2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PHYSICS 2021
TAMIL
- 2021 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு சுயூகுரோ மனாபே, கிளாஸ் ஹாஸெல்மன், ஜியோா்ஜியோ பாரிஸி ஆகிய விஞ்ஞானிகள் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
- அவா்களில் சுயூகுரோ மனாபேவும் கிளாஸ் ஹாஸெல்மனும் இணைந்து புவியின் தட்பவெப்ப மாற்றங்களுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய மாதிரி உருவாக்கம் செய்துள்ளனா். புவி வெப்பமயமாதல் குறித்த விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள அவா்களது அந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.
- கடந்த 1960-களிலிருந்தே, வளிமண்டலத்தில் காா்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்தால் புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்பதை சுயூகுரோ மனாபே ஆதாரபூா்வமாக நிரூபித்து வந்தாா். புவி வெப்பமயமாதல் குறித்த தற்போதைய மாதிரி உருவாக்கங்களுக்கு அவரது அந்தக் கண்டுபிடிப்பு ஆதாரமாக உள்ளது.
- மேலும், புவியின் வெப்பத்துக்கும் பருவநிலைக்கும் உள்ள தொடா்பை விளக்கும் மாதிரி உருவாக்கத்தை கிளாஸ் ஹாஸெல்மன் கண்டறிந்தாா். இதன் மூலம், பருவநிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான நம்பகத்தன்மை வாய்ந்த மாதிரி உருவாக்கம் நமக்குக் கிடைத்தது.
- இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக அவா்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுதவிர, பருவநிலை மாற்றம் தொடா்பாக மிகவும் சிக்கல் நிறைந்த விவரங்களைப் புரிந்துகொள்ள வகை செய்யும் மாதிரி உருவாக்கத்தை கணிதம், உயிரியல், நரம்பு அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் கிளாஸ் ஹாஸெல்மன் உருவாக்கியுள்ளாா்.
- அதற்காக, இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு அவா் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று நோபல் தீா்வுக் குழு தெரிவித்துள்ளது.
- சுயூகுரோ மனாபே (90) - ஜப்பானைப் பூா்விகமாகக் கொண்ட சுயூகுரோ மனாபே, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா். வானிலை மற்றும் பருவநிலை விஞ்ஞானியான இவா், அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினா் ஆவாா். 'புளூ பிளானட்' பரிசு உள்பட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.
- கிளாஸ் ஹாஸெல்மன் (89) - ஜொமனியின் ஹாம்பா்க் நகரில் பிறந்த ஹாஸெல்மன், முன்னணி பெருங்கடலியல் நிபுணா் ஆவாா். ஹாம்பா்க் பல்கலைக்கழகம், மேக்ஸ் பிளாங்க், ஜொமனி பருவநிலை கணிப்பு மையம் ஆகியவற்றில் இவா் பணியாற்றி வருகிறாா். சிறுவயதில் லண்டனில் வசித்து வந்த இவா், 1949-ஆம் ஆண்டு ஹாம்பா்க் திரும்பினாா்.
- ஜியோா்ஜியோ பாரிஸி (73) - இத்தாலியைச் சோந்த ஜியோா்ஜியோ பாரிஸி, கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானி ஆவாா். ஜொமனியின் கௌரவம் மிக்க அறிவியல் அகாதெமியின் தலைவராக இவா் 2018-ஆம் ஆண்டு தோந்தெடுக்கப்பட்டாா். கடந்த 1986-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பாரிஸிக்கு 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ENGLISH
- Scientists Suu Kyi Manabe, Klaus Hasselmann and Giorgio Parisi have been nominated for the 2021 Nobel Prize in Physics. Among them is Suu Kyi Manabe and Klaus Hasselman, who have developed a reliable model for the Earth's climate change. Their discovery helps to predict the details of global warming.
- Since the 1960s, Sukuro Manabe has proven that increasing the amount of carbon dioxide in the atmosphere will increase global warming. His discovery is the basis for current models of global warming.
- Furthermore, Klaus Hasselman discovered a model that illustrates the relationship between global warming and climate. With this, we got a reliable model for forecasting climate change.
- They are both awarded the Nobel Prize in Physics for their discoveries. In addition, Klaus Hazelman has developed models in various fields such as mathematics, biology, and neuroscience that make it possible to understand the most complex details of climate change.
- To that end, the Nobel Committee has announced that it has been nominated for this year's Nobel Prize in Physics.
- Suyukuro Manape (90) - Suu Kyi Manape, originally from Japan, currently resides in the United States. Eva, a meteorologist and meteorologist, is a member of the American National Academy of Sciences. Eva has received various awards, including the 'Blue Planet' prize.
- Klaus Hasselman (89) - Hasselman, born in Hamburg, Jomanni, is a leading oceanographer. Eva has worked at the University of Hamburg, Max Planck, and the Jomani Climate Center. Eva, who lived in London as a child, returned to Hamburg in 1949.
- Geoggio Parisi (73) - Italian theologian theoretical physicist Ava. Eva was inaugurated in 2018 as the President of Jomani's prestigious Academy of Sciences. Paris has won 14 awards since 1986