Type Here to Get Search Results !

TNPSC 19th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் காந்திதாமில் 'ஆயுஷ் வான்' ஐ தொடங்கி வைத்தார்
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சரான ஸ்ரீ சர்பானந்த சோனோவால், தீன்தயாள் துறைமுக அறக்கட்டளையில் (DPT) - ரோட்டரி வனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுர்வேத தாவரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆயுஷ் வானை திறந்து வைத்தார். 
  • நகர்ப்புறத்தில் பசுமையை மேம்படுத்தவும், கட்ச் பிராந்தியத்தில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும் மரம் நடவு செய்யப்படும் பசுமை-பெல்ட் பகுதியில் டிபிடியால் ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் ஆயுஷ் வேன் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் மரக்கன்றையும் நட்டார்.
காற்றின் தரம் குறித்த எச்சரிக்கை அமைப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
  • நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ வாரத்தின் ஒரு பகுதியாக புவி அறிவியல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், காற்றின் தரம் குறித்த விரைவு எச்சரிக்கை அமைப்பைத் தொடங்கி வைத்தார்
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்
  • இந்திய தொழில் கூட்டமைப்பான - சிஐஐ ஏற்பாடு செய்த "எதிர்கால தொழில்நுட்பம் 2021" என்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியின் தொடக்க அமர்வில் மின்னணு & தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் காணொலி மூலம் கலந்து கொண்டார்.
  • 2021 அக்டோபர் 19 முதல் 27 வரை இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. உத்தி, வளர்ச்சி, உறுதி, உள்ளடக்கம், நம்பிக்கை எனும் ஐந்து கருப்பொருள்களை இது மையமாகக் கொண்டதாகும்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம்
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்.19-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை நடந்தன.
  • இதில் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
  • ஏற்கெனவே 6 கட்ட அகழாய்வுகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஆனால் 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாது.
  • அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி 'அகழ் வைப்பகம்' ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்தநிலையில் வைப்பது இதுவே முதல்முறை. 
  • மேலும் திறந்தவெளியில்பார்வைக்கு வைக்கும்போது, கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலம் மேற்கொள்ளப்படும்.
  • 8-ம்கட்ட அகழாய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மேலும் 7-ம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 
ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை இந்தியா வழங்குகிறது
  • ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.'
  • தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel