நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம் - பணியாளர், சட்ட விவகார குழுவின் தலைவராக சுஷில் மோடி நியமனம்
- தேச நலன் சார்ந்த விஷயங்கள், சர்ச்சைக்குரிய மசோதாக்கள் போன்றவற்றை ஆய்வு செய்து ஒன்றிய அரசுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கும் முக்கிய பணியை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.
- வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இக்குழுக்கள் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 24 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம் செய்து மாநிலங்களவை தலைமைச் செயலகம் அறிக்கை வெளியிட்டது.
- இதில், பணியாளர், சட்டத்துறை நிலைக்குழுவின் தலைவராக சுஷில்குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான அறிக்கை அளிக்கும் முக்கிய குழுவாகும்.
- இக்குழுவில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, பி.வில்சன் ஆகியோரும், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
- இக்குழுவின் முந்தைய தலைவராக இருந்த பூபேந்திர யாதவ் ஒன்றிய அமைச்சரானதைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுஷில் மோடிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
- தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் நீடிக்கிறார். மேலும் காங்கிரசின் ஆனந்த் சர்மா உள்துறை குழுவுக்கும், ஜெய்ராம் ரமேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவுக்கும் தலைவராக நீடிக்கின்றனர். ராகுல் காந்தி பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக நீடிக்கிறார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளரானார் செந்தில் V தியாகராஜன்
- 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் உரிமையாளருமாகிய திரு. செந்தில் V தியாகராஜன் அவர்கள், ஒருமனதாக பொருளாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா - டென்மார்க் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- டில்லியில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லி ராஜ்காட்டிற்கு சென்று மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
- அவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார்.
- தொடர்ந்து, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், இரு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடந்தது.
- இதன் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- ''திருவள்ளூர் மாவட்டத்தில் சங்கல்ப் பள்ளி சுமார் 20 ஆண்டுகளாக சிறப்புக் குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.
- கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்திடும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் புதிதாக சங்கல்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
- இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப் பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
- மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்விப் பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேட்டா என்ட்ரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
- இந்நிலையில் சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் (SANKALP) பள்ளியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.