TAMIL
- கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு' என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.
- நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
- கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுஉள்ளது. இது, தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக, கிராம்பில் உள்ள வாசனை திரவியங்கள் குறைந்த அளவிலேயே ஆவியாகி, அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது.
- இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
- இந்தியாவிலேயே, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால், குமரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம், கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தினரால் `கன்னியாகுமரி கிராம்பு` என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது.
- இந்தத் தனித்தன்மைக்காக, கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தரமான கிராம்பு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது'
- கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில் உற்பத்தியாகும் நெட்டை ரக தென்னைக்கு இதற்குமுன் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதுபோக, மார்த்தாண்டம் தேன், நேந்திரன் வாழை, மட்டி வாழை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டுள்ளனர்.
- The clove growing in the hills of Kanyakumari district has been given a geographical reference as `Kanyakumari clove '. Clove, an aromatic crop, is widely grown in the slopes of the Western Ghats in Tamil Nadu.
- Clove is cultivated in an area of 750 hectares in the Western Ghats of Kanyakumari district such as Maramalai, Karumpara, Velimalai and Mahendragiri. This is 73% of the total area under cloves in Tamil Nadu.
- Due to the moderate temperature prevailing in Kanyakumari district, the fragrances in the cramps evaporate in small quantities and concentrated essential oil is available. The buds, fallen leaves and stems of the clove tree are also used to make essential oils.
- In India, Kanyakumari district ranks first in the quality of cloves grown in the hills. Thus, with the help of the Kumari District Administration, the Maramalai Plantation Farmers' Association and the Karumpara Hill Farmers' Association have obtained the geographical code as `Kanyakumari Clove '.
- The total production of cramps in India is 1,100 MT. Of this, 1,000 metric tons is produced in Tamil Nadu. Kanyakumari district alone produces 750 MT. Cranberry, cultivated in Kanyakumari district of India, is rich in eugenol acetate.
- For this uniqueness, the Kanyakumari clove has got a geographical code. This ensures the availability of quality cloves to the public and businesses.
- Kanyakumari district has already got the geographical code for the tall variety of coconut produced in Ithamozhi. In addition, they have asked for geo-coding for Marthandam honey, Nendran banana and Matti banana.