள் குறித்தும் விடுதலைப் போராட்டம் பற்றியும் அறிந்து கொண்டவர்கள்.
  • இருகூரில் மட்டும் 41 போராளிகள் தண்டனை பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். பங்கேற்றவர்கள் இன்னும் பலர். கள்ளுக்கடைக்குத் தீவைத்த வழக்கிலும் விமான நிலையத் தகர்ப்பு வழக்கிலுமாகச் சேர்த்து இருகூரைச் சேர்ந்த ஆர்.வேலுமயில் தேவருக்கு 27 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. 
  • அலிப்பூர் சிறையில் நான்காண்டுகள் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கும் தேசியத் தலைவர்களுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தலைவர்கள் பலர் விடுவிக்கப்பட்ட சூழலில் 12.05.1946-ஆம் தேதி விடுதலையானார் வேலுமயில் தேவர்.
  • எ.சாமியப்ப தேவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இருகூர் போராளிகளில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் அப்போது திருமணமாகியிருந்தது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு சிறையிலிருந்தார். மற்ற 40 பேரும் விடுதலைக்குப் பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர்.
  • வை.கிரி கிருஷ்ணன் தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று இருகூரிலிருந்து பல மாவட்டங்களில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தவாறே நடைப் பயணமாகச் சென்று சென்னையில் காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது கைது செய்யப்பட்டார். 
  • சென்னை சிறையில் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார். விடுதலையான மூன்றாம் நாளே இருகூரில் யுத்த நிதி வசூலிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை நடைபெறவிடாது தடுக்கக் கிளர்ச்சி செய்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்தார்.
  • கே.அங்கணத் தேவரின் வீட்டில் புகுந்த போலீஸ் அவரின் இருப்பிடத்தைக் கேட்டு பெற்றோரைத் தாக்கியதோடு அவரது திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தையும் வீதியில் கொண்டுவந்து குவித்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
  • பின்னர் பிடிபட்ட இவர் ஆறு மாதங்கள் சிறையிலிருந்துள்ளார். திருமணம் நின்று போனதால் விடுதலைக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார்.
  • 'கோவை, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் கண்ணம்பாளையம் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  • 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டு இரண்டு ஜென்ம தண்டனையிலிருந்து இரண்டாண்டு தண்டனை வரை தீர்ப்பாகியிருந்தது' என்று ஆர் வேலுமயில் தேவர் பதிவு செய்துள்ளார். விடுதலைப் போர்க்களத்தில் தமிழகத் தொழிலாளர்களின் பங்கு வீரியம்மிக்கது.
ENGLISH
  • Most of the August protests that took place in Tamil Nadu, such as the Coimbatore-Singanallur train derailment and the demolition of the Sulur airport, were 'punched'. It was a village at that time and is 12 km from Coimbatore. Is far away.
  • Both are historical events caused by the popular uprising. Those who gave shape to this. It was led by Labor leader N.G. Ramasamy. Kannampalayam KV Ramasamy. K.P. Leaders including Thiruvenkadam.
  • Most of the people living in both the villages and the neighboring towns worked in the panchayats in Coimbatore. Those who came to know about the country and the liberation struggle through the contacts and trade union activities that took place there.
  • In both, 41 militants have been convicted. The participants are many more. R. Velumayil Thevar was sentenced to 27 years in prison on both charges, including setting fire to a toll booth and vandalizing an airport.
  • Velumayil Thevar was released on 12.05.1946 in Alipore Jail on the basis of an agreement reached between the British Government and the National Leaders after four years.
  • A. Samiyappa Thevar was sentenced to 12 years in prison. He was then married to only one of the two militants and was imprisoned, leaving behind his wife and two daughters. The other 40 were married only after their release.
  • YG Krishnan was arrested while participating in an individual satyagraha and marching on anti-war propaganda in several districts from both sides while addressing a public meeting organized by the Congress Committee in Chennai.
  • He was kept in Chennai jail for six months. On the third day of his release, he was re-arrested and imprisoned for one and a half years for rebelling against a meeting organized by the district collector to raise funds for the war.
  • Police raided K. Anganath Thevar's house, assaulted his parents, assaulted him and set fire to everything he had left in the house for his wedding. He was later arrested and jailed for six months. He got married after the release as the marriage had stalled.
  • 'Thousands of workers in Coimbatore, Singanallur, Irugur and Sulur Kannampalayam areas went on strike. More than 200 workers were prosecuted in various sections and sentenced from two genma sentences to two years' imprisonment. The role of Tamil Nadu workers on the liberation battlefield is vigorous.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel