பிளாஸ்டிக் இல்லாத நகரங்கள் & பெருங்கடல்
- பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்ப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு, NITI ஆயோக் இன்று "பிளாஸ்டிக் இல்லாத நகரங்கள் மற்றும் பெருங்கடல்கள்" என்ற தலைப்பில் தேசிய கொள்கை உரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.
- 2018ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, மாண்புமிகு பிரதமர் 2022க்குள் 100% ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதியளித்தார்.
- அதன் பின்னர், இந்தியா நிர்ணயித்த இலக்குகளை அடைய தடைகள் மற்றும் தடைகள் உட்பட பல கட்டுப்பாட்டு தலையீடுகளை எடுத்துள்ளது.
- 2021 அக்டோபர் 18 முதல் 21 வரை காணொலி வாயிலாக நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் நான்காவது பொதுக்குழுக் கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும் சூரிய சக்தி கூட்டணியின் சபைத் தலைவருமான திரு ஆர் கே சிங் தலைமை வகித்தார்.
- 74 உறுப்பு நாடுகள் மற்றும் 34 பார்வையாளர் மற்றும் வருங்காலத்தில் இணையக்கூடிய நாடுகள் என மொத்தம் 108 நாடுகள், 23 பங்குதாரர் அமைப்புகள் மற்றும் 33 சிறப்பு அழைப்பாளர் அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்திற்கான துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் அக்டோபர் 20 அன்று உரையாற்றினார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு' முன்முயற்சி மற்றும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சூரியசக்தி முதலீடுகள் குறித்து இந்த வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- கோவாவில் நடைபெறவுள்ள 52வது சர்வதேச திரைப்படத் திருவிழாவில், அமெரிக்க திரைப்பட இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் ஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் இஸ்த்வான் ஸாபோ ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.
- நாட்டின் 52வது சர்வதேச திரைப்படத் திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆரோக்கியத்திற்கான மீன்கள் மற்றும் வளத்திற்கான மீன்கள்” எனும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கம்
- இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக “ஆரோக்கியத்திற்கான மீன்கள் மற்றும் வளத்திற்கான மீன்கள்” எனும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்தது.
- மத்திய மீன்வளத் துறையின் செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், வேளாண், கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழில்முனைவோர், பண்ணை உரிமையாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்திய கடற்படைக்கு எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை (டார்பிடோ) மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஆயுதங்கள் கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிக்ஸ் தலைவராக இந்தியா அக்டோபர் 22, 2021 அன்று பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்களின் 7வது கூட்டத்தை கூட்டியது. இந்திய குடியரசின் தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ தேவுசின் சவுகான், 2021 அக்டோபர் 2021 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்களின் 7வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். .
இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் இணையதளங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
- தமிழக தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, ரூ.1 லட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது.
- இந்த திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து, அவற்றைக் கண்காணிக்க,'இ-முன்னேற்றம்' என்ற இணையதளத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
- தமிழ் இணை கல்விக் கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள 'கணினி விசைப்பலகை' மற்றும் `தமிழிணையம் ஒருங்குறி மாற்றி'ஆகிய இரு தமிழ் மென்பொருள்களும், புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு `கீழடி- தமிழிணைய விசைப்பலகை' மற்றும் 'தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி'என்று பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளன.
- கீழடி-விசைப்பலகை `தமிழ் 99 விசைப்பலகை, ஒலிபெயர்ப்பு விசைப்பலகை, பழைய தட்டச்சு விசைப்பலகை' ஆகிய 3 விதமான கணினி விசைப்பலகைகளின் அமைப்பில் செயல்படும்.
- `தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென் பொருள்' வானவில் மற்றும் பிற இணைய தமிழ் எழுத்துருகளில் தட்டச்சு செய்யப்பட்ட உரைநடை, கோப்பு, ஆவணங்களை தேவைக்கேற்ப மாற்ற உதவும்.
- இந்த மென்பொருள்களை தமிழ் இணைய கல்விக் கழக இணையதளத்தில் இருந்து இலவசமாகப் (www.tamiluniv.org/uincode) பதிவிறக்கம் செய்யலாம். இந்த மென்பொருள்களின் செயல்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அப்யாஸ் விமானம் சோதனை வெற்றி
- பல்வேறு ஏவுகணைகளின் திறனை மதிப்பிடுவதற்காக, 'அப்யாஸ்' எனப்படும் ஆளில்லா அதிவேக சிறிய விமானத்தை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்தது.
- ஒடிசாவின் பாலாசோரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து கடலை நோக்கி இந்த விமானம் நேற்று சோதிக்கப்பட்டது. பல்வேறு 'சென்சார்' கருவிகளின் உதவியுடன் இந்த விமானத்தின் செயல்திறன் சோதிக்கப்பட்டது.
- இதில், 'அப்யாஸ்' அதிவேக விமான சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் பங்கேற்ற அனைவருக்கும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பாகிஸ்தானோடு "கிரே லிஸ்டில்" சேர்ந்த துருக்கி - எஃப்ஏடிஎஃப் அறிவிப்பு
- சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.
- இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளை இது தரம் பிரிக்கும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம்.
- தீவிரவாதிகளுக்கு ஒரு நாடு கொடுக்கும் ஆதரவை வைத்து கிரே லிஸ்ட், பிளாக் லிஸ்ட் என்று இது வகைப்படுத்தும். பொதுவாக இதன் கூட்டம் பாரிசில் நடக்கும்
- இந்த நிலையில்தான் 4 முறையாக நடந்த விசாரணையிலும் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் நீடிக்கும் என்று எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. 34 தீவிரவாத கட்டுப்பாட்டு விதிகளில் 4 விதிகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை.
- தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் நீடிக்கிறது.
- 4 விதிகளை பின்பற்றியது பாகிஸ்தான் கிரே லிஸ்டில் இருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் துருக்கி, ஜோர்டன், மாலி ஆகிய நாடுகள் கிரே லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
- அல் கொய்தா அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தாலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் துருக்கி கிரே லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.