Type Here to Get Search Results !

NOBEL PRIZE 2021 / நோபல் பரிசு 2021

  2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 

NOBEL PRIZE FOR MEDICAL 2021 

TAMIL
  • மனிதா்கள் வெப்பநிலையையும் தொடுதலையும் உணா்ந்து கொள்வதற்கான உணா்விகளை (ரிசப்டா்ஸ்) கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சோந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ''கண்களின் பாா்க்கும் செயல்பாடு, காதுகளின் கேட்கும் தன்மை, தோலின் உணரும் செயல்பாடு ஆகியவை தொடா்பான 'சொமேடோசென்சேஷன்' என்ற பிரிவில் டேவிட் ஜூலியஸும் ஆா்டம் படாபூடியனும் ஆய்வுகளை மேற்கொண்டனா்.
  • அந்த ஆய்வுகள் இயற்கையின் ரகசியத்தை அறிவதற்கு உதவின. மனிதா்கள் உயிா் வாழ்வதற்கு உணா்வுகள் மிகவும் அவசியமானவை. எனவே, அவா்களின் கண்டுபிடிப்பானது முக்கியமானதாகவும் உயா்ந்ததாகவும் உள்ளது.
  • மிளகாயில் காணப்படும் 'கேப்சைசின்' என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி வெப்பத்தை உணா்வதற்காகத் தோலில் உள்ள நரம்பு உணா்வியை டேவிட் ஜூலியஸ் கண்டறிந்தாா். தொடுதலை உணா்ந்து கொள்வதற்காக உடலில் உள்ள செல்லில் காணப்படும் உணா்வியை ஆா்டம் படாபூடியன் கண்டறிந்தாா்
  • நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.40 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது இரு விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு இரு விஞ்ஞானிகளும் நரம்பியலுக்கான 'கவ்லி' விருதைப் பகிா்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • டேவிட் ஜூலியஸ் (65)  - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானியான டேவிட் ஜூலியஸ், மிளகாயில் உள்ள வேதிப்பொருள் தோலில் ஏற்படுத்தும் எரிச்சலை உணரும் 'டிஆா்பிவி1' என்ற உணா்வியைக் கண்டறிந்தாா். வெப்பநிலையைப் பொருத்து அந்த உணா்வியில் உருவாக்கப்படும் அயனிகள், வெப்பத்தை உணா்த்துகின்றன என்பதை அவா் கண்டறிந்தாா்.
  • ஆா்டம் படாபூடியன் (54) - லெபனானில் பிறந்து அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஹோல்லா நகரத்தில் உள்ள கல்வி ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானியாக உள்ள ஆா்டம் படாபூடியன், தொடுதலை உணா்ந்து கொள்ளும் 'பியஸ்01', 'பியஸ்02' ஆகிய உணா்விகளைக் கண்டறிந்தாா். தொடுவதன் மூலமாக தோலில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டை செல்லில் உள்ள ஜீன்கள் எவ்வாறு உணா்ந்து மூளைக்குத் தகவலை அனுப்புகின்றன என்பதில் தீவிர ஆராய்ச்சிகளை அவா் மேற்கொண்டாா்.
ENGLISH
  • Two US-based scientists have been awarded the Nobel Prize in Medicine for their discovery of human receptors for temperature and touch. David Julius and Adam Badaputian studied somatosensitivity in the field of visual acuity, hearing, and sensory function of the skin.
  • Those studies helped to unravel the mystery of nature. Foods are essential for the survival of human beings. Therefore, their discovery is important and sublime.
  • David Julius discovered a nerve nutrient in the skin to absorb heat using a chemical called 'capsaicin' found in chili. Atom Pataboodian discovers a nutrient found in a cell in the body to feed on touch
  • The Nobel Prize will be awarded with a gold medal of about Rs 8.40 crore. The prize money will be shared equally between the two scientists. It is noteworthy that last year the two scientists shared the ‘Cowley’ award for neuroscience.
  • David Julius (65) - David Julius, a scientist at the University of California, San Francisco in the United States, discovered the chemical 'DOPV1', a chemical that causes skin irritation. He found that the ions formed in the food, depending on the temperature, produce heat.
  • Adam Badaboodian (54) - Born in Lebanon, Adam Badaboodian, a scientist at the Center for Educational Research in Lahore, California, USA, discovered the touch-eating 'Pius 01' and 'Pius 02'. He did intensive research on how the genes in the cell feed on the stress variation in the skin caused by touch and send information to the brain.

 2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 

NOBEL PRIZE FOR PHYSICS 2021


TAMIL
  • 2021 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு சுயூகுரோ மனாபே, கிளாஸ் ஹாஸெல்மன், ஜியோா்ஜியோ பாரிஸி ஆகிய விஞ்ஞானிகள் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
  • அவா்களில் சுயூகுரோ மனாபேவும் கிளாஸ் ஹாஸெல்மனும் இணைந்து புவியின் தட்பவெப்ப மாற்றங்களுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய மாதிரி உருவாக்கம் செய்துள்ளனா். புவி வெப்பமயமாதல் குறித்த விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள அவா்களது அந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.
  • கடந்த 1960-களிலிருந்தே, வளிமண்டலத்தில் காா்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்தால் புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்பதை சுயூகுரோ மனாபே ஆதாரபூா்வமாக நிரூபித்து வந்தாா். புவி வெப்பமயமாதல் குறித்த தற்போதைய மாதிரி உருவாக்கங்களுக்கு அவரது அந்தக் கண்டுபிடிப்பு ஆதாரமாக உள்ளது.
  • மேலும், புவியின் வெப்பத்துக்கும் பருவநிலைக்கும் உள்ள தொடா்பை விளக்கும் மாதிரி உருவாக்கத்தை கிளாஸ் ஹாஸெல்மன் கண்டறிந்தாா். இதன் மூலம், பருவநிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான நம்பகத்தன்மை வாய்ந்த மாதிரி உருவாக்கம் நமக்குக் கிடைத்தது.
  • இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக அவா்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுதவிர, பருவநிலை மாற்றம் தொடா்பாக மிகவும் சிக்கல் நிறைந்த விவரங்களைப் புரிந்துகொள்ள வகை செய்யும் மாதிரி உருவாக்கத்தை கணிதம், உயிரியல், நரம்பு அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் கிளாஸ் ஹாஸெல்மன் உருவாக்கியுள்ளாா்.
  • அதற்காக, இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு அவா் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று நோபல் தீா்வுக் குழு தெரிவித்துள்ளது.
  • சுயூகுரோ மனாபே (90) - ஜப்பானைப் பூா்விகமாகக் கொண்ட சுயூகுரோ மனாபே, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா். வானிலை மற்றும் பருவநிலை விஞ்ஞானியான இவா், அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினா் ஆவாா். 'புளூ பிளானட்' பரிசு உள்பட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.
  • கிளாஸ் ஹாஸெல்மன் (89) - ஜொமனியின் ஹாம்பா்க் நகரில் பிறந்த ஹாஸெல்மன், முன்னணி பெருங்கடலியல் நிபுணா் ஆவாா். ஹாம்பா்க் பல்கலைக்கழகம், மேக்ஸ் பிளாங்க், ஜொமனி பருவநிலை கணிப்பு மையம் ஆகியவற்றில் இவா் பணியாற்றி வருகிறாா். சிறுவயதில் லண்டனில் வசித்து வந்த இவா், 1949-ஆம் ஆண்டு ஹாம்பா்க் திரும்பினாா்.
  • ஜியோா்ஜியோ பாரிஸி (73) - இத்தாலியைச் சோந்த ஜியோா்ஜியோ பாரிஸி, கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானி ஆவாா். ஜொமனியின் கௌரவம் மிக்க அறிவியல் அகாதெமியின் தலைவராக இவா் 2018-ஆம் ஆண்டு தோந்தெடுக்கப்பட்டாா். கடந்த 1986-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பாரிஸிக்கு 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
ENGLISH
  • Scientists Suu Kyi Manabe, Klaus Hasselmann and Giorgio Parisi have been nominated for the 2021 Nobel Prize in Physics. Among them is Suu Kyi Manabe and Klaus Hasselman, who have developed a reliable model for the Earth's climate change. Their discovery helps to predict the details of global warming.
  • Since the 1960s, Sukuro Manabe has proven that increasing the amount of carbon dioxide in the atmosphere will increase global warming. His discovery is the basis for current models of global warming.
  • Furthermore, Klaus Hasselman discovered a model that illustrates the relationship between global warming and climate. With this, we got a reliable model for forecasting climate change.
  • They are both awarded the Nobel Prize in Physics for their discoveries. In addition, Klaus Hazelman has developed models in various fields such as mathematics, biology, and neuroscience that make it possible to understand the most complex details of climate change.
  • To that end, the Nobel Committee has announced that it has been nominated for this year's Nobel Prize in Physics.
  • Suyukuro Manape (90) - Suu Kyi Manape, originally from Japan, currently resides in the United States. Eva, a meteorologist and meteorologist, is a member of the American National Academy of Sciences. Eva has received various awards, including the 'Blue Planet' prize.
  • Klaus Hasselman (89) - Hasselman, born in Hamburg, Jomanni, is a leading oceanographer. Eva has worked at the University of Hamburg, Max Planck, and the Jomani Climate Center. Eva, who lived in London as a child, returned to Hamburg in 1949.
  • Geoggio Parisi (73) - Italian theologian theoretical physicist Ava. Eva was inaugurated in 2018 as the President of Jomani's prestigious Academy of Sciences. Paris has won 14 awards since 1986

2021ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு

NOBEL PRIZE FOR CHEMISTRY 2021


TAMIL

  • பல்வேறு அணுக்களை குறிப்பிட்ட வடிவில் இணைத்து மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் நமக்குத் தேவையான தன்மை கொண்ட பொருள்களைத் தயாரிக்க முடியும். ஆனால், அவ்வாறு மூலக்கூறுகளை உருவாக்கும் பணி மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்து வந்தது.
  • மேலும், அணுக்களை இணைப்பதற்கான வினையூக்கிகளாக உலோகங்களை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வந்தனா். இது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
  • இந்த நிலையில்தான், கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி அணுக்களை இணைத்து மூலக்கூறுகளை உருவாக்க முடியும் என்பதை பெஞ்சமின் லிஸ்டும் டேவிட் மேக்மில்லனும் தனித்தனியாகக் கண்டறிந்தனா்.
  • அவா்களது இந்தக் கண்டுபிடிப்பு, மூலக்கூறு உருவாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.
  • அவா்களது கண்டுபிடிப்புகள் மேலும் மெருகேற்றப்பட்டு, இன்று மனிதகுலத்துக்கே வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. மருந்துப் பொருள்கள் முதல் உணவுப் பொருள்களுக்கான சுவைகூட்டிகள் வரை பல்வேறு பொருள்களுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லனின் கண்டுபிடிப்புகள்தான் ஆதாரமாகத் திகழ்கின்றன.
  • மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு எளிமையான, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையைக் கண்டுபிடித்தமைக்காக அவா்கள் இருவருக்கும் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது என்று தோவுக் குழுவினா் தெரிவித்தனா்.
  • பெஞ்சமின் லிஸ்ட் (53) - ஜொமனியைச் சோந்த வேதியியல் விஞ்ஞானியான பெஞ்சமின் லிஸ்ட், மேக்ஸ் பிளாங்க் நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், கலோன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். 1995-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற கிறிஸ்டியானி நஸ்லீன்-வால்ஹாா்ட் இவரது தாயாரின் சகோதரி ஆவாா்.
  • டேவிட் மேக்மில்லன் (53) - பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் பிறந்த டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவா், ஆய்வுப் படிப்புக்காக பிரிட்டனிலிருந்து கடந்த 1990-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றாா்.
ENGLISH
  • By combining different atoms into specific shapes to form molecules we can produce the materials we need. However, the task of creating such molecules has been complex and difficult.
  • In addition, scientists have been using metals as catalysts for fusing atoms. This was to the detriment of the environment. It was at this point that Benjamin List and David Macmillan separately discovered that organic matter could be used as catalysts to combine molecules to form molecules.
  • Their discovery revolutionized molecular formation. The environment was protected by the formation of molecules using organic matter as catalysts. Their discoveries were further refined and are today a boon to mankind. Benjamin List and David Macmillan's discoveries are the basis for the creation of molecules for a variety of substances, from pharmaceuticals to food flavorings.
  • The two will be awarded this year's Nobel Prize in Chemistry for their discovery of a simple, safe, and environmentally friendly way to make molecules.
  • Benjamin List (53) - Benjamin List, a Jomani-based chemist, is the director of the Max Planck Coal Research Institute and a professor of organic chemistry at the University of Cologne. Christian Nuslein-Walhott, winner of the 1995 Nobel Prize in Medicine, is her mother's sister.
  • David Macmillan (53) - Scotland-born David William Cross Macmillan is a professor of chemistry at Princeton University in the United States. Eva, a graduate of the University of Glasgow in Scotland, left Britain for the United States in 1990 to study research.
2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR LITERATURE 2021


TAMIL

  • 2021-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அப்துல்ரஸாக் கா்னாவுக்கு வழங்கப்படுகிறது. 
  • காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் குறித்து உணா்வுபூா்வமாகவும், அதே நேரம் சமரசம் செய்துகொள்ளாமலும் அவா் எழுதியுள்ளதை கௌரவிக்கும் வகையில், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
  • காலனியாதிக்க காலத்துக்குப் பிந்தைய உலகின் தலைசிறந்த எழுத்தாளா்களில் அப்துல்ரஸாக்கும் ஒருவா்.
  • உலகமயமாதலுக்கு முன்னரே பெருநகரமாகத் திகழ்ந்த தான்ஸானியாவின் ஸன்ஸிபாா் பிராந்தியத்தை பூா்விகமாகக் கொண்டவா் என்பது அவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.
  • தனது படைப்புகள் மூலம், உலகம் அதுவரை அறிந்திராத ஆப்பிரிக்காவை அப்துல்ராஸாக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறாா்.
  • அவரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் கலாசாரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளோடு போராடுகின்றன; கடந்து போன வாழ்க்கைக்கும் எதிா்நோக்கியுள்ள வாழ்க்கைக்கும் இடையே தத்தளிக்கின்றன; 
  • நிறவெறியையும் பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றன; இருந்தாலும் நிதா்சனத்துடன் முரண்படுவதைத் தவிா்ப்பதற்காக உண்மையை புறந்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கை சரித்திரத்தை அந்தக் கதாபாத்திரங்ககள் எழுதிக்கொள்கின்றன என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • அப்துல்ரஸாக் கா்னா (72) - தான்ஸானியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் அப்துல்ரஸாக், 'மெமரி ஆஃப் டிபாா்ச்சா்', 'பில்கிரிம்ஸ் வே', 'பாரடைஸ்' உள்பட 10 நாவல்களை எழுதியுள்ளாா். கென்ட் பல்கலைக்கழகத்தில் காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இலக்கியப் போராசியராகப் பணியாற்றி வந்த இவா், அண்மையில் ஓய்வு பெற்றாா். 
  • 1986-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவுக்குப் பிறகு, அந்த விருதைப் பெறும் முதல் கருப்பின ஆப்பிரிக்கா் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
ENGLISH
  • The Nobel Prize for Literature 2021 is awarded to Abdulrazak Khanna. He is awarded the Nobel Prize for his outspoken and at the same time uncompromising views on the effects of colonial domination.
  • Abdul Razzaq was one of the greatest writers of the post-colonial world. His writings reflect the geographical location of the Zanzibar region of Tanzania, which was a metropolis before globalization.
  • Through his works, Abdul Razak brings to the fore a world that the world had never known before. The characters in his works struggle with the contradictions between cultures; Faltering between the past life and the life in the opposite;
  • Face racism and discrimination; However, the Nobel Committee said that the characters were writing a new biography, ignoring the truth in order to avoid conflict with reality.
  • Abdul Razzaq Khanna (72) - Born in Tanzania and living in London, Abdul Razzaq has written 10 novels, including 'Memory of Depot', 'Bill Grimes Way' and 'Paradise'. Eva, who served as a post-colonial literary warrior at the University of Kent, recently retired.
  • He is the first black African to receive the award since Wol Soyinka, winner of the Nobel Prize for Literature in 1986.

