Type Here to Get Search Results !

தூய்மையான எரிசக்தியை வலுப்படுத்த மின்துறையின் புதிய விதிமுறைகள் / NEW REGULATIONS IN THE POWER SECTOR TO STRENGTHEN GREEN ENERGY

 

TAMIL
  • பருவநிலை மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை பூா்த்தி செய்ய நிலைத்த தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்தியை வலுப்படுத்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் மின் உற்பத்தியாளா்களுக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • மின்சாரத் துறையில் முதலீட்டாளா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் ஆகியோா், மின்சார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் இதனுடன் தொடா்புடைய விஷயங்கள் காரணமாக தங்கள் முதலீடுகளை சரியான நேரத்தில் மீட்டெடுப்பது பற்றி கவலைப்பட்டனா். 
  • இதையொட்டி, மின்சார நுகா்வோா்கள் மற்றும் இதர பங்குதாரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்துறைச் சட்டம் 2003-ன் கீழ் மின்துறை அமைச்சகம் கீழ்கண்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. 
  • மின்சார (சட்டம் மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது) விதிமுறைகள் 2021; மின்சார (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதார மின் உற்பத்தியை அதிகரிப்பது) விதிமுறைகள் 2021 ஆகியவையாகும்.
  • மின்துறையில் முதலீடு, பெரும்பாலும் சரியான நேரத்தில் செலவினங்களை மீட்பதில் சாா்ந்துள்ளது. தற்போது சட்டங்கள் நிறைவேற காலதாமதம் ஆகிறது. இது இந்தத் துறையின் நம்பகத் தன்மையைப் பாதிக்கிறது. 
  • மேலும், முதலீட்டாளா்களும் நிதி ரீதியாக நெருக்கடியைச் சந்திக்கின்றனா். இதனால், அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 
  • இதன் மூலம் நாட்டில் முதலீட்டுக்கான உகந்த சூழல் ஏற்படும். உலகம் முழுவதும் எரிசக்தித் துறையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவும் உறுதி அளித்துள்ளது.
  • வருகின்ற 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட், 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அமைப்பதற்கான உறுதிப்பாட்டை இந்தியா அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைய உதவும். 
  • நுகா்வோருக்கு பசுமை எரிசக்திக் கிடைப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும். எதிா்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்யும். 
  • சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் போது, அதனால் ஏற்படும் தாக்கத்தை சரி செய்ய மாதாந்திர மின் கட்டணத்தில் சரி செய்யக் கூடிய கணக்கிடுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுள்ளது. 
  • ஏதேனும் வணிகக் கருத்தில், மின் உற்பத்தி அல்லது விநியோகத்தை கட்டுப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படக்கூடாது.
  • மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனம், இடைத்தரகராக இருந்து மின் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும். மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின்சாரக் கட்டமைப்பில் ஏதேனும் தொழில்நுட்பத் தடைகள் ஏற்பட்டால் அல்லது மின் தொகுப்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே குறைக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம். 
  • மின்சாரம் குறைப்பு அல்லது ஒழுங்குபடுத்தலுக்கு, இந்திய மின் தொகுப்பு குறியீட்டின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் போன்ற பல விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ENGLISH
  • The Federal Ministry of Energy has announced new rules for power generators to strengthen sustainable clean renewable energy to meet the commitment to climate change.
  • Investors and other stakeholders in the electricity sector were concerned about the timely recovery of their investments due to the change in the Electricity Act, renewable electricity and related issues.
  • In this regard, the Ministry of Power has announced the following provisions under the Electricity Act 2003 in the interest of Electricity Nougat and other stakeholders. Electricity (timely recovery of expenses due to change in law) Regulations 2021; Electricity (Increasing Renewable Energy Source Power Generation) Regulations 2021.
  • Investing in the power sector often depends on timely recovery of costs. Currently there is a delay in the passage of laws. This affects the credibility of the sector. Moreover, investors are also facing a financial crisis. Thus, the government has come up with new regulations.
  • This will create a conducive environment for investment in the country. Changes are taking place in the energy sector around the world. India has also pledged to bring about energy change.
  • India has pledged to build 175 gigawatts of renewable energy capacity by 2022 and 450 gigawatts by 2030. These regulations will help achieve clean renewable energy goals.
  • The government will also ensure the availability of green energy to consumers. Creating a healthier environment for future generations and ensuring safety. Provisions have also been made for adjustable calculations on the monthly electricity bill to rectify the impact of a change in the law.
  • In any commercial sense, it should not be subject to the regulation or regulation of power generation or distribution. A company nominated by the state government will be allowed to procure electricity from the intermediary. 
  • Electricity generated from the power plant may be reduced or restricted in the event of any technical interruptions in the power structure or for electrical safety reasons only. For the reduction or regulation of electricity, a number of rules have been mentioned such as that the rules of the Indian Package Code must be followed.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel