சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவா், உறுப்பினா்கள் நியமனம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிா என்பதைக் கண்காணிக்க தமிழக அரசால் சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் எனவும், வேலைவாய்ப்பு, பதவி உயா்வுகளில் சமூக நீதி பின்பற்றப்படுகிா என்பதை அந்தக் குழு கண்காணிக்கும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
- இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.
- சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக, திராவிட இயக்க தமிழா் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.தனவேல், பேராசிரியா் முனைவா் சுவாமிநாதன் தேவதாஸ், எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சட்டங்களை நன்கறிந்த ஜெய்சன், பேராசிரியா் ஆா்.ராஜேந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோா் கூட்டமைப்பின் தலைவராக இருந்த கோ.கருணாநிதி ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா்.
தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
- நாடு முழுவதும் நூறு கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சீரம் நிறுவனத் தலைவர் அடர் பூனாவாலா உள்பட தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- பிரதமர் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்
- தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
- இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவராக உதயன் ஐஎப்எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நினைவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அம்ரித் மகோத்சவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொச்சியில் இருந்து கோவா வரை கடலோர படகுப்போட்டியை இந்திய கடற்படை படகோட்ட சங்கத்தின் கீழ் இந்திய கடற்படை நடத்துகிறது.
- இந்த நிகழ்வில் ஆறு இந்திய கடற்படை கப்பல்கள்- மஹாதே, தாரிணி, புல்புல், நீல்காந்த், கடல்புறா மற்றும் ஹரியால்- பங்கேற்கின்றன.
- 24 அக்டோபர் 2021 தொடங்கி சுமார் ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த போட்டி கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து கோவா வரை தோராயமாக 360 கடல் மைல் தூரத்திற்கு நடைபெறும்.
- பங்கேற்கும் குழுவினருக்கு சாகசம் மற்றும் கடல் படகோட்டம் ஆகிய உணர்வுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த படகுப் போட்டி நடத்தப்படுகிறது.
- இந்திய பாய்மர படகுகள் சங்கத்தை சேர்ந்த படகுகளும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும். பங்கேற்பாளர்கள் கடந்த ஒரு மாதமாக இந்த நிகழ்விற்காக பயிற்சி செய்து வருகின்றனர், மேலும் அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கொச்சியில் கேப்சூல் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
- கேப்டன் விபுல் மெஹேரிஷி, கேப்டன் அதுல் சின்ஹா, லெப்டினன்ட் கமான்டர் கே பெட்னேகர், லெப்டினன்ட் கமான்டர் பாயல் குப்தா போன்ற தேசிய அளவில் பல்வேறு நிகழ்வுகளில் பதக்கங்களை வென்றவர்கள் இந்திய கடற்படை சார்பாக இந்த படகு போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
- கடல் படகோட்டம் மிகவும் கடினமான சாகச விளையாட்டாகும், இதன் மூலம், இந்திய கடற்படை சாகச உணர்வை வளர்க்கிறது, அதே நேரத்தில் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடுகள், இன்மார்சாட் கருவிகளின் செயல்பாடு, தளவாட திட்டமிடல் போன்ற அத்தியாவசிய கடல்சார் திறன்களையும் இது மேம்படுத்துகிறது. இதன் மூலம் இந்திய கடற்படையின் திறன் மேம்படுகிறது.
- ஐவிஎஃப் கருத்தரிப்பு முறையின் மூலம் இந்தியாவின் முதல் பண்ணி (Banni) வகை எருமை பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.
- குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா ஆக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த வினய் எல் வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.
- 2020 டிசம்பர் 15 அன்று குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு பயணம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்து பேசியிருந்தார். அதற்கடுத்த நாளே, பண்ணி எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.
- வினய் எல் வாலாவின் சுசீலா அக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த 3 பண்ணி எருமைகளை ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு முதல் எருமைக் கன்று தற்போது பிறந்துள்ளது.
- எருமைகளின் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அரசு மற்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும்.