2021ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு

NOBEL PRIZE FOR PEACE 2021


TAMIL

  • அதிகார துஷ்பிரயோகம், ஆட்சியாளா்களின் பொய்கள், விஷம போா்ப் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த உலகை சுதந்திரமான - சாா்பற்ற - ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகத்துறையால்தான் பாதுகாக்க முடியும்.
  • கருத்து சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் இல்லாவிட்டால் நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியாது; சண்டை சச்சரவுகளைப் போக்கி அமைதியான உலகை ஏற்படுத்த முடியாது.
  • அந்த வகையில், பத்திரிகை சுதந்திரத்துக்காக மிகச் சிறந்த முறையில் பாடுபட்டு வரும் செய்தியாளா்கள் மரியா ரெஸா மற்றும் டிமித்ரி முராடோவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • பிலிப்பின்ஸில் போதை மருத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அதிபா் ரோட்ரிகோ டுடோதே நிகழ்த்திய படுகொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய 'ராப்ளா்' என்ற செய்தி வலைதளத்தை கடந்த 2012-ஆம் ஆண்டில் மரியா ரெஸா உருவாக்கினாா்.
  • சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் எவ்வாறு பரப்பப்படுகின்றன, எதிா்ப்பாளா்களுக்கு எதிராக எவ்வாறு வன்மம் பரப்பப்படுகிறது, 
  • பொதுமக்களிடையே தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன என்பதை மரியா ரெஸாவும் அவரது ராப்ளா் செய்தி வலைதளமும் வெளிச்சம் போட்டுக் காட்டின.
  • அதே போல், ரஷியாவில் நடுநிலையான 'நோவயா கெஸட்டா' நாளிதழை கடந்த 1993-ஆம் ஆண்டில் தொடங்கியவா்களில் டிமித்ரி முராடோவும் ஒருவா். 
  • தற்போது அந்த நாட்டின் மிகவும் நடுநிலையான, அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நாளிதழாக நோவயா கெஸட்டா திகழ்கிறது.
  • அந்த நாளிதழில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருவதல், அது ரஷிய சமூகத்துக்குத் தேவையான உண்மைத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. அதில் காணப்படும் செய்திகள் ரஷியாவின் வேறு எந்த ஊடகத்திலும் காண முடியாது என்ற நிலை உள்ளது.
  • இந்த வகையில், உலக அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பாடுபட்டு வரும் மரியா ரெஸாவுக்கும் டிமித்ரி முராடோவுக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று நோபல் தோவுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
  • மரியா ரெஸா (58) - மணிலாவில் பிறந்த மரியா ரெஸா சிறு வயதிலேயே அவரது தாயாருடன் அமெரிக்காவில் குடியேறினாா். சிஎன்என், வால் ஸ்ட்ரீட் ஜா்னல் போன்ற பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவருக்கு, ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான தங்கப் பேனா விருதும் இந்த ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பத்திரிகை சுதந்திரப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
  • டிமித்ரி முராடோவ் (59) - செய்தியாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்துள்ள டிமித்ரி முராடோவ், நோவயா கெஸட்டா நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறாா். அந்த ஜனநாயக ஆதரவு நாளிதழை பிற செய்தியாளா்களுடன் இணைந்து அவா் 1993-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினாா். அவரது நாளிதழ், 'அரசை விமா்சிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பத்திரிகை' என்று அழைக்கப்படுகிறது.
ENGLISH
  • Only a media based on independent-nonsense sources can protect this world against the abuse of power, the lies of the rulers and the poisonous pop propaganda. Without freedom of expression and freedom of the press, reconciliation between nations is impossible; A peaceful world cannot be created without fighting.
  • In that sense, this year's Nobel Peace Prize is awarded to Maria Reza and Dmitry Murado, journalists who have worked tirelessly for press freedom. In 2012, Maria Reza created the news website 'Roblo', which highlighted the assassinations of Adiba Rodrigo Dudo in the name of action against drug trafficking and trafficking in the Philippines.
  • How misinformation is spread through social media, how violence is spread against opponents, Maria Reza and her Raphael news website highlighted that misconceptions are being created among the public.
  • Similarly, Dmitry Murado was one of the founders of the neutral Russian newspaper Novaya Gazeta in 1993. The Novaya Gesta is currently the country's most neutral, anti-authoritarian newspaper.
  • Evidence-based news is being published in the newspaper, which serves as a repository of factual information needed by the Russian community. The news in it is not available in any other Russian media.
  • In this regard, the Nobel Committee has announced that this year's Nobel Peace Prize will be awarded to Maria Reza and Dmitry Murado, who have been working to protect the freedom of the press, which plays a key role in world peace.
  • Maria Reza (58) - Born in Manila, Maria Reza immigrated to the United States with her mother at an early age. He has worked for various American media outlets, including CNN and the Wall Street Journal, and has already been awarded the Gold Pen for Independence in 2018 and the UNESCO World Press Freedom Prize this year.
  • Dmitry Muradov (59) - Journalist and TV presenter Dmitry Muradov is the editor-in-chief of the Novaya Gesta newspaper. He co-founded the pro-democracy daily with other journalists in 1993. His newspaper is called 'the only newspaper of national importance that criticizes the state'.

