பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு
- பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழாவில் சிறந்த திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் கொடியங்குளத்தில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறல்கள் மையமாக வைத்து உருவாகி இருந்தது.
- இதே விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை இதுவரை திரையரங்கில் வெளியாகாத கட்டில் திரைப்படம் பெற்றது.
உபர் & தாமஸ்-உபர் பாட்மின்டன் 2021
- டென்மார்க்கில், தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டன் நடந்தது. பெண்களுக்கான உபர் கோப்பை பைனலில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய சீன அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 15வது முறையாக கோப்பை வென்றது.
- சீனா சார்பில் ஒற்றையரில் ஹீ பிங் ஜியாவோ வெற்றி பெற்றார். இரட்டையரில் குயிங் சென், யி பான் ஜியா மற்றும் டாங் பிங் ஹுவாங், வென் மெய் லி ஜோடி வெற்றி பெற்றன.
- 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ஜப்பான் அணிக்கு அகானே யமகுச்சி வெற்றி பெற்று ஆறுதல் தந்தார்.ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பைனலில் சீனா, இந்தோனேஷியா அணிகள் மோதின. இதில் இந்தோனேஷியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 14வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்ய திட்டம் - நாசா அறிமுகப்படுத்தியிருக்கும் லூசி
- நாசா சார்பில், அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியின் கேப் கேனவெரால் விமானப் படை நிலையத்தில் இருந்து `லூசி' என்று பெயர் சூட்டப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- இதனை `அட்லஸ் வி' என்ற ராக்கெட் விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ராக்கெட்டை போயிங் நிறுவனமும், லாக்ஹீட் மார்டின் கார்ப் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
- லூசியின் செயல்திட்டம் என்பது அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பல்வேறு எண்ணிக்கைகளிலான விண்கல்களை ஆய்வு செய்வதாகவும். வியாழன் கிரகத்தின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் இருந்து சூரியனை வலம் வரும் `ட்ரோஜன்' என்றழைக்கப்படும் மிகப்பெரிய கற்களின் கூட்டம் குறித்து முதல் முறை ஆய்வு செய்யப் போவது லூசி விண்கலம் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
- சுமார் 225 கிலோமீட்டர் விட்ட அளவு கொண்டவை என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ட்ரோஜான் விண்கற்களின் பெயர் கிரேக்கப் புராணங்களில் இருந்து சூட்டப்பட்டது.
- இந்த விண்கற்களில் கார்பன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பூமியில் உயிர் தோன்றியது குறித்து புதிய பரிமாணங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- நமது சூரியக் குடும்பத்தின் முக்கிய விண்கற்களின் இடமான டொனால்ட் ஜொஹான்சன் என்ற பகுதியையும் லூசி ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
- வரலாற்றின் முதல் மனிதரின் படிமம் 1974ஆம் ஆண்டு எதியோபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு `லூசி' என்று பெயர் சூட்டப்பட்டது. அதே பெயர் இந்தத் திட்டத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது.