பாரத்நெட் திட்டத்திற்கு ஒப்பந்தம்
- தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளை, 'கண்ணாடி இழை கம்பி வடம்' வழியே இணைத்து, அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு 'பைபர்நெட்' நிறுவனம், 1,815.32 கோடி ரூபாயில் செயல்படுத்த உள்ளது.
- இத்திட்டத்தின் வழியாக, குறைந்தபட்சம் ஒரு ஜி.பி.பி.எஸ்., அளவிலான 'இன்டர்நெட்' அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும். இதற்கான, 'பாரத்நெட்' திட்டத்தை செயல்படுத்த உள்ள ஐ.டி.ஐ., மற்றும் 'எல் அண்ட் டி' நிறுவனங்களுடன், தமிழ்நாடு பைபர்நெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா
- சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை கவுரவிக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு தொடங்கியது.
- மலையாள நடிகர் மம்முட்டி, நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த விசாவை பெற்றுள்ளனர். இந்த நிலையில் பின்னணி பாடகி சித்ரா ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் காணொளியில் ஆலோசனை
- சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்னைகள், தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல் மற்றும் பசுமை ஹை ட்ரஜன் பொருளாதார வளத்தை அமல் படுத்தவது குறித்து, சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
- புத்த மத யாத்திரை தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் நாமல் ராஜபக்சே மற்றும் 100க்கும் மேற்பட்ட இலங்கை புத்த மத துறவினர்கள் பங்கேற்றனர். இவர்கள் வருகை தந்த இலங்கை விமானம்தான், குஷிநகருக்கு வந்த முதல் சர்வதேச விமானம்.
- மேலும் குஷ்நகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் 12 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை நாமல் ராஜபக்சே சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது பகவத் கீதையின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார்.