Type Here to Get Search Results !

TNPSC 7th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் பொறுப்பேற்பு

  • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் ஐசரி கே.கணேஷ் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜி.எஸ்.டி., ரூ.40,000 கோடி இழப்பீடு; மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு

  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
  • நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., கூடுதல் வரி வசூல் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மதிப்பிடப்பட்டிருந்தது.
  • இத்துடன், திரும்பப் பெறும் கடன் அடிப்படையில் 1.59 லட்சம் கோடி ரூபாய் வழங்க 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
  • அதன்படி நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 2.59 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.
  • இந்த தொகையில் ஜூலை 75 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது, மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி 8.3% வளரும் - உலக வங்கி கணிப்பு

  • நடப்பு நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.3 சதவீதத்தை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 
  • அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க ஊக்கச் சலுகை உள்ளிட்ட காரணங்களால் இத்தகையவளர்ச்சி சாத்தியமாகும் என்றுஉலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
  • அடுத்த ஆண்டில் இது 7.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி 9.5 சதவீதத்தை எட்டும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார ஸ்திரமற்ற சூழல் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை இருக்கலாம் என உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
  • உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Mosquirix - உலகின் முதல் மலேரியா வேக்சினுக்கு WHO ஒப்புதல்

  • சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகவே மோசமான பிரச்சினையாக உள்ளது என்றால் அது மலேரியா தொற்று தான். மலேரியாவால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகின்றனர். 
  • அப்படி பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜிஎஸ்கே என்ற மருந்து நிறுவனம் கடந்த 1987ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த மலேரியா வேக்சினை உருவாக்கியிருந்தது.
  • Mosquirix வேக்சின் சோதனை முதலில் 1987இல் தொடங்கியது. முதல் ஆண்டில் இந்த வேக்சின் 50% வரை தீவிர மலேரியா பாதிப்பைத் தடுப்பது தெரிய வந்தது. 
  • கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 3ஆம் கட்ட சோதனையில் இந்த வேக்சின் சுமார் 36% வரை தடுப்பாற்றலை தருவது உறுதியானது.
  • கடந்த 2016ஆம் ஆண்டு கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இந்த வேக்சின் குறித்த சோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
  • இந்த சோதனை திட்டத்தில் 4 நாடுகளிலும் மலேரியா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து இந்த Mosquirix வேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel