ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் நியமனம்
- ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. கரண்சிங் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதியுடன் முடிந்தது.
- இதையடுத்து புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியது. ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
- உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை, புதுச்சேரி மகாத்மா காந்தி பட்டமேற்படிப்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் நிர்மா ஓசா, எழுத்தாளர்அரவிந்தன் நீலகண்டன், மேற்கு வங்க பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் கோஷல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மேலும், ஐதராபாத் பல்கலைக்கழக தலித் ஆதிவாசி துறைத்தலைவர் சர்ராஜூ, கர்நாடக பல்கலைக்கழக அரசியல் அறிவியல் படிப்புத்துறை பேராசிரியர் நந்தன கவுரப்பா பசப்பா மற்றும் கல்வி அமைச்சகத்தின் 2 செயலர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தலை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ரஞ்சித் வி.மோரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சி.சர்மாவை தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இமாசல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.மலிமத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ் அஸ்வதியை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும், நீதிபதி பிரசாந்த்குமார் மிஷ்ராவை ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி அரவிந்த்குமாரை குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்றம் கொலிஜீயம் பரிந்துரைத்தது.
- மேலும் 5 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்யவும் கொலிஜீயம் பரிந்துரை செய்தது. ஆந்திரபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரூப்குமாரை சத்தீஷ்கார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்தியபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது ரபிக்கை இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷியை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜீத் மகந்தியை திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்வந்த் சோமாதீரை சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜீயம் ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.
- இவற்றுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேற்கண்ட நியமனங்களை செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் நிறைவு - 40 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
- பெரு தலைநகா் லிமாவில் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணியினா் ஆதிக்கம் செலுத்தி வந்தனா். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரா், வீராங்கனைகளே பதக்கம் வென்றனா்.
- குறிப்பாக ஜூனியா் ஆடவா் 25 மீ. ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் விஜயவீா் சித்து தங்கம், உதய்வீா் சித்து வெள்ளி, ஹா்ஷ்குப்தா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினா்.
- மகளிா் பிரிவில் ரிதம் சாங்வான் தங்கமும், நிவேதிதா நாயா் வெள்ளியும், நாமியா கபூா் வெண்கலமும் வென்றனா்.
- 50 மீ பிஸ்டல் ஆடவா் பிரிவில் அா்ஜுன் சிங் சீமா தங்கப் பதக்கத்தையும், ஷௌா்யா சரீன் வெள்ளியையும், அஜிஹிங்கியா சவான் வெண்கலமும், மகளிா் பிரிவில் ஷிகா நா்வால், ஈஷா சிங், நவ்தீப் கௌா் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தை கைப்பற்றினா்.
- ஒட்டுமொத்தமாக 16 தங்கம், 15 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
- அமெரிக்கா 7 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம் என 21 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், இத்தாலி, பிரான்ஸ், ஜொமனி அதற்கடுத்த இடங்களையும் பெற்றன.