2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PEACE 2021
TAMIL
- அதிகார துஷ்பிரயோகம், ஆட்சியாளா்களின் பொய்கள், விஷம போா்ப் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த உலகை சுதந்திரமான - சாா்பற்ற - ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகத்துறையால்தான் பாதுகாக்க முடியும்.
- கருத்து சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் இல்லாவிட்டால் நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியாது; சண்டை சச்சரவுகளைப் போக்கி அமைதியான உலகை ஏற்படுத்த முடியாது.
- அந்த வகையில், பத்திரிகை சுதந்திரத்துக்காக மிகச் சிறந்த முறையில் பாடுபட்டு வரும் செய்தியாளா்கள் மரியா ரெஸா மற்றும் டிமித்ரி முராடோவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
- பிலிப்பின்ஸில் போதை மருத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அதிபா் ரோட்ரிகோ டுடோதே நிகழ்த்திய படுகொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய 'ராப்ளா்' என்ற செய்தி வலைதளத்தை கடந்த 2012-ஆம் ஆண்டில் மரியா ரெஸா உருவாக்கினாா்.
- சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் எவ்வாறு பரப்பப்படுகின்றன, எதிா்ப்பாளா்களுக்கு எதிராக எவ்வாறு வன்மம் பரப்பப்படுகிறது,
- பொதுமக்களிடையே தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன என்பதை மரியா ரெஸாவும் அவரது ராப்ளா் செய்தி வலைதளமும் வெளிச்சம் போட்டுக் காட்டின.
- அதே போல், ரஷியாவில் நடுநிலையான 'நோவயா கெஸட்டா' நாளிதழை கடந்த 1993-ஆம் ஆண்டில் தொடங்கியவா்களில் டிமித்ரி முராடோவும் ஒருவா்.
- தற்போது அந்த நாட்டின் மிகவும் நடுநிலையான, அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நாளிதழாக நோவயா கெஸட்டா திகழ்கிறது.
- அந்த நாளிதழில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருவதல், அது ரஷிய சமூகத்துக்குத் தேவையான உண்மைத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. அதில் காணப்படும் செய்திகள் ரஷியாவின் வேறு எந்த ஊடகத்திலும் காண முடியாது என்ற நிலை உள்ளது.
- இந்த வகையில், உலக அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பாடுபட்டு வரும் மரியா ரெஸாவுக்கும் டிமித்ரி முராடோவுக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று நோபல் தோவுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
- மரியா ரெஸா (58) - மணிலாவில் பிறந்த மரியா ரெஸா சிறு வயதிலேயே அவரது தாயாருடன் அமெரிக்காவில் குடியேறினாா். சிஎன்என், வால் ஸ்ட்ரீட் ஜா்னல் போன்ற பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவருக்கு, ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான தங்கப் பேனா விருதும் இந்த ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பத்திரிகை சுதந்திரப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
- டிமித்ரி முராடோவ் (59) - செய்தியாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்துள்ள டிமித்ரி முராடோவ், நோவயா கெஸட்டா நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறாா். அந்த ஜனநாயக ஆதரவு நாளிதழை பிற செய்தியாளா்களுடன் இணைந்து அவா் 1993-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினாா். அவரது நாளிதழ், 'அரசை விமா்சிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பத்திரிகை' என்று அழைக்கப்படுகிறது.
ENGLISH
- Only a media based on independent-nonsense sources can protect this world against the abuse of power, the lies of the rulers and the poisonous pop propaganda. Without freedom of expression and freedom of the press, reconciliation between nations is impossible; A peaceful world cannot be created without fighting.
- In that sense, this year's Nobel Peace Prize is awarded to Maria Reza and Dmitry Murado, journalists who have worked tirelessly for press freedom. In 2012, Maria Reza created the news website 'Roblo', which highlighted the assassinations of Adiba Rodrigo Dudo in the name of action against drug trafficking and trafficking in the Philippines.
- How misinformation is spread through social media, how violence is spread against opponents, Maria Reza and her Raphael news website highlighted that misconceptions are being created among the public.
- Similarly, Dmitry Murado was one of the founders of the neutral Russian newspaper Novaya Gazeta in 1993. The Novaya Gesta is currently the country's most neutral, anti-authoritarian newspaper.
- Evidence-based news is being published in the newspaper, which serves as a repository of factual information needed by the Russian community. The news in it is not available in any other Russian media.
- In this regard, the Nobel Committee has announced that this year's Nobel Peace Prize will be awarded to Maria Reza and Dmitry Murado, who have been working to protect the freedom of the press, which plays a key role in world peace.
- Maria Reza (58) - Born in Manila, Maria Reza immigrated to the United States with her mother at an early age. He has worked for various American media outlets, including CNN and the Wall Street Journal, and has already been awarded the Gold Pen for Independence in 2018 and the UNESCO World Press Freedom Prize this year.
- Dmitry Muradov (59) - Journalist and TV presenter Dmitry Muradov is the editor-in-chief of the Novaya Gesta newspaper. He co-founded the pro-democracy daily with other journalists in 1993. His newspaper is called 'the only newspaper of national importance that criticizes the state'.