ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு நிறைவு
- தமிழக தொல்லியல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2-ம் கட்டமாகவும், பாண்டியர்களின் துறைமுக நகரான கொற்கையில் முதல் கட்டமாகவும் கடந்த 7 மாதங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்றது.
- ஆதிச்சநல்லூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுநடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கொற்கையில் 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. குறிப்பாக, 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்களை வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கு அறுக்கும் தொழிற்கூடம், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், ரோம் மற்றும் சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் உருவபொம்மைகள் எனஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- சிவகளையில் பரம்பு, பேட்மா நகரம், மூலக்கரை ஆகிய 3 இடங்களில் 18 குழிகளும், பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, பொட்டல் திரடு, செக்கடி ஆகிய நான்கு இடங்களில் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக 8 குழிகளும் அமைக்கப்பட்டன.
- பரம்பு பகுதியில் 400க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஆவாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத்தன.
- சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிரபரணிக்கரை `பொருநை நாகரிகத்தின்' வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- இதை பெருமைப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் ரூ.15 கோடி மதிப்பில் `பொருநைஅருங்காட்சியகம்' அமைக்கப்படும். அங்கு, ஆதிச்ச நல்லூர்,சிவகளை மற்றும் கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
மாநில பேரிடர் மீட்பு நிதி ரூ.7,274 கோடி ஒதுக்கீடு
- மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் அவசர காலங்களை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக 1,599.20 கோடி ரூபாய் ஏற்கனவே ஐந்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலும் 23 மாநிலங்களுக்கு இரண்டாவது தவணைத் தொகை 7,274 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த நிதியின் வாயிலாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மாநில அரசுகள் உதவி செய்யவும் இந்த நிதி பயன்படும்.
நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள தொழில் திட்ட குழு, இந்தியா - அமெரிக்கா ஒப்புதல்
- இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் சார்ந்த தொழில்களில் நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான கொள்கைகளை வகுக்க, செயல் திட்ட குழு அமைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
- டில்லியில் ஐந்து நாட்கள் நடந்த இந்திய - அமெரிக்க தொழில் பாதுகாப்பு ஒப்பந்த மாநாடு முடிவடைந்தது.
- இக்குழுவை உருவாக்கி, செயல்படுத்த இந்தியா, அமெரிக்கா சார்பில் அனுராக் பாஜ்பாய், டேவிட் பால் பக்நட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பி.சி.பட்நாயக் பொறுப்பேற்பு
- எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக, பி.சி.பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பி.சி.பட்நாயக், 1986ல், எல்ஐசியில் நேரடி அதிகாரியாக இணைந்தார்.
இந்தியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்பு துபாய் எக்ஸ்போ- 2020 கோலாகல தொடக்கம்
- சர்வதேச அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற கூடிய, 'உலக கண்காட்சி' இம்முறை துபாயில் நடைபெறுகிறது. இதற்காக, 'துபாய் எக்ஸ்போ- 2020' என்ற பெயரிலான பிரமாண்ட கண்காட்சி, துபாயில் கோலாகலமாக தொடங்கியது. இது, அடுத்தாண்டு மார்ச் வரை வரை நடைபெறுகிறது. இதில், 192 நாடுகள் பங்கேற்கின்றன.
- இந்த கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின், 'பிர்தர்ஸ்' குழுவும் பங்கேற்றது. இந்த இசைக்குழுவில் 23 நாடுகளை சேர்ந்த 50 பெண் இசைக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.
செப்டம்பரில் ஜிஎஸ்டி ரூ.1.17 லட்சம் கோடி வசூல்
- நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் ரூ.1.17 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாகும். இத்துடன் சேர்த்து, தொடர்ந்து 3வது மாதமாக, ஜிஎஸ்டி வசூல் ஒன்றிய அரசின் இலக்கான ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- மத்திய ஜிஎஸ்டி ரூ.20,578 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.26,767 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.60,911 கோடி அடங்கும். மேலும் செஸ் வரியாக ரூ.8,754 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் ரூ.623 கோடி அடங்கும்.
- ஒன்றிய அரசின் கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில், தமிழகத்தில் இருந்து மட்டும் ரூ.7,842 கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலான ரூ.6,454 கோடியை விட 21 சதவீதம் அதிகம்.
- இதுபோல், டெல்லியில் ரூ.3,605 கோடி (15% அதிகம்), புதுச்சேரி 160 (8%), கர்நாடகா ரூ.7,783 கோடி (29%), மகாராஷ்டிரா ரூ.16,584 கோடி (22%) கேரளா ரூ.1,764 கோடி (14%) வசூல் ஆகியுள்ளது. முந்தைய ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் பீகாரில் 12%, டாமன் டையூவில் 99%, லட்சத்தீவுகளில் 51% வரி வசூல் குறைந்துள்ளது.
நகரங்களில் குப்பைகளை அகற்ற தூய்மை இந்தியா திட்டம் 2.0
- காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நகரங்களை குப்பை இன்றி சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புறம் 2.0' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- 'தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புறம் 2.0', இந்தியாவை நகரமாயமாகும் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான பாதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
- மேலும், 2030ம் ஆண்டில் நிலையான வளர்ச்சி என்ற இலக்கை நாடு அடைவதற்கும் இது பெரியளவிலான பங்களிப்பை வழங்கும். அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாதவையாக மாற்றுவதும், அனைத்து நகரங்களிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இதன் மூலமாக நகர்ப்புறங்களில் பாதுகாப்பான சுகாதார இலக்கை எட்ட முடியும். இத்திட்டம் ரூ.1.41 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும்.
- கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் 'அம்ருத் 2.0' என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.மேலும் இத்திட்டத்தின் கீழ், 4,700 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2.68 கோடி குழாய் இணைப்புகள் மூலமாக 100 சதவீதம் சுத்தமான தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2.87 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையை உலகத் தர நகராக்கும் திட்டம் தமிழகத்துக்கு உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் உதவி
- சென்னை நகரத்தை மக்கள் ஆரோக்கியமாக வாழக் கூடிய, பருவநிலை மாற்ற பாதிப்புகளை சந்திக்கும் வகையில், பசுமை நிறைந்த அழகிய, உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ரூ.1,112 கோடி கடன் வழங்க, உலக வங்கி முன் வந்துள்ளது.
- இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக, உலக வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது
- சென்னை வடக்கு மத்திய புலனாய்வு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் குமார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி, முசிறி காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுகிறது.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது இந்திய ஆடவர் அணி
- கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 2021 ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றுள்ளது.
- சத்தியன் ஞானசேகரன், சரத் கமல், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி மற்றும் மானவ் தக்கார் ஆகிய வீரர்கள் அடங்கிய அணி இந்த பதக்கத்தை வென்றது.
- இதன் மூலம் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 1976-க்கு பிறகு முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வீரர்களை பாராட்டி உள்ளது.