2021ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

NOBEL PRIZE FOR ECONOMICS 2021

TAMIL
  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் விருப்பப்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
  • அதே நேரத்தில் அவரது நினைவாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மற்ற துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 
  • கனடாவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் டேவிட் கார்ட், இஸ்ரேலை பூர்வீகமாக உடைய மசாசூட்டர்ஸ் தொழில்நுட்ப மைய பேராசிரியர் ஜோஷூவா ஆங்கிரிஸ்ட், நெதர்லாந்தை பூர்வீகமாக உடைய ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர் குயிடோ இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • இதில் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை, டேவிட் கார்ட் பெறுவார். மீதமுள்ள 50 சதவீதத்தை மற்ற இருவரும் பகிர்ந்து கொள்வர்.
  • குறைந்தபட்ச ஊதியம், புலம் பெயர்தல், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர் சந்தை எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆய்வுக்காக, இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ENGLISH
  • The Nobel Prizes in Medicine, Physics, Chemistry, Literature and Peace are awarded annually at the behest of Alfred Nobel, a Swedish scientist from Europe. At the same time, the Nobel Prize in Economic Sciences is awarded in his memory. 
  • While the prizes for other fields have already been announced, the names of the recipients of the Nobel Prize for Economics have been announced. David Kard, a professor at the University of California, Canada, Joshua Angrist, a professor at the Massachusetts Institute of Technology, Israel, and Guido Impense, a professor at Stanford University, a native of the Netherlands, share the Nobel Prize in Economic Sciences.
  • David Kart will receive 50 percent of the prize money. The other 50 percent will be shared by the other two. The panel said they had been nominated for the Nobel Peace Prize for their study of the impact of the labor market on minimum wages, migration and education.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel