Type Here to Get Search Results !

TNPSC 26th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஹாக்கியில் கோப்பை வென்றது தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை
  • ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், தெற்கு, வடக்கு, மேற்கு ரயில்வே உட்பட, 8 மண்டலங்களை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் இடையே ஹாக்கி போட்டி நடந்தது.
  • இதில் சிறப்பாக செயல்பட்ட தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையினர், இறுதிப் போட்டியில், வடக்கு ரயில்வே அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பை வென்றனர்.
ஜி20 மாநாடு
  • ஜி20 நாடுகளின் 16-வது மாநாடு (16th G20 Summit - Rome, Italy), இத்தாலி தலைநகர் ரோமில் அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
  • சர்வதேச நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜி20 நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. 
  • பிரதமர் மோடி பங்கேற்கும் எட்டாவது ஜி20 நாடுகள் மாநாடு இதுவாகும். 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு .இந்தியா தலைமை வகிக்கவுள்ளது.
  • பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற செயல் திட்ட மாநாடு (World Leaders' Summit of COP26 to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) வரும் அக்டோபர் 31 தொடங்கி நவம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
  • கடந்த 2015-ல் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. 
விக்ராந்த் போர்க் கப்பல் 2-ஆம் கட்ட சோதனை 
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போர்க் கப்பலான (India's first Indigenous Aircraft Carrier (IAC)) "ஐஎன்எஸ் விக்ராந்த்" (INS Vikrant) கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கியது. 
  • இந்த போர்க் கப்பலானது, கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ரூ.23,000 கோடி செலவில், 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரத்தில் 40,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவிடம் தற்போது "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா" (INS Vikramaditya) என்ற ஒரே ஒரு விமானந்தாங்கி போர்க் கப்பல்தான் உள்ளது.
அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில்முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திறந்து வைக்கிறார்
  • புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில்முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அக்டோபர் 29 அன்று திறந்து வைக்கிறார்.
  • ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம் எனும் மையக்கருத்தோடு கொண்டாடப்படும் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • ஆயுஷ் துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கு அக்டோபர் 30 அன்று நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத துறை பிரதிநிதிகள் இதில் பங்கேற்பாளர்கள்.
  • இத்துறையில் புது யுக நிறுவனங்களை உருவாக்குவதற்காக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் மையம் ஒன்று நிறுவப்படும். 16 வயது வரையிலான குழந்தைகளுக்காக அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் பெட்டகம் ஒன்று நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தபப்டும். ஆயுர்வேத உணவு கண்காட்சி நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
உதான் திட்டத்தின் கீழ் ஷில்லாங் – திப்ருகர் வழித்தடத்தில் முதல் நேரடி விமானம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்
  • ஷில்லாங் – திப்ருகர் இடையே முதல் நேரடி விமானப் போக்குவரத்தை மத்திய விமானப் போக்குவர்த்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். 
  • இந்நிகழ்ச்சியில் விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், இத்துறை செயலாளர் ராஜீவ் பன்சால், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 
இந்தியா - இங்கிலாந்து முதல் ட்ரை சர்வீஸ் பயிற்சி - 'கொங்கன் சக்தி 2021' 
  • இந்தியா மற்றும் யுனைடெட் கிங்டம் (யுகே) ஆயுதப் படைகளுக்கு இடையிலான முதல் முப்படைப் பயிற்சி 'கொங்கன் சக்தி 2021' இன் கடல் கட்டம் கொங்கன் கடற்கரையில் அரபிக்கடலில் நடைபெறுகிறது. 
  • துறைமுக திட்டமிடல் கட்டத்தின் முடிவில், பயிற்சியின் கடல் கட்டம் அக்டோபர் 24, 2021 அன்று தொடங்கியது. இது அக்டோபர் 27, 2021 வரை தொடரும்.
  • முன்னதாக நியமிக்கப்பட்ட தளத்தில் இராணுவ தரைப்படைகளை தரையிறக்க கடல் கட்டுப்பாட்டை அடைவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து பங்கேற்பு பிரிவுகளும் இரண்டு எதிரெதிர் படைகளாக பிரிக்கப்பட்டன. 
  • மேற்கத்திய கடற்படையின் கொடி அதிகாரி தலைமையில் ஒரு படையானது ஐஎன்எஸ் சென்னை, இந்திய கடற்படையின் மற்ற போர்க்கப்பல்கள் மற்றும் ராயல் கடற்படையின் வகை 23 போர்க்கப்பலான எச்எம்எஸ் ரிச்மண்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. 
இந்திய பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது
  • இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.
  • இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை” என்பது இந்த வருட மாநாட்டின் மையக்கருவாகும்.
  • பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சர் மாநாட்டில் உரையாற்றவுள்ளனர். பல்வேறு அமர்வுகளுக்கும் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய-பசிபிக் கடல்சார் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் மாற்றங்கள் குறித்த விரிவான விவாதத்திற்கான தளத்தை இந்த கூட்டத்தின் மூலம் இந்திய கடற்படை மற்றும் தேசிய கடல்சார் அமைப்பு தொடர்ந்து வழங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel