சந்த் கபீர் விருது
- மத்திய அரசு, நெசவாளர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது 'சந்த் கபீர்' விருதாகும். 2018-ம் ஆண்டுக்கான 'சந்த் கபீர்' விருது இந்திய அளவில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. நிறைய நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது, வழக்கமான சேலைகளுக்கு மாற்றாக 114 வடிவமைப்புகளை சேர்த்து சேலை நெய்தது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது 20 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் 6 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் தர்மலிங்கம் நகரைச் சேர்ந்த சரளா - கணபதி தம்பதி மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த காமாட்சி - ஹரி தம்பதி இணைந் தும், கணிகண்டீஸ்வர் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமாரி, ராயன்குட்டை பிள்ளை தெருவைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தனித்தனியாகவும் தேசிய விருதை பெறுகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 நெசவாளர்கள் 4 தேசிய விருதுகளை பெறுகின்றனர்.
- சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில் நுட்பங்களை கைத்தறியில் பயன்படுத்தியது, சிறந்த வண்ணங்கள் ஆகிய காரணங்களுக்காக இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
- மாஸ்கோ-ரஷ்யா 'சிர்கான்' என்ற அதிநவீன 'ஹைபர்சோனிக்' ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கடற்படை கப்பலில் இருந்து பலமுறை பரிசோதனைக்காக ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கியது.
- இந்நிலையில் சிர்கான் ஏவுகணையை, 'செவெரோட்டவின்ஸ்க்' எனப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் பரிசோதனை முதல் முறையாக நடந்தது.
ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு
- டோக்கியோ-ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, 64, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் பெரும்பான்மை ஆதரவுடன், புமியோ கிஷிடா வெற்றி பெற்றார். இதையடுத்து ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்துள்ளது.
- இதில் சுகா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 பேரில் இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புமியோ கிஷிடா, 8ம் தேதி பார்லி.,யில் உரையாற்ற உள்ளார்.
காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
- இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது, ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது.
- இதுவரை, 5.30 லட்சம் புகைப்படங்கள் சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மென்பொருளை காவல் நிலையம் மற்றும், களப்பணியின்போது எப்ஆர்எஸ் செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்களுக்கு முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல்
- புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- இதையடுத்து மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு இதுதொடர்பாக ஒப்புதல் அளித்து வரைபடம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.