Type Here to Get Search Results !

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட 'மாசுக்காற்று வெளியீட்டு இடைவெளி' குறித்த அறிக்கை / Report on the 'Pollution Emission Gap' published by the United Nations Environment Program


TAMIL
  • காலநிலை மாற்றம் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மரபுசார் எரிபொருள் தேவையைக் குறைத்து காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் முயன்று வருகின்றன.
  • எனினும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு உலக நாடுகள் திரும்புவது ஒப்பீட்டளவில் மிகக்குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்க உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட 'மாசுக்காற்று வெளியீட்டு இடைவெளி' குறித்த அறிக்கை உலக நாடுகளின் கண்துடைப்பு நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது.
  • உலக நாடுகள் அனைத்தும் இதுவரை ஒப்புக்கொண்டுள்ள அளவுகளை கணக்கிட்டால் 2030-ல் வெறும் 7.5% அளவு மாசுக்காற்று மட்டுமே குறைக்கப்பட்டிருக்கும். 
  • இதன்மூலம் புவியின் வெப்பநிலையில் 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். அதுவும் கூட அந்த வாக்குறுதிகளை உலக நாடுகள் உண்மையாக செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்கிறது ஐநாவின் புதிய அறிக்கை.
  • காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உலக நாடுகளில் இதுவரை ஒப்புக்கொண்டுள்ள அளவைப் போன்று 7 மடங்கு அதிகமாக மாசுக்காற்றை குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். அதையும் கூட சொன்னவாறு செயல்படுத்த வேண்டும். ஆனால், இவையெல்லாம் நடக்கும் என்பதற்கான நம்பிக்கை ஒளி இன்னமும் தென்படவே இல்லை.
  • அதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
  • இதில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா 4800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து 1860 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் 580 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் மூன்றாவது இடத்திலும், பிரிட்டன் 430 கோடி முதலீட்டுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. மாற்று எரிசக்தி உற்பத்தியை நோக்கி உலகம் நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடுத்தபடியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது.
ENGLISH
  • Climate change is intensifying day by day like never before. The nations of the world are trying to take action against climate change by reducing the demand for conventional fuels. However, the return of the world to renewable fuel technology is relatively low. The climate change summit is set to begin in Glasgow on Sunday.
  • The United Nations Environment Program (UNEP)'s report on the 'emissions gap' has exposed the world's discovery drama. Pollution would have been reduced by just 7.5% by 2030 if all the nations of the world had agreed on the levels so far.
  • This causes the Earth's temperature to rise by 2.7 degrees Celsius. That too is possible only if the nations of the world truly implement those promises, says a new UN report. If we want to control climate change, we must agree to reduce pollution by 7 times as much as the nations of the world have agreed to.  That too must be implemented as told. But the light of hope for all this is yet to come.
  • This was followed by a report on renewable energy investments against climate change between 2016 and 2021. The United States and China are leading the way. The United States tops the list with an investment of US $ 48 billion followed by US $ 18.6 billion.
  • It is followed by Sweden in third place with an investment of US $ 580 billion and the UK in fourth place with an investment of US $ 430 crore. India ranks 9th in the list as the world is forced to move towards alternative energy production. India ranks 9th with an investment of US $ 100 crore, next to France, Germany, Canada, the Netherlands and Singapore.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel