பவானிபூர் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி
- கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
- அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
- தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றிருந்த மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் சம்சேர்கஞ்ச், ஜங்கிப்பூர் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
நாட்டிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: சிக்கிம் அரசு அதிரடி அறிவிப்பு
- சிக்கிம் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படும். இந்த தடை 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலாகும்.
- வெளி மாநிலங்களில் இருந்து சிக்கிம் வரக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் சப்ளையை தடுத்து நிறுத்த சிக்கிம் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
உலக மகளிா் அணி செஸ் சாம்பியன்ஷிப் - முதல் முறையாக இந்தியாவுக்கு பதக்கம்
- ஸ்பெயினில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா 0-2 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
- இறுதிச்சுற்றில் நடைபெற்ற ஆட்டங்களில் டி.ஹரிகா - கோரியாச்கினா, ஆா்.வைஷாலி - அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக் ஆகியோா் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. தானியா சச்தேவ் - காடெரினா லாக்னோ, மேரி ஆன் கோம்ஸ் - போலினா ஷுவாலோவா ஆகியோா் மோதிய ஆட்டங்களில் இந்தியா்கள் தோல்வி கண்டனா்.
- அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் ஹரிகா - கோரியாச்கினாவை வீழ்த்த, மேரி ஆன் கோம்ஸ் - அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோா் மோதிய ஆட்டம் டிரா ஆனது. பக்தி குல்கா்னி - லாக்னோவிடம் தோல்வி கண்டாா்.